Store
  Store
  Store
  Store
  Store
  Store

பழைய வீட்டிற்கு புதிய பரிகாரம் !    யா எங்கள் வீடு மிகவும் பழமையானது. ஆனாலும் வாஸ்துபடி எல்லாம் சரியாகவே இருக்கிறது. இருந்தாலும் சில காலமாக வீட்டில் நல்ல விஷேசங்கள் நடத்துவதில் பல தடைகள் ஏற்படுகின்றன. தேவையில்லாத சண்டைகளும், மன கஷ்டங்களும் நடைபெறுகிறது. விபரம் தெரிந்தவர்கள் உங்கள் வீடு கட்டி பல வருடங்கள் ஆகி விட்டதனால் சில தோஷங்கள் இருக்கலாம். அதற்கு சரியான பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள் என்கிறார்கள். வாஸ்துபடி கட்டிய வீடாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பின் அதற்கு எதாவது மாற்று முறைகள் செய்ய வேண்டுமா? செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து கூறி எங்களுக்கு வழி காட்டுங்கள் மிகவும் உதவியாக இருக்கும். 

இப்படிக்கு, 
வாசுதேவமேனன், 
நாகர்கோவில்.


   னித உடம்பே இளமையில் இருக்கும் உற்சாகத்தையும் சக்தியையும் வயது ஆக ஆக இழந்து விடுகிறது. எப்போதும் இல்லாத சோர்வும், சலிப்பும் முதுமையானால் யாரும் அழைக்காமலே வந்து விடுகிறது. இறைவனது படைப்பான உடம்பிற்கே இந்த கதை என்றால் மனித படைப்பான கட்டிடங்களை பற்றி கேட்கவா வேண்டும். 

கட்டிடங்களுக்காக எழுப்பப்படும் சுவர்களில் கண்ணுக்கு தெரியாத பல ஆயிரம் நுண் ஓட்டைகள் இருக்கின்றன. இந்த துவாரங்களின் வழியாக காடு வந்து போன வண்ணமே இருக்கும் நாளடைவில் இந்த ஓட்டைகள் தூசிகளாலும் பூஞ்சான்களாலும் அடைபட்டு போகும் அப்படி ஆகும் போது சுவர்களுக்கு உள்ள பலம் தானாகவே குறைகிறது. சுண்ணாம்பு ஒட்டாமலும், காரைகள் பேர்ந்தும் கட்டிடத்தின் முதுமை பளிச்சென பல்லை காட்டுகிறது. 

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை தத்துவமே ஈசான மூலை வழியாக தெய்வீக சக்திகள் உள்ளே நுழைந்து நிருதி மூலையில் தங்குகிறது என்பதாகும். அந்தவகையில் நிருதி மூலை சேதமடைந்தால் வீட்டில் வாழ்பவர்களுக்கு பல தொல்லைகள் உருவாகும். வயதாகி போன கட்டிடங்களில் பொதுவாகவே நான்கு மூலைகளும் எதாவது ஒரு வகையில் பழுதடைந்து விடுகிறது. 

இதனால் தான் நமது பெரியவர்கள் எவ்வளவு பெரிய மாளிகையாக இருந்தாலும், சிறிய குடிசையாக இருந்தாலும், பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை மராமத்து செய்ய வேண்டுமென்று சொன்னார்கள். எனவே வீட்டில் ஆங்காங்கு ஏற்பட்டிருக்கும் சிறியவகை பழுதுகளையும் சரிபாருங்கள். வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாளில் வாஸ்து ஹோமம் ஒன்று செய்யுங்கள். 

இதுவல்லாமல் பொதுவாகவே ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டில் சமுத்திர ஜலம் தெளித்து சாம்பிராணி தூபம் போடுவது சால சிறந்தது ஆகும். இப்படி செய்தால் வீட்டில் தீய சக்திகள் அண்டாது தோஷங்கள் எதுவும் நெருங்காது. 

Contact Form

Name

Email *

Message *