Store
  Store
  Store
  Store
  Store
  Store

நல்ல மாமியாருக்கு பாராட்டு!   சுவாமிஜி! எங்கள் குடும்பத்தில் இதுவரை யாருக்கும் சுகப்பிரசவம் நடந்தது இல்லை. என் மூன்றாவது மருமகள் மிகவும் பலகீனமானவர். அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு அவள் உடம்பில் சக்தி இல்லை. ஏழாவது மாதம் நடந்து கொண்டிருக்கிறது அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆக என்ன பரிகாரம் செய்யலாம்? 

இப்படிக்கு,
கோமதி விஸ்வநாதன், 
ஆம்பூர். 


   சொந்த மகள் பிரசவத்தை பற்றியே கவலைப்படாத தாய்மார்கள் அதிகரித்து வரும் இந்த காலத்தில் மருமகளின் மீது அக்கறை கொண்ட மாமியாரை பார்க்கும் போது மகிழ்வாக இருக்கிறது. உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் பாத்திரமான அந்த பெண்ணை நானும் வாழ்த்துகிறேன். 

விநாயகரை வழிபாட்டு வந்தால் சுகப்பிரசவம் எந்த சிக்கலும் இல்லாமல் நடக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். பல நேரங்களில் அது சரியாகவும் இருந்திருக்கிறது. எனவே உங்கள் மருமகளை தினசரி செம்பருத்தி பூ வைத்து பிள்ளையாரை வணங்க சொல்லுங்கள்.

மேலும் உங்கள் மருமகளுக்காக 

மந்தம் முழவம் மழலை தகுந்த வரை நீழல் 
செந்தண் புனமுஞ் சுனையுஞ் சூழ்ந்த சிராப்பள்ளி 
சந்தம் மலர்கள் சடை மேலுடையார் விடையூறும் 
எந்தம் அடிகள் அடியாருக்கு அல்லல் இல்லையே 

என்ற திருஞான சம்மந்தரின் பதிக வரிகளை தினசரி இருபத்தி ஏழு முறை ஜபம் செய்து பெண்ணின் நெற்றியில் திருநீறு பூசி வாருங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் நல்ல குழந்தை பிறக்கும்.

Contact Form

Name

Email *

Message *