Store
  Store
  Store
  Store
  Store
  Store

தகப்பனை காதலித்த ஆவி...!


      வ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படக்கூடியவன் நான் அல்ல. சிறிய வயது முதல் பெரிய சவால்களை சந்தித்தும், சமாளித்தும் பழக்கம் இருப்பதனால் எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம். நம்மை மீறி, இறைவனை மீறி என்ன நடந்து விடப்போகிறது என்ற துணிச்சல் எப்போதுமே உண்டு. இது என் விஷயத்தில் மட்டுமல்ல, மற்றவர்கள் விஷயத்தை அதாவது அவர்களுக்கான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போதும் இந்த மனோநிலையோடு தான் அணுகுவேன், ஆலோசனையும் சொல்வேன் மற்றும் தீர்வையும் ஏற்படுத்துவேன். அப்படிபட்ட என்னையும் சில காலத்திற்கு முன்பு வந்த ஒரு கடிதம் ஆடிப்போக வைத்து விட்டது. இப்படி கூட நடக்குமா? என்று நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். 

மும்பையிலிருந்து ஒரு அம்மையார் அந்த கடிதத்தை எழுதி இருந்தார். பல காரணம் கருதி அவர் பெயரை இங்கு நான் குறிப்பிடப்போவதில்லை. ஆனாலும் அவர்கள் எழுதிய கடிதத்தில் உள்ள சில பகுதிகளை குறிப்பிட்டால் தான் எனது உணர்சிகளின் அர்த்தமும், மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷய ஆழமும் இன்னதென்று புரியும். அவர் எழுதி இருந்தார், கனம் சுவாமிஜி அவர்களுக்கு வணக்கம். இங்கு நான் எழுதுகிற செய்தி கற்பனை அல்ல, என் வாழ்வில் இரத்தமும், சதையுமாக நடந்து வருகிற சம்பவம். இதை படித்து விட்டு ஒரு மோசமான பைத்தியக்காரியின் கடிதமென்று ஒதுக்கி விடாதீர்கள் தயவு செய்து தீர்வு தாருங்கள் என்று. 


நானும், எனது கணவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்கிறோம். எங்களது காதல் வாழ்க்கையின் அடையாளமாக மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டு பெண்ணுமாய், ஒரு ஆணுமாய் அமைந்துள்ள எங்கள் குடும்பம் சென்ற வருடம் வரை ஆனந்தம் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டமாக இருந்தது. இன்று வானரங்கள் புகுந்து அட்டகாசம் செய்த வாழைத்தோட்டமாக சிதைந்து கிடக்கிறது. எனக்கும் என் கணவருக்கும் குழந்தைகளின் மீது அளவுகடந்த பாசம் உண்டு. இரண்டு பேரும் வேலைக்கு போனால் தான் மும்பை நகரத்தில் ஜீவனம் நடத்த முடியும் என்ற நிலையிலும் பெற்றவர்கள் இருவரும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டால் குழந்தைகளின் வாழ்வை கவனிக்க முடியாது என்று எனது பணியை ராஜினாமா செய்து விட்டு வீட்டிலிருந்து குடும்பத்தாரை கவனிக்கிறேன். 

எனது கணவர் வேலை நேரமான எட்டுமணி நேரம் தவிர்த்தும் அதிகப்படியான நேரம் பணிபுரிகிறார். நாகரீக உலகில் வாழ்வதும், குழந்தைகளை படிக்க வைப்பதும் அவர்களின் எதிர்கால நலனுக்கு சேமிப்பது மட்டுமே எங்களது நோக்கம் என்பதனால் எங்கள் தனிப்பட்ட அபிலாஷைகள் பெரியதாகப்படவில்லை. எங்கள் முன்னால் நிற்பது குழந்தைகளின் நலன் மட்டுமே. இந்த வகையில் எங்களது பாசமும், அன்பும் அவர்களை விட்டால் வேறு யாருக்கும் இல்லை இதுவே உண்மை. 


எனது மூத்தமகள் பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பாள், நன்றாக படிப்பாள், நடனமாடுவாள், இனிமையாக பாடவும் செய்வாள்.  இறைவன் எல்லா வரங்களையும் அவளுக்கு கொடுத்திருந்தான் என்றாலும் அதில் தவறில்லை. பதினேழு வயது வரை என் மகள் ஒரு ராஜகுமாரி போலவே வளர்ந்தாள். அவளது பதினெட்டாவது பிறந்தநாளுக்கு பிறகு என்னோடு அவள் பாலியல் விஷயங்கள் பலவற்றை ஒளிவு மறைவு இல்லாமல் பேச ஆரம்பித்தாள். சொந்த தாயாக இருந்தாலும் மறைக்க வேண்டியதை மறைக்க வேண்டும் என்ற பண்பாட்டில் வளர்ந்த நான் அவளது ஒளிவு மறைவற்ற பேச்சை கண்டு துணுக்குற்றேன். இருந்தாலும் எடுத்த உடனேயே எதிர்ப்பை காட்டினால் அவளது பேச்சு வேறு ஆதரவை நோக்கி நகர்ந்து விடக் கூடாது என்பதற்காக பொறுமையோடு காத்திருந்தேன். இந்த நேரத்தில் அவளது பேசும் தொனி இன்னும் மாறுபட்டது. நீ அப்பாவோடு எப்படி இருந்தாய், அப்பா உன்னிடம் எப்படி நடந்து கொள்வார் என்ற மாதிரி கேள்விகளை கேட்க துவங்கினாள். தர்மசங்கடம் என்று சொல்வதை விட ஒருவித அருவருப்பே எனக்கு வந்தது. இருந்தாலும் வெளிக்காட்டாமல் பக்குவமாக அவளை மாற்றுகிற வேலையை ஆரம்பித்தேன். 

