Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாயை திருப்பி கடி !



    யா எனக்கு ஐம்பது வயது முடிய போகிறது. சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்த நான் இதுவரை துன்பத்தை தவிர வேறு எதையும் அனுபவித்ததே இல்லை. நான் மனதறிந்து யாருக்கும் எந்த தீங்கும் செய்ததும் இல்லை. நல்லவனாக வாழ்வதனாலேயே துயரங்கள் வருவதாக நினைக்கிறேன். எனவே தவறுகள் செய்தாவது கஷ்டத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாமா? என்றும் யோசிக்கிறேன் உங்களின் கருத்து என்ன? தயவு செய்து எனது கேள்வியை புறக்கணிக்காமல் பதில் தாருங்கள்.

இப்படிக்கு, 
லஷ்மிகாந்தன், 
பரமக்குடி. 


   ண்ணீர் இருக்கிறதே தண்ணீர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், கீழ் நோக்கி தான் பாய்ந்து வரும் காரணம் தன்னை உபயோகித்து பயனடைபவர்கள் மேலே இல்லை கீழே இருக்கிறார்கள் என்பதற்காக. அதே போலவே நெருப்பு எவ்வளவு அதல பாதாளத்தில் எரிந்தாலும் மேல் நோக்கி தான் எழும்பும் இது நெருப்பின் சுபாவம். 

தண்ணீரை பார்த்து நெருப்போ, நெருப்பை பார்த்து தண்ணீரோ தங்களது இயல்புகளை மாற்றி கொண்டால் உலகத்தில் விபரீதங்கள் மட்டுமே நடக்கும். அதனதன் இயல்பு படி எல்லாம் இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை.

நல்லவனாக வாழ்வது என்பதும் ஒரு இயல்பு தான். இந்த நிலையிலிருந்து ஒருபோதும் உங்களால் மாறமுடியாது. கெட்டவனாக வாழ்பவன் கூட நல்லவனாக மாற முயற்சிக்கிறானே அது ஏன்? மதுவை குடித்தால் போதை, காமத்தை கண்டாலே போதை அதே போல நல்லவனாக வாழ்வது எதற்கும் நிகர் இல்லாத போதை அந்த போதையில் விழுந்தவர்கள் தான் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம்.

எனவே துன்பத்தை கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. இன்னும் எவ்வளவு தான் கஷ்டம் வருகிறது பார்த்து விடலாமே என்று நினைக்க துவங்குங்கள். உங்கள் அருகில் வர துன்பம் கூட பயப்பட ஆரம்பித்து விடும். நாய் துரத்தினால் ஓட ஓட அது நம்மை துரத்தும் திரும்பி நின்று முறைத்து பாருங்கள் நாய் ஓட ஆரம்பித்து விடும். துயரங்களும் நாயை போன்றது தான்.




Contact Form

Name

Email *

Message *