( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஆண்டுகள் மாறினாலும் மாறாத பிரச்சனைகள் !


    ன்னும் இரண்டொரு நாளில் இந்த வருடம் அதாவது 2013 முடியப்போகிறது இந்த பனிரெண்டு மாதத்திற்குள் நாட்டிலும், உலகத்திலும் எத்தனையோ மாறுதல்கள் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து விட்டன. அவற்றில் ஒரு சிலவற்றின் தன்மையை பற்றிய கருத்துக்களை குருஜியிடம் கேள்விகளாக கேட்டு பதில்களாக எழுதுகிறேன். எங்கள் உரையாடல் இதோ உங்கள் முன்னால் அப்படியே தருகிறேன்.

நீங்கள் நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஆதரிக்கவில்லை என்று உங்களது பல கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது ஏன் அவரை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?

குருஜி;- அரசியல் என்பது வேறு. அரசியலில் ராஜதந்திரம் என்பது வேறு. எல்லோரும் பார்ப்பது போல நான் நரேந்திரமோடியை ஒரு அரசியல் வாதியாக பார்க்கவில்லை திட்டமிட்டு குறிபார்த்து செயல்படுகின்ற கைதேர்ந்த ராஜ தந்திரியாகவே பார்க்கிறேன் அவரது அரசியல் பிரேவேசம் என்பது ஆரவாரத்துடன் பட்டுக்கம்பளம் விரித்து நடந்தது அல்ல. மிக எளிமையாக நடந்தது. ஒரு சாதாரண தொண்டனாக அரசியல் சக்கரத்திற்குள் காலெடுத்து வைத்த மோடி இன்று விஸ்வரூமபமாக எழுந்து நிற்பது அவரது உழைப்பும், அறிவும் மட்டும் காரணமல்ல தந்திரமும் காரணம்.

சொந்த கட்சியில் தன்னை தக்க வைத்துக்கொண்டு வளர்ப்பதற்கு எப்படி பாடு பட்டாரோ அதே போலவே குஜராத் முதல்வராக வந்தபிறகு தனது அடுத்த இலக்கு பிரதமர் பதவிதான் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். இதை அவர் யாரிடமும் சொல்லவில்லை. வெளிப்படையாகவும் எதுவும் செய்யவில்லை. ஆனால் மறைமுகமாக அவ்வளவு சீக்கிரம் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத மாயத்தன்மையோடு அவரது லட்சிய பயணம் அமைந்தது.

அத்வானி நல்ல அனுபவஸ்தர். அவரது தொழிலே பத்திரிக்கையாளர் வேலைதான் அவருக்கு மீடியாவின் சக்தி தெரியாதது அல்ல. ஆனால் 2010 க்கு மேல் அறிவு புரட்சியில் இணைய தளம் மட்டுமே பெரியளவில் ஆதிக்கம் செலுத்த போகிறது என்பதை அத்வானி கவனிக்க மறந்தார். மோடி கவனித்தார் அதன்படியே செயல்பட்டார் இன்று முன்னுக்கும் வந்துவிட்டார்.


இதனால் ஒன்றும் மோடியை மோசமானவர் என்று சொல்ல முடியாது ஆனால் மோடியிடம் தான் நினைப்பதை செய்து முடிக்க எந்த விலையை வேண்டுமானாலும் கொடுக்கும் எண்ணம் இருக்கிறது இந்த எண்ணம் வருங்காலத்தில் நாட்டில் உள்ளேயும் வெளியேயும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிட கூடும் என எதிர்பார்க்கலாம். தாவி தாண்டிபோக வேண்டியவன் தடுமாறி விழுந்தால் என்ன ஆகும்? அதே நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டு விட கூடாது என்பதற்காகத்தான் மோடியை ஏற்றுக்கொள்ள சற்று கடினமாக இருக்கிறது. மற்றபடி நான் ஆதரித்தாலும் சரி எதிர்த்தாலும் சரி பலரும் அவரையே விரும்புகிறார்கள் அதனால் எனது கருத்திற்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்காது.

இருந்தாலும் ஜனநாயகத்தை பற்றி அரிஸ்டாட்டில் சொன்னதை நினைத்து பார்க்க வேண்டும் பத்து புத்திசாலிகளின் கருத்து நூறு முட்டாள்களின் கைதட்டல்களில் கரைந்து போகும் என்பார் அதன்படி எதுவும் ஆகாமல் இருந்தால் சரிதான்.

நான்:-  ஆம் ஆத்மி வளர்ச்சியால் முன்னேற்றம் ஏற்படுமா?