எனது முயற்சி எதுவும் பலிக்கவில்லை. அல்லது அவள் அதை கண்டு கொள்ள வில்லை. மேலும் மேலும் பெற்றோர்களின் பாலுறவை பற்றியே பேச ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் சொந்த தகப்பனாரோடு தான் உறவு கொள்ள விரும்புவதாக தெரிவித்தாள். அண்டசராசரமே ஆடி போய்விட்டதாக எனக்கு தோன்றியது. நிலைமை கைமீறி விட்டதை உணர்ந்து, என் கணவரிடமும் விஷயத்தை கூறி அழ ஆரம்பித்தேன். ஆறுதல் கூறிய அவர் கவலைப்படாதே எதோ ஒருவித மனநோய் நம் மகளை ஆட்டி வைக்கிறது தகுந்த சிகிச்சை செய்தால் சரியாகி விடும் என்று கூறினார். பல மருத்துவமனை படிக்கட்டுகளில் ஏறி இறங்க ஆரம்பித்தோம். பணம் செலவாகிறது, மன வருத்தமும் அதிகரிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் நிவாரணம் கிடைக்கவில்லை. செய்வதறியாமல் தவிக்கிறேன். வெளியில் கூற முடியாமலும் துடிக்கிறேன் எனக்கு உங்களால் எந்த வகையிலாவது வழிகாட்ட முடியுமா என்று கண்ணீரோடு அந்த தாயார் எழுதி இருந்தார். 

நான் பிள்ளைகளை பெற்று ஒரு தகப்பனாக இல்லை என்றாலும், பெற்றவர்களின் மன நிலையை இன்னதென்று அறியாதவன் அல்ல. அவர்கள் எழுத்தில் ஒவ்வொன்றிலும் வடிகின்ற இரத்தத்தை அறிய முடிந்தது. நான் படித்த வரையில், பார்த்த வரையில் தனது சொந்த குழந்தைகளையே பாலியல் நோக்கில் அணுகும் பெற்றவர்கள் உண்டே தவிர சொந்த தகப்பனிடம் பாலியல் சிந்தனையை வளர்த்து கொள்ளும் வியாதியை பற்றி அறிந்ததில்லை. முதல் முறையாக இதை கேள்விப்பட்டவுடன் நிஜமாகவே ஆடிப்போய்விட்டேன். இப்படி கூட மனித சிந்தனை போகுமா என்று ஆச்சரியப்பட்டேன் 

 ஒருவேளை மும்பை போன்ற பெரிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமான உள்ள பகுதிகளில் இட விஸ்தாரம் இல்லை என்பதனால் ஒரே வீட்டிற்குள் தாயும், தகப்பனும் வைத்து கொண்ட பாலுறவு காட்சியை அந்த பெண் பார்த்திருக்க கூடுமோ என்று அதனால் இந்த சிந்தனை வளர்ந்திருக்கலாமோ என்றும் ஐயப்பட்டேன். அவர்கள் வீட்டின் தன்மையை பற்றி விசாரித்த போது அதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதாகவே தெரிகிறது. எனக்கு தெரிந்த மன நோய் வைத்தியர்களிடம் இதை பற்றி ஆலோசித்த போது ஆளாளுக்கு ஒவ்வொரு விளக்கத்தை சொன்னார்களே தவிர சரியான தீர்வை யாரும் காட்டவில்லை. யாருமே தீர்வு சொல்ல முடியவில்லை என்றால், ஒரு குழந்தையை அனாதரவாக விட்டுவிட முடியுமா? 

