( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கனவு பலிக்குமா...?  சுவாமிஜி அவர்களுக்கு வணக்கம் நான் கணிப்பொறித்துறையில் பணியாற்றுகிறேன் எனக்கு சம்மந்தமே இல்லாத என் குடும்பத்தில் இதுவரை யாருமே செய்யாத ஏர் உழுவதை போன்ற கனவு ஒன்றை சமீபத்தில் கண்டேன் என் குடும்பம் விவசாய குடும்பம் அல்ல கிராமத்திலும் நான் வாழ வில்லை பிறகு எதற்காக எனக்கு அந்த கனவு வந்தது என்று தெரியவில்லை நீங்கள் தயவு செய்து விளக்கம் தருமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு, 
சரவணமுத்துக்குமார், 
சென்னை.    ர் உழும் காட்சியை பார்க்காததை கனவில் கண்டேன் என்று கூறுவது போல உங்கள் வார்த்தை இருப்பதை நான் உணருகிறேன் நாம் ஏர் உழ வேண்டும் நம் வீட்டில் யாராவது அந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் அதற்காக கிராமத்தில் தான் வாழ வேண்டும் என்ற அவசியமில்லை 

நகரத்தில் நாலுமாடி குடியிருப்பில் புறாக்கூடு வீட்டில் தன்னந்தனிமையாக ஆயுள் முழுவதும் குடும்பம் நடத்தினாலும் ஏர் உழும் காட்சியை திரைப்படத்திலோ தொலைக்காட்சியிலோ அல்லது பேருந்தில் பயணப்படும் போதோ பார்க்காமல் இருந்திருக்க முடியாது அப்படி பார்த்த காட்சி மனதில் பதிந்த காட்சி கனவில் வந்திருக்கிறது இதில் அதிசயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை 

ஏர் உழுவதை பற்றி நான் நினைக்கவே இல்லையே பிறகு எதற்காக எனக்கு அப்படி கனவு வரவேண்டுமென்று நீங்கள் கேட்டால் அது நியாயமானது கனவு சாஸ்திரத்தில் முழுமையான நம்பிக்கை எனக்கும் இன்னும் வரவில்லை என்றாலும் ஓரளவு நான் அறிந்தவரையில் கனவில் ஏர் உழுவதை போல் பார்த்தால் அப்படி கனவு கண்டவர் வாழ்க்கையில் சமீபத்தில் எடுத்த முயற்சிகள் தோல்வி அடையும் அவர் வீதியில் பக்கத்து வீட்டில் யாராவது ஒருவர் மரணமடைவார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள் கனவு பலன் என்பது கண்டு மூன்று மாதம் வரையிலும் நடக்குமாம் பொறுத்திருந்து பாருங்கள் அப்படி நடந்தாலும் நடக்கலாம்.

Next Post Next Post Home
 
Back to Top