Store
  Store
  Store
  Store
  Store
  Store

இடிப்பதற்கு மசூதிகள் என்ன பொம்மையா...?



  ன்று ஈழ தமிழர்கள் உலக முழுவதும் நாடற்ற அகதிகளாக சிதறி கிடப்பதற்கு என்ன காரணம்? யூதர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் முடிவே இல்லாமல் மோதி கொள்வதற்கு என்ன காரணம்? வட்டாரம் வரலாறு என்று ஆயிரம் கதைகள் சொல்ல பட்டாலும் அடிப்படையில் இவை அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் தான் உண்டு சொந்த நாட்டில் சமமாக சமநீதியோடு சம உரிமையோடு வாழ முடியாததே ஆகும் எனது கூட்டத்தாரரின் எண்ணிக்கை கைகளுக்குள் அடங்கி போகும் அளவிற்கு சிறியதாக இருக்கலாம் மிகப்பெரிய மனிதர்கள் என்னை சுற்றி வாழலாம் ஆனாலும் நானும் அவர்களும் இந்த மண்ணில் ஒன்றாகவே பிறந்தோம் ஒன்றாகவே வாழ்கிறோம் ஒன்றாகவே சாவோம் நாங்கள் இருவரும் எண்ணிக்கையில் வேறுபட்டாலும் தகுதியில் தரத்தில் எந்த வகையிலும் ஒருவருக்கொருவர் குறைந்தவர் இல்லை இருவருமே நாட்டை பொறுத்தவரையில் ஒரே தரத்து மக்களே ஆவோம் 

நியாயமான முறையில் இப்படி வாழ முடியாத நிலை ஏற்படும் போது தான் போராட்டம் வெடிக்கிறது ஆயுதங்களின் ஓசை கேட்கிறது அமைதியான அன்றாட வாழ்க்கை சீட்டுக்கட்டு மாளிகையாக கலைந்து போய் விடுகிறது எதை வேண்டுமானாலும் என்னால் இழந்து விட முடியும் இழந்த பிறகு சம்பாதித்து விடவும் முடியும் ஆனால் தன்மானத்தையும் தனி உரிமையையும் இழக்கவே முடியாது அப்படி இழந்து வாழ்வதை விட உடலை எரித்து கொண்டு மாய்வதே மேன்மையானதாக மானமுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தோன்றும்.  நாட்டில் பிறக்கின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் சம அந்தஸ்தை வழங்காத எந்த நாட்டு தலைமையும் தன்னை தலைமை என்று அழைத்து கொள்ளும் தகுதியை இழந்து விடுகிறது 

எல்லோருக்கும் சம நீதி சம அந்தஸ்து என்கிறோமே அப்படி என்றால் என்ன? என்று சிலருக்கு அப்பாவித் தனமாக தோன்றும் நான் நினைத்தபடி பிறருக்கு தொந்தரவு இல்லாமல் என் வாழ்க்கை அமைத்து கொள்வதற்கும் சுகந்திரமாக நடமாடுவதற்கும் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் தொழில்களை நடத்தி பொருள் ஈட்டுவதற்கும் உத்தியோகம் அரசு பதவி ஆகியவைகளை அடைவதற்கு எந்த தடையும் யாரும் செய்யாமல் இருப்பது மட்டுமல்ல சர்வ சுதந்திரமாக எனது மத வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதிலும் சம அந்தஸ்து என்ற பதம் அடங்கி இருக்கிறது ஒரு நாட்டின் பெருவாரியாக இருக்கும் குடிமக்கள் என்ன மதத்தை அனுசரிக்கிறார்களோ அதையே தான் சிறுபான்மை சமூகத்தாரும் அனுசரிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லாமல் தங்களது சுய விருப்பம் படி எந்த மதத்தை வேண்டுமானாலும் சார்ந்திருக்கும் உரிமை பெற்றிருக்க வேண்டும் அப்போது மட்டும் தான் முழுமையான மனித தன்மையும் அரசியல் ஒழுக்கமும் கடைபிடிக்க படுவதாக சொல்லலாம். 