அந்த பெண் குழந்தையின் ஜாதகத்தை எனக்கு தெரிந்த வகையில் துருவி துருவி பார்த்தேன். எந்த பதிலும் இதற்கு கிடைக்கவில்லை. கிரகங்கள் சாதாரண, சகஜமான வாழ்க்கை நிலையை காட்டியதே தவிர குறிப்பிடும்படியான அபாய எச்சரிக்கை எதையும் தரவில்லை. எனவே இந்த பெண்ணிற்கு நடப்பது உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட இடையூறு அல்ல. அதையும் தாண்டி ஒரு சிக்கல் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. எனவே மகாகவி காளிதாசன் எழுதிய “உத்ரகாலமிர்தம்” என்ற நூலின் கணக்குப்படி அந்த பெண்ணின் ஜாதகத்தை ஆராய முற்பட்டேன். அமானுஷ்யமான ஒரு தாக்குதல் அந்த பெண்ணுக்கு இருப்பதாகவும், அதனால் அவள் மனம் விசித்திரமான கொந்தளிப்பை அடைந்திருப்பதாகவும், இதற்கு மன நோய் எதுவும் காரணமாக இல்லை என்பதும் எனக்கு புரிய துவங்கியது. ஆனாலும் அதை உறுதிபடுத்திக் கொள்ள வேறு சில மந்திர வழிகளை நாடியபோது துணுக்குறும் பல சம்பவங்கள் நடந்திருப்பதை அறிய முடிந்தது.

இந்த பெண்ணும், இவளோடு படிக்கின்ற வேறொரு பெண்ணும், இணைபிரியாத தோழிகளாக இருந்திருக்கிறார்கள். ஒருவர் வீட்டிற்கு ஒருவர் செல்வதில் எந்த தயக்கம் மயக்கம் இல்லாமல் நடந்திருக்கிறார்கள். இருவரின் உறவும் அன்யோன்யமான முறையில் வளர்ந்திருக்கிறது. இந்த நிலையில் அந்த தோழி பெண் விஷக்காய்ச்சல் வந்து இரண்டே நாளில் அநியாயமான முறையில் இறந்து போய்விட்டாள். 

அவளது மரணம் இவளை வெகுவாக பாதித்திருக்கிறது. மிகவும் வருத்தப்பட்டிருக்கிறாள். தனக்குள்ளேயே மருகி இருக்கிறாள். இறந்து போனவளும் சிறிய பெண். வாழ்வில் உள்ள சுக துக்கங்கள் எதையும் அனுபவிக்காமல் பிடுங்கி போட்ட ஒரு கத்திரி செடியை போல தனது வாழ்வை இழந்திருக்கிறாள். நாம் நினைப்பது போல இறப்போடு நமது உயிரியின் பயணம் நின்று விடுவதில்லை. மரணத்திற்கு பிற்பாடும் தான் வாழ்ந்த உலகில் வாழ்வதற்கே ஒவ்வொரு ஆத்மாவும் போட்டி போட்டு போராடுகிறது. அந்த வகையில் தன்னை அதிகமாக பூமியில் யார் நேசிக்கிறார்களோ அவர்களை நோக்கி அந்த ஆத்மா இறங்கி வருகிறது அப்படி தான் இவளும் அந்த ஆவியின் வலைக்குள் விழுந்திருக்கிறாள். 

செத்துபோன பெண் சாவதற்கு முன்பே சிறிது மனநோயால் பாதிக்கப்பட்டவளாக இருந்திருக்கிறாள். அவளது தாய், தகப்பனும் தனியாக இருப்பதை பார்த்து பார்த்து தனது ரசனையை எதிர்பார்ப்பை வளர்த்திருக்கிறாள். அந்த வகையில் இந்த பெண்ணின் உடம்பிற்குள் வந்தவுடன் இவளின் தந்தையை அவள் ஆவி மோகம் கொள்ள துவங்கி இருக்கிறது. அதன் விளைவாக இவள் தன் தகப்பனை பாலியல் நோக்கில் அணுக துவங்கி இருக்கிறாள். எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள் இதற்கு நாம் யாரை குற்றம் கூற இயலும்? விதியை மட்டுமே குறை கூற தோன்றும் தூரத்திலிருந்து பார்க்கும் நாம் அந்த தாக்கத்தின் வலியை நேரடியாக உணராமல் இருக்கிறோம். உணர்ந்தவர்களின் வேதனயை எந்த வார்த்தைகளால் வடித்தெடுக்க முடியும்? 

சிக்கலின் காரணம் இன்னதென்று தெரிந்த பிறகு அதை தீர்ப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. அந்த ஆவியை விலக்கி போகவைக்க தாந்த்ரீக வழியில் சில பூஜைகள் செய்தேன். எனது மந்திரத்திற்கு கட்டுப்பட்ட சில அமானுஷ்ய சக்திகளின் துணை கொண்டு அந்த ஆவியை விலக செய்ததோடு இல்லாமல், ஆவியின் உடல் வெறியை அழிந்து போக செய்யும் சில பரிகார முறைகளையும் செய்து முடித்தேன். இப்போது அந்த பெண் எந்த சிக்கலும் இல்லாமல், பரிபூரண நலத்தோடு இருக்கிறாள். அவளுக்கு ஒரே நிம்மதி எப்போது பார்த்தாலும் நரம்பை தளரவைத்து உறக்கம் வர செய்யும் மனநோய் மாத்திரைகளை இனிமேலும் சாப்பிட வேண்டாமென்று...

Contact Form

Name

Email *

Message *