Store
  Store
  Store
  Store
  Store
  Store

மும்மலம் என்றால் என்ன ?



மும்மலங்கள் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன?

இப்படிக்கு, 
அபினாஷ், 
லண்டன். 



    லம் என்பது கழிவு பொருள். அது தங்குகிற இடத்தில் சுகாதாரம் கெடும், நோய்கள் கூடும். நமது குடலுக்குள் மலம் தங்குமேயானால் அழைக்காமலே எல்லா நோய்களும் வந்துவிடும். வள்ளுவன் சொன்னபடி செல்வத்திற்கெல்லாம் செல்வம் செவிசெல்வமாக இருக்கலாம். ஆனால் அந்த செவிசெல்வத்தையும் பயன்படுத்தி வாழ்வதற்கு நோயற்ற வாழ்வு என்ற குறைவற்ற செல்வம் இருக்க வேண்டும் அது இல்லை என்றால் எதுவுமே இல்லை. 

எனவே நமது உடல் வாழுகிற இடத்திலும், நமது உயிர் வாழுகிற இடத்திலும் மலம் என்பது அகற்றப்பட வேண்டிய பொருளாகவே இருக்கிறது. பெளதிக உடம்பை காப்பதற்கு பெளதிக மலம் அகற்றபடுவது போல, அபெளதிக பொருளான ஆத்மா சிறப்படைய அகற்ற வேண்டிய மலமும் இருக்கிறது. 

அந்த மலத்தின் பெயர் தான் மும்மலம் என்று அழைக்கபடுகிற ஆணவம், கர்மா மற்றும் மாயை என்பதாகும். நான் தான் சிறந்தவன், மற்ற அனைவருமே தாழ்ந்தவன் என்ற ஆணவமும், தீய செயல்களால் ஏற்படுகிற தீவினை என்ற கர்மமும், பொய்யை உண்மையாக நினைத்து மயங்கி கிடக்கிற மாயையும், நம்மை இறைவன் என்ற அருட்பெரும் ஜோதியோடு இணைவதற்கு தடையாக இருக்கிறது. 

மலத்தை ஒழித்தால் ஆரோக்கியம் கிடைப்பது போல மும்மலத்தை ஒழித்தால் பிறப்பற்ற பெருநிலை தானாக கிடைக்கும் ஈஸ்வரனின் நித்திய சம்மந்தம் நம்மை அவனோடு ஐக்கியபடுத்தி நம்மையும் ஈஸ்வர சொரூபமாக ஆக்கி விடும். 




Contact Form

Name

Email *

Message *