குருஜி அவர்களுக்கு வணக்கம். என் மனைவிக்கும், என் தாயாருக்கும் சண்டை என்பது ஓயவே மாட்டேன் என்கிறது. இருவரும் ஒருவரையொருவர் எலியும், பூனையுமாகத் தான் பார்த்து கொள்கிறார்கள். இவர்கள் சண்டை தீர எதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள். கண்டிப்பாக செய்கிறேன் காரணம் இவர்கள் சண்டையினால் எனக்கு மனநிம்மதி என்பதே இல்லாமல் போய்விட்டது.
இப்படிக்கு,
ராஜகோபால்,
கொடுமுடி.
மாமியார், மருமகள் சண்டை என்பது புராணகாலம் தொட்டே நடந்து வருகிறது. இந்திராகாந்தி அம்மையாரால் நாட்டை ஆள முடிந்ததே தவிர, தனது மருமகள் மேனகாகாந்தியை ஆளமுடியவில்லை. நேரு குடும்பத்திலேயே மாமியார், மருமகள் சண்டை தீரவில்லை என்றால் நம் குடும்பம் எல்லாம் எம்மாத்திரம்.
ஒருவர் ஜாதகத்தில் குரு, அல்லது சுக்கிரன் கெட்டிருந்தால் கண்டிப்பாக மாமியார் மருமகள் மத்தியில் சமாதானம் நிலவாது. சண்டை என்பது தவிர்க்க முடியதாதாகி விடும். இந்த நிலையை மாற்ற குரு மற்றும் சுக்கிரன் கிரகங்களுக்கு சொந்தமான மொட்சை பயிறு, கொண்டக்கடலை போன்ற தானியங்களை அந்தந்த கிரகங்களுக்கு படைத்து மனபூர்வமாக வழிபட வேண்டும். ஒரு மண்டலகாலம் தொடர்ந்து வழிபட்டால் பிரச்சனையின் வேகம் சற்று குறையும்.