Store
  Store
  Store
  Store
  Store
  Store

லஷ்மி கடாட்சம் கிடைக்க...   ன் ஜாதகப்படி பண பிரச்சனைகள் தீரவே தீராது என்று சொல்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் கடன்காரனாகத்தான் வாழவேண்டும் என்கிறார்கள். என் விதி அதுவென்றால் அதை நான் மாற்ற விரும்பவில்லை. கடினமான சாட்டை அடியை கூட மனத்துணிச்சலோடு ஏற்றுகொண்டால் உடம்பில் காயம் வராது என்பது என் நம்பிக்கை. அதனால் கடன்காரனாக இருந்தாலும் கூட பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கு எதாவது வழிவகைகள் உண்டா? அதை எனக்கு சொல்லி தாருங்கள் நன்றியுடையவனாக இருப்பேன். 

இப்படிக்கு, 
ராஜா சுப்பிரமணியன், 
காரைக்குடி. 


   டன் இல்லாத மனித ஜென்மம் ஏது? பெற்றகடன் தாயிடத்தில், வளர்த்த கடன் தகப்பனிடத்தில், கல்வி கற்ற கடன் குருவினிடத்தில், துணையாக வந்த கடன் சகோதரனிடத்தில், நட்பு கடன் தாலி கடன் என்று மனிதனின் கடன் பட்டியல்கள் நீண்டுகொண்டே போகும். இந்த கடன்கள் எதுவுமே இல்லை என்றாலும் இந்த நாடு நம் பெயரில் கடன் பெற்றிருக்கிறதே அதற்கு நாம் பொறுப்பேற்றே ஆகவேண்டும் அல்லவா? எனவே கடன்காரன் என்பதில் கவலை படுவதற்கு ஒன்றுமில்லை. 

உண்மையில் அட்சப்படக்கூடிய கடன் எதுவென்றால், ஒருலட்ச ரூபாய் சொத்துமட்டுமே இருக்கும் போது ஐம்பது லட்ச ரூபாய் கடன் இருந்தால் அதற்கு பயப்பட வேண்டும். பத்துலட்சம் சொத்தாக இருக்கும் போது பத்து லட்சத்திற்கு கடன் இருந்தால் கவலைப்பட ஒன்றுமே இல்லை வியாபார மொழியில் சொல்லவேண்டும் என்றால் அது இருபது லட்ச முதலாகும். 

கையில் எப்போதுமே பணபுழக்கம் இருப்பதற்கு நாராயண காயத்ரியை தினசரி பாராயணம் செய்யுங்கள். சனிக்கிழமை தோறும் விரதமிருங்கள் அன்று நீங்கள் உண்ணும் உணவை ஒரு ஏழைக்கு தானமாக கொடுங்கள். நிச்சயம் உங்கள் பணப்பிரச்சனை தீர்ந்து லஷ்மி கடாட்சம் ஏற்படும். 
Contact Form

Name

Email *

Message *