( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பல் நோய் நீங்க பரிகாரம் !   குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு இருபத்தி மூன்று வயதாகிறது. இந்த வயதிலே பல்லில் சொத்தை விழுந்து பல தொல்லைகள் ஏற்படுகிறது. மருத்துவரிடம் போனால் பல்லை பிடுங்கு என்கிறார்கள். மற்றவர்களோ பல் பிடுங்குவது பல நோய்களை வரவழைக்கும் எனவே அதை செய்யாதே என்கிறார்கள் உங்கள் பதிவுகளில் முடி வளர்வதற்கு கூட பரிகாரம் சொல்லி இருக்கிறீர்கள். பற்கள் நன்றாக இருக்க ஒரு பரிகாரம் சொன்னால் என்னை போன்ற பலருக்கு நன்மையாக இருக்கும் அல்லவா?

இப்படிக்கு, 
யோக ஸ்ரீ, 
கனடா.    னித உடம்பில் செவ்வாயும், சனியும் பற்களுக்கான சக்தியை கொடுக்கும் கிரகங்களாக இருக்கிறது. இந்த கிரகங்கள் வலுவோடு அமையாத பலருக்கு பல் நோய்கள் மிக சகஜமாக வருகிறது. இப்படிப்பட்டவர்கள் பல் பாதுகாப்பில் மிக அதிகமான கவனம் எடுத்து கொள்ள வேண்டும். 

நம்மில் பலர் பல்வலி வந்தவுடனே மட்டுமே பல்லை பற்றி சிந்திக்கிறோம். மற்ற நேரங்களில் அவைகளை பற்றி நாம் சிந்திப்பது இல்லை. மனிதர்களின் மிக நீண்ட ஆயுள் காலத்திற்கு பற்களே அஸ்திவாரங்களாக இருக்கிறது என்பதை மறந்து விட கூடாது. பற்கள் உணவுகளை நன்றாக அரைத்து கொடுத்தால்தான் ஜீரணம் நல்லபடியாக நடக்கும். ஜீரண கோளாறு இருப்பவன் அதிக நாள் வாழ முடியாது.

செவ்வாய்க்கு, ஒன்று - ஐந்து - ஒன்பது ஆகிய இடங்களில் சனி இருந்தால் பல் நோய் கண்டிப்பாக வரும். வந்த பிறகு மருத்துவ சிகிச்சை தான் ஒரே வழி என்றாலும் வருவதற்கு முன்பு இந்த இரண்டு நவகிரகங்களையும் வழிபட்டு ஏழை முதியவர்களுக்கு தாம்பூல தானம் வழங்க வேண்டும். குழந்தை பருவம் துவங்கி இதை செய்து வந்தால் நிச்சயம் பற்களில் பிரச்சினை வராது.

Next Post Next Post Home
 
Back to Top