Store
  Store
  Store
  Store
  Store
  Store

இவரும் நல்ல தலைவரே !    குருஜி அவர்களே வணக்கம். நம் நாட்டில் காமராஜரை போல, வேறு நல்ல தலைவர்கள் யாராவது உண்டா? காந்தி இருந்தார் என்று சொல்லி விடாதீர்கள். நான் காந்தியையும், காமராஜரையும் வேறு வேறாக கருதவில்லை. 

இப்படிக்கு, 
ராஜதுரை, 
திசையன்விளை. 

    ஜோதிபாசு என்ற ஒரு மனிதர் மேற்கு வங்காளத்தின் முதல்வராக இருந்தாரே ஞாபகம் இருக்கிறதா? அவர் முதல்வராக இருந்தாலும் கூட தனது துணிமணிகளை தானே துவைத்து கொண்டு வேலையாட்கள் யாரையும் நாடாமல் இருப்பவர். 

கர்நாடக மாநிலத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே என்ற ஒரு மனிதர் முதல்வராக இருந்தார். அவர் சட்டசபைக்கு பேருந்தில் தான் பயணம் செய்தார் ( விளம்பரத்திற்காக அல்ல ). 

 இவர்களை போல நல்லகண்ணு என்ற தலைவர் தமிழ்நாட்டில் இன்று கூட வாழ்ந்து வருகிறார். நல்லவர்களை நாம் நாடுவது கிடையாது என்பதற்காக நல்லவர்கள் இல்லாமல் எப்போதுமே நாடு கிடையாது .


Contact Form

Name

Email *

Message *