Store
  Store
  Store
  Store
  Store
  Store

கழுதையும் மனிதனும் ஒன்றா...?   என் வீட்டில் உள்ள அனைவரும் என்னை கழுதை என்று அடிக்கடி திட்டுகிறார்கள் இதனால் எனக்கு மன வருத்தம் ஏற்படுகிறது அதற்கு நான் என்ன செய்யலாம்?  

இப்படிக்கு,
மணிமாறன், 
தேனி.   பார்ப்பதற்கு மிக எளிமையன விலங்கு என்பதனால் கழுதையை நாம் மிக மட்டமானதாக நினைக்கிறோம். ஆனால் கழுதை செய்கிற வேலையை மனிதனால் செய்வதற்கு நினைத்து கூட பார்க்க முடியாது. மிக உயரமான பாறைகளிலும் மலைபாதைகளிலும் பொருள்களை சுமந்து கொண்டு கழுதைகள் நடப்பதை பார்த்தவர்கள் நிச்சயம் அதை குறை சொல்ல மாட்டார்கள். 

கழுதையிடம் விஷேசமான குணங்கள் பல உண்டு. கழுதை ஒரு நாளில் முப்பது நிமிடங்கள் தான் உறங்கும். ஓய்வெடுத்து கொள்ளும். சாப்பிடுவதற்கு அதை கொடு இதை கொடு என்று அடம்பிடிக்காது. எதை கொடுத்தாலும் சந்தோசமாக சாப்பிடும் கழுதையின் இரத்தத்திலும், பாலிலும் கூட மருத்துவ குணம் இருப்பதாக சித்தர்கள் கூறுகிறார்கள் மனிதனுக்கு அந்த பெருமை இருக்கிறதா? 

கொலை செய்ய வந்த அரசாங்க தூதுவர்களிடத்தில் இருந்து குழந்தை ஏசுவை காப்பாற்றியது கழுதை தான். ஏசுபிரானை பல இடங்களுக்கு சுமந்து சென்றதும் கழுதை தான். உலகத்தின் பாரத்தையே சுமந்த இறை குமாரரை கழுதை சுமந்திருக்கிறது என்றால் அது பெற்ற பேறு வேறு யாரு பெற முடியும். கழுதை இயேசுவை சுமந்தது, மனிதன் அவரை காட்டி கொடுத்தான் சிலுவையில் அறைந்தான். 

இன்னொரு பண்பையும் கழுதையிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் அது வேலை இல்லாத நேரத்தில் தாறுமாறாக சுற்றி திரியாது எங்காவது ஒரு மூலையில் அழகாக ஓய்வெடுக்கும் வேலை என்று வந்து விட்டால் நிமிட நேரம் கூட ஓய்வை எதிர்பார்க்காமல் வேலை செய்ய துவங்கி விடும் நாமும் அப்படி இருந்தால் நன்றாகத்தானே இருக்கும். 

உங்களை கழுதை என்று மற்றவர்கள் அழைப்பதனால் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது உங்களை அவர்கள் உழைப்பாளிகள் என்று கூறுவதாக எடுத்து கொள்ளல்லாம். அதே வேளை கழுதையிடம் எக்கு தப்பாக வம்புகள் செய்தால் காலால் உதைக்கும் என்பதையும் நீங்கள் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். 
Contact Form

Name

Email *

Message *