( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

யாராவது பதில் சொல்ல முடியுமா?

     புதுசா பூத்திருக்கிற ஒரு பூவு பிஞ்சாகுமா? காயாகுமா? கனியாகுமா? மொத்தத்தில் வாய்க்கு ருசியா ஜனங்க சாப்பிடுவதற்கு கையில கிடைக்குமா? கிடைக்காதா? ஒன்றும் புரியவில்லை 

கனியா கிடைக்குதா? இல்லையா? என்பது பிறகு பார்த்து கொள்ளலாம் முதலில் பூத்திருப்பது பூதானா? இல்லை பூ மாதிரி தெரிகிற காகிதமா என்பத உறுதிபடுத்தனும் 

கண்டதற்கும் சந்தேகபட்டால் இடுப்பிலே வேட்டி கூட தங்காது நம்புங்கப்பா நம்புங்க கண்டிப்பா அது பூதான் பூவேதான் 

இப்படி நம்பி நம்பி தான் மோசம் போனோம் இப்போ எதை பார்த்தாலும் சூடுபட்ட பூனை மாதிரி சந்தேகப்பட வைக்கிது 

எத வச்சி இத சொல்றீங்க 

1967 ல் ஜனசங்கம் என்ற கட்சிய துவங்கினாங்க துவங்கிய சூடு ஆறுவதற்குள்ளே டெல்லி முனிசிபல் தேர்தலில் அமோக வெற்றி பெற்றாங்க பிறகு அது வளர்ந்து தான் பாரதிய ஜனதா என்ற கட்சியாக ஆனது நம்ம அத்வானிஜி போன்ற தலைவருங்க கூட அப்போதான் உருவானாங்க 

எதற்கெடுத்தாலும் வடக்கு பக்கமா பாத்து தான் உதாரணம் சொல்வதா? தெற்கு பக்கம் சொல்லுகிற மாதிரி எந்த உதாரணமும் கிடையாதா? 1967 க்கு முன்பே ஐம்பத்தி ஒன்பதாவது வருஷமே நமது கழக கண்மணிகள் மெட்ராஸ் கார்பரேஷன் தேர்தலில் வெற்றி பெற்றதும் அண்ணாத்துறை கலைஞர் போன்ற தலைவர்கள் இளமையாக உருவானதும் கண்ணுக்கு படலையா? சாதனையாக சொல்ல மனசு வரலையா? 

பேச்சுவாக்கில் மறந்து போச்சி அதற்குள்ளே வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று திராவிடம் பேசினால் என்ன அர்த்தம் மேலே இருந்து கீழே வருவோமே என்று சொன்னேன் கோப படாம விஷயத்தை கேளுங்க கோப பட்டு உணர்ச்சிவசப்பட்டு எத்தனையோ நல்ல விஷயங்களை இழந்து விட்டோம் 

தமிழன் என்றாலே உணர்ச்சி பிழம்பு தானே அது தானே எங்கள் பெருமை உணர்ச்சி வேகத்தில் அறிவை கூட மறந்து போவோம் அது தான் எங்கள் பாரம்பரிய வீரம் மன்னன் வெற்றி பெற்றால் தன் சொந்த தலையை பலிகொடுப்பவன் அல்லவா தமிழன் ஆத்தாவும் பொண்டாட்டியும் எக்கேடு கெட்டா எங்களுகென்ன தலைவர்கள் எங்கள புகழ்ந்தால் போதாதா? 

சரி விடும் நம்ம பால்தாக்ரே அண்ணாச்சி கூட பம்பாய் மாநகராட்சியை கைப்பற்றிய காலத்தில் தான் சிவசேனா ஆரம்பித்தார் பளபளவென்று வளர்ந்தும் விட்டார் இதுவல்லாம் நாட்டோட நடுபகுதிகள் கிழக்கு பகுதியில அசாம் கனபரிஷத் கட்சிய ஆரம்பித்த இளைஞர் பிரபுல்ல குமார் மொகந்தா இளைய ரத்த துடிப்போட எப்படி எல்லாம் கட்சியை ஆரம்பித்து ஆட்சியை பிடித்தார் 

இப்ப என்ன சொல்ல வரிங்க இவுங்கல்லாம் முத முறையா அரசியலுக்குள்ள வரும்போது பச்சபுள்ள மாதிரி கள்ளம் கபடம் இல்லாமல் வந்தாங்க வந்த பிறகு பத்தோட பதினொன்னு அத்தோட இதுவோன்னு என்ற மாதிரி ஆயிட்டாங்க அதே மாதிரிதான் டெல்லி சமாச்சாரம் இருக்கும் என்று சொல்ல வரிங்களா? 