தனிமனித வழிபாட்டு சுதந்திரத்தில் வல்லாதிக்கம் செலுத்த நினைக்கும் எந்த அரசும் அல்லது எந்த நிறுவனமும் நிலைத்ததாக சரித்திரம் இல்லை இதை அறிந்தோ அறியாமலோ அங்கோலா அரசு தனது நாட்டில் உள்ள மசூதிகளை இழுத்து மூடுவதற்கும் இடித்து தரைமட்டம் ஆக்குவதற்கும் சம்மந்தம் தெரிவித்து நடைமுறையை ஆரம்பித்து இருக்கிறது உலகில் ஜனநாயகத்தை விரும்புகிற எவனும் இந்த செயலை ஏற்றுகொள்ள மாட்டான் அந்த நாட்டு நிலவரப்படி எதற்க்காக இந்த முடிவு எடுக்க பட்டிருக்கிறது என்று முழுமையான விபரங்கள் நமக்கு தெரியவில்லை என்றாலும் அது எந்த காரணமாக இருந்தாலும் இந்த செயல் மனிதாபிமானம் உள்ள செயல் அல்ல இதை எக்காரணத்தை கொண்டும் அந்த நாடு நடைமுறை படுத்த கூடாது மீறி செய்தால் சர்வேதேச அரங்கில் அதன் பெயர் முழுமையாக கெட்டுவிடும் 

இஸ்லாமிய பயங்கரவாதத்தை கட்டுபடுத்துவதற்காக மசூதிகளை இடிக்க போகிறோம் என்று அந்த நாட்டு அரசு கூறுவதை ஏற்க முடியாது நம்பவும் முடியாது ஒருவனுக்கு நிற்காத சளி மூக்கு வழியாக கொட்டுகிறது என்றால் அவனது தலையை வெட்டி எடுத்து விடுவது எத்தகைய முட்டாள் தனமோ அத்தகைய முட்டாள் தனம் மசூதிகளை இடிப்பது மசூதிகலுக்குள் பயங்கரவாதிகள் இருந்தால் அதை தேடி கண்டுபிடித்து நிறுத்த வேண்டியது அரசாங்கத்தின் வேலை அதை விட்டு விட்டு மசூதிகளை இடிக்க நினைத்தால் தனது கடமையை சரிவர நிறைவேற்ற முடியாத திறமையற்ற அரசாங்கமே அங்கோலாவில் நடக்கிறது என்பது பொருளாகும் மசூதிகள் இருந்தால் தான் பயங்கரவாதிகள் அங்கே இருந்து திட்டம் தீட்ட முடியும் என்று அரசு நினைப்பது குழந்தை தனமானது திட்டம் தீட்ட மசூதி தேவையில்லை ஒரு கட்டிடத்தின் நிழல் போதும் 

நாட்டு பாதுகாப்பை கவனத்தில் வைத்து இந்த முடிவு எடுக்க பட்டதாக நம்மால் நம்ப முடியவில்லை அதையும் தாண்டிய சுயநலம் சர்வதிகாரம் இந்த திட்டத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது இந்த இடத்தில் இஸ்லாமிய நண்பர்கள் ஒரு விஷயத்தில் நின்று நிதானித்து செயல்பட வேண்டும் மசூதிகளை இடிக்க வேண்டுமென்று யார் சொன்னாலும் சம்மந்த பட்டவர்களுக்கு மனசு கொதிக்கும் அதில் சந்தேகம் இல்லை ஆனால் அதற்காக ஆத்திரப்பட்டு செயல்பட்டால் அங்கோலா அரசு கூறுவது உண்மை இருப்பதாக ஆகிவிடும் அந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியை சத்தியத்தின் துணையோடு மெளனமாக போராடி வெற்றிப் பெற வேண்டும் மாறாக பதட்டத்தோடு நடப்பதை தவிர்த்தால் மற்ற நாட்டவர்கள் அங்கோலா மீது நிஜமாகவே நெருக்குதலை கொண்டு வருவார்கள் அது நன்மையாகவே இருக்கும். 



Contact Form

Name

Email *

Message *