( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

குபேர புத்தரை பயன்படுத்தலாமா?
    சீன வாஸ்துபடி செல்வம் பெருகுவதற்கு குபேர புத்தர் சிலையை வீட்டில் வைத்தால் பணப்பிரச்சனை தீருமா? 

இப்படிக்கு, 
கிருஷ்ணவேணி, 
ஜெர்மன்   திகாலத்தில் நமது சிற்பிகளால் வடிவமைக்கப்பட்ட இறைவனின் திருவுருவங்கள் எதுவும் அவர்களின் சொந்த கற்பனைகள் கிடையாது. மந்திர திருஷ்டா என்ற ஞானக்கண் பெற்ற ரிஷிகள் கண்டறிந்து வெளிபடுத்திய சப்த வடிவமான மந்திரங்களின் ரூப தோற்றங்களே இறை விக்கிரஹங்களாகும்.

கெளதம புத்தர் கடவுள் அல்ல, கடவுள் நிலையில் வைத்து வணங்க வேண்டிய ஒரு பெரிய ஞானி. அவரது உடல் அமைப்பிற்கும், அவரது ஆழமான சிந்தனைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில் பார்க்க போனால் புத்தர் ராஜ போகங்களை வேண்டாம் என்று ஒதுக்கி கடும்தவம் மேற்கொண்டவர். அவருக்கும் ஆணவத்தை தருகிற செல்வத்திற்கும் சம்மந்தமே இல்லை. 

இன்னும் சொல்வது என்றால் குபேர புத்தர் என்று காட்டப்படுகிற சிலை புத்தரின் சிலை போலவே இல்லை. சிற்ப சாஸ்திரப்படி அதன் தோற்றம் பூதங்களின் தோற்றமாகவே தெரிகிறது. எனவே அதற்கும் செல்வத்திற்கும் சம்மந்தம் இருப்பதாக என்னால் கூற முடியாது. 

சீனா பெற்றிருக்கும் ஆன்மீக செல்வங்கள் அனைத்துமே இந்தியாவிடமிருந்து பெற்றதாகும். எனவே அதில் சீன நாட்டுக்குறிய திரிபுகள் இருக்க அதிக வாய்ப்புண்டு அதனால் சீன வாஸ்து முறைகளை அவர்கள் பயன்படுத்துவது தான் சிறந்தது. அது நமக்கு தேவையற்றது என்பது என் கருத்து. 

Next Post Next Post Home
 
Back to Top