Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒப்பாரி வைத்த அரவாணியின் ஆவி!


   ரகண்டநல்லூரில் தான் ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது என்றாலும் அதன் பெயர் திருக்கோவிலூர் ரயில்வே ஸ்டேஷன் என்று ரெகார்ட் பூர்வமாக அரசாங்கம் சொல்கிறது. இப்போது மிக பிரமாண்டமான கட்டிட அமைப்புகளில் ஸ்டேஷன் வந்துவிட்டாலும் பத்து வருடத்திற்கு முன்பு வரை சிறிய ஒட்டு கட்டிடத்தில் ஸ்டேஷன் இயங்கிய போது ஒரு எளிமையும் அழகும் குடிகொண்டிருந்தது. பார்ப்பதற்கு முறைப்படி பராமரிக்கும் பூங்காக்களில் இருப்பது போல பூக்களும் செடிகளும் மிகப்பெரிய வேம்பு மற்றும் பூவரச மரங்களும் ஏதோ ஒரு தேவலோகத்து தோட்டத்தை போலவே இருக்கும் 

ஊர் பெரிய மனிதர்களின் நித்திய வழக்கம் என்னவென்றால் வம்பளப்பது. ஊர் விவகாரங்களை பேசி முடிவெடுப்பது, புதியதாக யாருக்காவது சிக்கல்களை உருவாக்குவது போன்ற காரியங்களை ஸ்டேசனின் பிளாட்பாரத்தில் மாலை நேர உலாவுதலின் போது வைத்து கொள்வதாகும். காரணமாக ஒரு வடையை கடித்து கொண்டு தண்டவாள ஓரமாக கைகாட்டி மரம் வரை நடந்து போய் வந்தாலே இனம் புரியாத சந்தோஷம் உருவாகி ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவற்றை விரட்டி விடும்.

எனக்கு மாலை வந்துவிட்டாலே ஸ்டேஷனுக்கு போகவில்லை என்றால் பைத்தியம் பிடித்து விடும் எந்த வேலை எப்படி இருந்தாலும் அதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று போட்டு விட்டு ஐந்து மணிக்கு போய் ஆறுமணிவரை பிளாட்பார சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து வந்துவிட வேண்டும். அப்ப தான் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட முடியும் அதுவும் நான் போகும் நேரம் பிளாட்பார தரையில் மஞ்சள் வெயில் விழுந்து மரங்கள் எல்லாம் தங்க குளியல் போட்டது போல ஒரு ஜொலிப்போடு தெரியும் பாருங்கள் அந்த காட்சியை பார்க்க எத்தனை கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் குறைவாகத்தான் தெரியும். தூரத்தில் தெரியும் திருவண்ணாமலையும், ஆங்காங்கே நிழல்வடிவாக தலை அசைக்கும் தென்னை மரங்களும் ஓய்வெடுக்க பறந்து போகும் நீர் பறவைகளும் ஸ்டேஷன் இரும்பு வேலிகளில் அலகு தீட்டும் சிட்டு குருவிகளும் எந்த ஓவியனாலும் தீட்ட முடியாத சித்திரமாகும். 

இந்த பழைய காலத்தை நினைத்து விட்டாலே எல்லாம் மறந்து விடுகிறது. சொல்ல வந்த விஷயமும் கூட இப்போது நான் கூற வந்த காரியத்திற்கும் இந்த விவரிப்புக்கும் சம்மந்தமே இல்லை இருந்தாலும் உள்ளுக்குள் அழியாமல் கிடக்கும் தூசுபடிந்த ஓவியம் தொடுவதற்கு முயற்சி செய்தாலே விஸ்வரூபம் எடுத்து வந்து விடுகிறது அந்த ஸ்டேஷனில் அப்படி ஒரு மாலை நேரத்தில் என் பக்கத்தில் பெண்ணை போன்ற நடை உடை பாவனை கொண்ட ஒரு மனிதன் வந்து உட்கார்ந்தான். பக்கத்தில் உட்காருபவன் பைத்தியக்காரனா? பணக்காரனா என்று பார்க்கும் பழக்கம் எல்லாம் அப்போது எனக்கு கிடையாது. நான் பாட்டிற்கு என் கவனத்தில் இருந்தேன் அவனை நான் முழுவதுமாக கவனிக்கவே இல்லை ஆனால் அவன் சிறிது நேரத்தில் நான் துணுக்கடையுமாறு ஒரு வேலையை செய்தான் 