அய்யய்யோ நான் அப்படி ஒன்னும் சொல்லல அப்படி நடக்க கூடாது என்று தான் விருப்ப படறேன் ஆனால் அரசியல் என்ற கூவ சமுத்திரம் இருக்குதே இது வித்தியாசமானது இத சுத்தபடுத்த நினைச்சவுங்க எல்லாம் சுத்த படுத்தவே முடியாத அளவிற்கு அழுக்காகி போயிருக்காங்க அன்னாஹசாரேயும் அரவிந்த் கேஜ்ஜரிவாலும் காந்தி இல்லையே காந்தி மாதிரி நடக்க நினைக்கிறாங்க அப்படி நடக்க கால்களில் மட்டுமல்ல நெஞ்சத்திலும் தெம்பு வேண்டும் அது இவர்களிடம் இருக்கா? என்பது தான் கேள்வியே! யாராவது பதில் சொல்ல முடியுமா? + comments + 4 comments

மணிகண்டன்
01:56

ஐயா தங்களின் பதிவுகளை படிக்கும் போது சற்று பாஜக வாசம் அடிக்கிறது ஊழலுக்காக போராடும் ஆம் ஆத்மீ கட்சி நாளை ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது

மணிகண்டன்
மதுரை

ஆம் ஆத்மீ கட்சியினரால் முடியுமா முடியாதா? அவர்கள் கொள்கையில் நிலைத்து நிற்பாா்களா இல்லையா ? எனபதெல்லாம் வேறு விசயம். அவர்களின் நோக்கம் உறுதிப்பாடு பாராட்டுக்குாியது. அரசு நிா்ணயம் செய்ததைவிட 1ஃ3 தொகை செலவு செய்து தோ்தலில் நிற்க எத்தனை கட்சிக்கு தைாியம் உள்ளது?ஓட்டுக்கு 1000 கொடுக்க தயாராக இருக்கும் பிரபல கட்சிகள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சியினரைப் பாராட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழா்நலன் என்று கலைஞா் கருணாநிதி அவர்கள் வாய்கிளிய பேசுகின்றாா்கள். ஆனால் தங்களது தொலைக்காட்சி ” தமிழ் பண்பாடு” எதாவது உண்டா ? முற்றிலும் திரைப்படங்களை - முக்காலே முணு விசம் அம்மணமாகக் காட்சியளிக்கும் பெண்களை நம்பி- தான் தெலைக்காட்சி நடக்கின்றன. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு மக்கள் தொலைக்கா்ட்சி சினிமா சம்பந்தமான எந்த நிகழ்ச்சியும் கிடையாது. முற்றிலும் சினிமா இல்லாத ஒரு தொலைக்காட்சியை துணிவாக கொள்கை பிடிப்போடு, சமுதாய நலன் கொண்டு பணப் பேராசையின்றி நடத்தி வரும் மக்கள் தொலைக்காட்சியை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தோ்தலில் பணத்தின் செல்வாக்கை குறைக்க சாியான திட்டங்களை உருவாக்கி செய்ல்படுத்த வேண்டும். அது நாட்டிற்கு நல்லது.

