( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஒவ்வொரு துளியும் நீயே !

ஒவ்வொரு துளியும் நீயே !


கொட்டும் மழையில்
கட்டிய ஆடை
உடல் முழுவதும் ஒட்டிக்கொள்ள
சொட்டச் சொட்ட நனைந்த வண்ணம்
வெட்ட வெளியில் நடந்தேன்
குடையை கொடுத்து
நடைத்துணையாக கூடவே வந்து
வீட்டில் எனை சேர்த்தாய்

பச்சை மரங்களின்
இலைகள் எல்லாம்
பனித்துளி உறைந்து மூட
கால்பாவும் மண்ணும் மறைந்து
பனிப்பாளம்  போர்வை போர்த்தி கொள்ள
ஆடையும் இன்றி
அங்கம் முழுவதும் ஒவ்வொரு கணுவும்
குளிர்ந்து வெடவெடத்து ஆட
நாதியற்ற விலங்கை போல
நாற்சந்தியில் கிடந்தேன்
பிள்ளையை போல தூக்கி அணைத்து
பாதங்களில் கதகதப்பு ஏற்றி
இதமான தேனீர் கொடுத்து
கம்பளி போர்வையில் சுற்றி
உயிர் போகாமல் வாழ வைத்தாய்

சூரியின் உச்சியில் தகிக்க
கொடிய பாலைவனத்தில்
கள்ளிச்செடியின் நிழல் கூட இன்றி
தொண்டையை எரிக்கும்
தாக கொடுமையில்
நான் தத்தளிக்கும் போது
எங்கிருந்தோ ஓடி வந்து
மடியில் கிடத்தி
தண்ணீர் கொடுத்து
பனையோலை விசிறியால்
காற்று வீசி என்னை
சாகாமல் தடுத்தாய்

பயணம் செய்த படகு கவிழ்ந்து
கட்டை ஒன்றை பற்றிய வண்ணம்
நடுகடலில் நான்
திண்டாடும் போது
வெள்ளை சிறகு முளைத்த
கப்பலில் வந்து என்னை
கரைசேர்த்து விட்டாய்

நோய்கொண்டு நான் படுத்தால்
மருந்து கொண்டு நீ வந்தாய்
பசியால் நான் துடித்தால்
விருந்து கொண்டு என்னை வளர்த்தாய்
கண்கள் தெரியாத போது
கண்ணாடியாய் வந்தாய்
ஒவ்வொரு துயர வேளையிலும்
தோன்றா துணையாய் நின்றாய்

ஐயோ ஐயோ
நானொரு முழுமை மூடன்
வெளிச்சம் இல்லாத அசடன்
தெளிவு இல்லாத கசடன்
இத்தனை வடிவில்
நீ வந்த போதும்
கிருஷ்ணா உன்னை காண்பது எப்போது?
என்று பாடிப்பாடி
வீணாய் அலைந்து மடிந்தேனே  


http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG


Next Post Next Post Home
 
Back to Top