பார்ப்பதற்கு முதுகில் கூன்விழுந்து கால்கள் சூம்பி நடக்க முடியாதவன் போல இருக்கிறானே இவனால் என்ன செய்து விட முடியும் என்று நினைத்தானோ என்னவோ தெரியவில்லை. என் தொடையின் மீது கை வைத்தான் அவனது செயலில் ஒரு அருவருப்பு இருப்பதை விநாடி நேரத்தில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது கையை எடு என்றேன். நல்ல வேளை நான் அப்படி சொன்னவுடன் கையை எடுத்து விட்டான் அப்படி எடுக்காமல் மீண்டும் அதே காரியத்தை அவன் செய்திருந்தால் என் குரல் உயர்ந்திருக்கும் அதை கேட்டு வரும் என் நண்பர்களான ரயில்வே ஊழியர்கள் அவனை நைய புடைத்திருப்பார்கள் அவனுக்கு நல்ல நேரம் தப்பித்து விட்டான் அந்த சம்பவம் நடந்த நாள் முதலே அப்படிப்பட்ட மனிதர்களை பார்த்தால் மனதில் ஒரு அருவருப்பு, இனம் புரியாத கோபம், ஒரு பயம் என்று கூட சொல்லலாம்.

இதனாலேயே அரவாணிகளை நான் வெறுத்தேன். குடிகாரன் மீது கூட ஏன் கொலைகாரனேயே நண்பனாக பாவித்து பேசும் நான் அரவாணிகளை விரோதிகளாக வேண்டாத படைப்புகளாக பாம்புகளை விட கொடியவர்களாக பார்க்க ஆரம்பித்தேன் கடையில் அவர்கள் கைதட்டி பிச்சை கேட்க வந்தால் கூட பையனை விட்டு காசுபோட வைப்பேனே தவிர நானாக என் கையால் பத்து காசு கொடுக்க மாட்டேன் இந்த நிலையில் நண்பர் ஒருவருக்காக அவர் மகனின் ஆவியை அழைத்து பேச ஆரம்பித்தோம் அப்போது வந்த அவரது மகனின் ஆவி நரியை போல ஊளையிட்டு பெண்களை போல ஒப்பாரி வைத்து பேச ஆரம்பித்தது எனக்கு அந்த இயல்பு ஆச்சரியமாகவும் விந்தையாகவும் இருந்தது காரணம் பொதுவாக ஆண்களின் ஆவிகள் பேச ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் தங்களது உணர்சிகளை வெளிக்காட்டாது. அழுவது சிரிப்பது என்பதை கூட ஆண் ஆவிகளிடம் உடனே எதிர்பார்க்க முடியாது பெண்கள் ஆவி அப்படி அல்ல. 