அபூபக்கர், துபாய்
00:32

ஐயா மருத்துவர் அன்புராஜ் அவர்களே சில காலமாக இந்த தளத்தில் உங்கள் கருத்துக்களை படித்து வருகிறேன் பல நேரங்களில் பதிவுகளுக்கு சம்மந்தமே இல்லாமல் கருத்து கூறுகிறீர்கள் அங்கோலா நாட்டு சட்டம் சர்வதிகரமானது என்று குருஜி எழுதினால் நீங்கள் எதற்க்காக காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக எழுதவில்லை என்கிறீர்கள் இந்துமத சடங்குகள் அர்த்தமுள்ளவைகள் என்று இதே சாமிஜி எழுதினாலும் இது என்ன பைத்தியக்காரத்தனம் சடங்குகளே தேவை இல்லை சிக்கனம் முக்கியம் என்கிறீர்கள் ஆம் ஆத் மீ கட்சியின் வரவு நல்வரவாக இருக்கிறது வருகலத்திலும் அவர்கள் கெட்டுபோகாமல் இருக்க வேண்டும் என்று எழுதினால் மக்கள் தொலைகாட்சி நன்றாக இருக்கிறது கலைஞர் தொலைகாட்சி சரியில்லை என்கிறீர்கள் எது தான் உங்களது எண்ணம்? அதை தெளிவாக சொல்லுங்கள் அப்போது தான் எங்களுக்கும் வாதம் செய்வதற்கு நன்றாக இருக்கும் உங்களை நம்பி விடிய விடிய எழுதிவிட்டு கடேசியில் சும்மா விளையாட்டுக்குத்தான் பேசினேன் என்று சொல்லிவிட்டு போய்விடுவீர்களோ என்று தோன்றுகிறது உங்களுக்காக இல்லை என்றாலும் உங்கள் பெயருக்கு முன்னால் போட்டிருக்கும் டாக்டர் என்ற பட்டத்திற்க்காவது மரியாதை கொடுக்க வேண்டுமானால் தெளிவாக எழுதுங்கள்

திரு.அபுபக்கா் துபாய் அவர்களே தமிழா்களை உண்மையாக நேசிப்பவா்கள் யாா் என்பதை எழுதினேன். மற்றபடி எனது கருத்துக்களை தெளிவாகத்தான் பதிவு செய்கிறேன். அங்கோலா தான் உங்கள் கண் முன் நிற்கின்றது. அப்படி நிற்பவா்களுக்கு என்போன்றவர்கள் முள்ளாகத்தான் தென்படுவாா்கள்.எனது கருத்துக்களில் குறைகள் இருப்பின் தாங்கள் எழுதலாமே ? அதை விட்டு விட்டு என்னை இடிப்பானேன் . வரலாற்றில் ஒரு சம்பவம். அபுபக்கா் முகம்மதுவின் ஆதரவாளராக உள்ளாா்.ஆனால் அவரது மகனோ முகம்மதுவின் எதிா் அணியில் இருக்கின்றாா். இரு பிாிவினருக்கும்யுத்தம். அபுபக்கா் மகனுக்கு தந்தை அபுபக்கரைக் கொல்ல ஒரு சந்தா்ப்பம்வாய்த்தது.ஆனாலும் மகன் தந்தையைக் கொல்லவில்லை. பிற்காலத்தில் மகன் முஸ்லீம் ஆனாாா். அப்போது மேற்படி சம்பவத்தைச் சொல்லி தந்தை பாசம் முந்தியதால் கொல்லவில்லை என்று மகன் கூறினாா்.ஆனால் தகப்பன் அபுபக்கரோ ” எனக்கு உன் தலையைக் வெட்ட சந்தா்ப்பம் வாய்த்திருந்தால் நான் மகன் என்ற பாசத்தால் தய்ங்கியிருக்க மாட்டேன். உன்தலையை மகன் என்றம் பாராமல் வெட்டி வீசயிருப்பேன் என்றாராம்.அரேபியா காட்டும் பண்பாடு அத்தகையது. துபாயில் இன்றும் அரபிகள் 53 வயதில் 9 வயது சிறுமிகளை மணம் முடிக்கின்றனரா ? அடிதடியில் ஆண்களைக் கொன்று தோற்றவன் குடும்ப பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்கின்றனரா ? என்ன இன்றைய நிலவரம் எப்ப உள்ளது


Next Post Next Post Home
 
Back to Top