இந்த பையனின் ஆவி முற்றிலும் வேறு விதமாக பைப்படியில் சண்டை போடும் ஒரு மூன்றாம் தரத்து பெண்ணை போல பேசியதும் அழுததும் சிரித்ததும் எனக்கு சந்தேகத்தை கொடுத்தது. அந்த ஆவியோடு பேசி அனுப்பி விட்டு அந்த நண்பரிடம் உங்கள் மகன் உயிரோடு இருக்கும் போதும் இப்படி தான் பேசுவானா என்று கேட்டேன் ஆமாம் அவன் ஆண்பிள்ளை அல்ல பொட்டைமாரி என்று பதில் சொன்னார் எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது என்றாலும் அன்று முதல் அப்படிப்பட்ட ஆவியோடு பேச வேண்டும் அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை தோன்றியது ஆயிரம் தான் நான் அவர்களை வெறுத்தாலும் அவர்களும் இறைவனின் படைப்பு தானே ஒரு கரப்பான் பூச்சியை கூட காரணம் இல்லாமல் படைக்காத இறைவன் மனித உயிர்களான இவர்களை தகுந்த காரணம் இல்லாமலா படைத்திருப்பான் அவனது படைப்பை வெறுப்பதும் அவனை வெறுப்பதும் ஒன்று தானே என்ற எண்ணம் இப்போது தோன்ற ஆரம்பித்தது. 

ஆசை என்ற ஒன்று முளைவிட்ட பிறகு அதை உடனே தீர்த்து கொள்ள வேண்டும் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டால் அது பேராசையாக உருமாறி விடும். எனவே அரவாணி ஆவி ஒன்றோடு பேச நேரத்தை உருவாக்கி கொண்டு பேசினேன் அதனிடம் பல கேள்விகளை நான் கேட்டேன் அதற்கெல்லாம் மிக தெளிவாக அது பதில் சொன்னது அதனிடம் நான் கேட்ட மிக முக்கியமான கேள்வி இப்போது நன்றாக யோசித்து சொல் அடுத்த பிறவி என்ற வாய்ப்பு உன் கண்முன்னால் அப்படியே இருக்கிறது நீ சென்ற பிறவியில் பிறந்த அரவாணி பிறப்பின் தாக்கத்தை எல்லாம் நன்றாக மனதில் வைத்து பதில் சொல் அடுத்த பிறவியிலும் அதே போன்ற பிறவியை நீ எடுக்க வேண்டுமென்றால் அதற்காக சந்தோஷ படுவாயா? என்று கேட்டேன் ஏன் அந்த பிறவியை எடுத்தால் என்ன? அதிலென்ன கஷ்டமிருக்கிறது? அப்படி பிறந்ததற்காக நான் எப்போதுமே வருந்தியது கிடையாது பிறகு எதற்காக மீண்டும் அப்படி பிறக்க யோசிக்க வேண்டும் பூமியில் பிறவி எடுப்பதே பெரிய விஷயம் அந்த வாய்ப்பை இறைவன் தருவதே பெரிய வரம் அதை நினைத்து மகிழ்வதை விட்டு விட்டு அப்படி பிறக்க மாட்டேன் இப்படி பிறக்கமாட்டேன் என்று நினைப்பதெல்லாம் முட்டாள் தனம் என்று பதிலை தந்தது. 

அந்த பதில் யாருக்கு அதிர்ச்சியோ இல்லையோ எனக்கு நிச்சயம் அதிர்ச்சி தான். காரணம் நான் அரவாணியாக பிறந்த ஒவ்வொருவரும் அதற்காக அவமானப்படுவார்கள் என்று தவறுதலாக நினைத்து கொண்டிருந்தேன் இப்போது என் நினைப்பு தவறு அவனவனுக்கு அவனவன் நிலையின் மீது திருப்தியும் மரியாதையும் நிஜமாகவே இருப்பதனால் தான் மரணத்தை பற்றி கவலை படாமலும் சந்தோஷமாக வழ முடிகிறது சோதனைகளை எதிர்கொள்ள முடிகிறது என்பதை புரிந்து கொண்டேன். செத்து போன மனிதர்களால் பயனில்லை என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறீர்கள் ஆனால் உண்மை அப்படி அல்ல உயிரோடு இருக்கும் மனிதர்களை நேசிக்கின்ற மனோபாவத்தை இறந்தவர்கள் நமக்குள் வளர செய்கிறார்கள் என்பதே நிஜாகும்.

Contact Form

Name

Email *

Message *