குருஜி:- பித்தம் தலைக்கு ஏறி இருப்பவன் எந்த மருந்தையாவது சாப்பிட்டு விடுதலை அடைய வேண்டுமென்று நினைப்பானா? அதே போல கண்ணில் கிடைக்கும் பொருளை எல்லாம் இது நல்ல மருந்தாக இருக்காதா? அது நல்ல மருந்தாக அமையாதா? என்று உண்டு உண்டு வயிற்றையும் நோயையும் அதிகப்படியாக கெடுத்துவிடுவானாம்

அந்த மாதிரிதான் இன்றைய இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் இருக்கிறது ஆம் ஆத்மியை நேசிக்கும் உண்மையான தொண்டர்களின் நேர்மையான எதிர்பார்ப்பு தர்மப்படியான அர்ப்பணிப்பு கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த நாட்டில் பல காலமாக அப்பாவிகள் எதிர்பார்த்து கொண்டே இருக்கிறார்கள் படுபாவிகள் அவர்களை நம்ப வைத்து ஏமாற்றி கொண்டே இருக்கிறார்கள்

ஆம் ஆத்மியின் கதையும் அப்படிதான் எங்க மச்சான் கிளம்பி வந்தார் பூமணத்தோட போகும் போது சட்டையை கிழிச்சிட்டு போனார் சாக்கடையில் போட என்று கரகாட்ட நிகழ்ச்சியில் ஒரு பாடல் பாடுவார்கள் அரவிந்த் கேஜ்ரிவால் இப்போது பூமணத்தோடு வந்திருக்கிறார் கண்டிப்பாக அந்த மனத்தோடே போக மாட்டார்

அதற்கு காரணம் அவர் நம்பி கழுத்தை கொடுத்திருக்கும் காங்கிரஸ் கட்சி கேஜ்ரிவால் ஆட்சி செய்வது என்ன பெரிய காரியமா? என்று கேட்கிறார் அதே கேள்வியை தான் காங்கிரஸ்காரர்களும் உங்களை நம்ப வைத்து கவிழ்க்க போவது என்ன பெரிய காரியமா? என்று மனதிற்குள் கேட்கிறார்கள்

காங்கிரசோடு ஒப்பிடும் போது ஆம் ஆத்மி ஒரு சுண்டைக்காய் இதை எப்படி பதப்படுத்த வேண்டுமென்று கதர்குல்லா ஜாம்பவான்களுக்கு தெரியும் இதற்காகவே விஞ்ஞான பூர்வமாக பட்டம் படித்தவர்கள் அவர்கள். சரண்சிங், சந்திரசேகர் போன்ற கிங் மேக்கர்களையே ஜோக்கர்களாக மாற்றியவர்களுக்கு ஆம் ஆத்மி ஐயோ பாவம்.

இதில் உண்மையாகவே நகைச்சுவை என்னவென்றால் ஒரு சின்ன மாநிலத்தின் அரசியல் நிலவரத்தை கையாளும் அனுபவம் இல்லாத ஆம் ஆத்மி இந்தியா முழுமையும் இந்த தேர்தலிலேயே ஆட்சியை பெற்றுவிடும் என்று சில படித்த மனிதர்கள் நம்புவதே ஆகும்.
  
நான்:- இலங்கையில் நடந்த காமென்வெல்த் மாநாட்டில் இந்தியாவை கலந்து கொள்ள கூடாது என்று சில தமிழ் அமைப்புகள் உரக்க குரல் கொடுத்தது சரியா?

குருஜி:- சித்திரை மாதத்து மதிய வெயிலில் கொதிக்கும் தார் ரோட்டில் நின்று ஒரு பிள்ளை கத்துவான், கேட்பவர்களின் மனதை அவன் அழுகை கலங்க வைத்து விடும். உண்மையாகவே குழந்தையின் அழுகையை நிறுத்த நினைக்கும் பெரிய மனிதர்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி இருந்தாலும் பரவாயில்லை குழந்தையை முதலில் நிழலுக்கு கொண்டுபோவோம் என்று செயல்பட வேண்டும்

அதை விட்டு விட்டு வெயிலுக்காக அழுகிறது என்று ஒருவரும், காலில் செருப்பில்லை அதனால் அழுகிறான் என்று வேறொருவரும், ஒரு செருப்பு கூட வாங்கி கொடுக்க கூடாதா என்ன உலகமிது என்று இன்னொருவரும், செருப்பு இல்லாதது வாங்கி கொடுக்காதது எல்லாம் இருக்கட்டும் எந்த மடையனாவது வெயிலடிக்கும் சித்திரை மாதத்தில் போய் தார் ரோடுபோடுவானா முதலில் அவனை பிடித்து உதைக்க வேண்டுமென்று மற்றொருவனும் பேசினால் எப்படி இருக்கும்.

ஏறக்குறைய ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் குரல் கொடுப்பவர்களின் உண்மையான தகுதி இப்படித்தான் இருக்கிறது ஈழமக்களின் வேதனையை பற்றி இன்னும் நாலு வார்த்தை உணர்ச்சி பொங்க பேச வேண்டும் நிறைய கைதட்டல் பெற வேண்டும் அதன் மூலம் தமிழ் தேசிய தலைவர்களில் ஒருவராக சுற்ற வேண்டும் என்பதே இவர்களின் எண்ணமாக இருக்கிறது.

உண்மையில் இவர்களில் பலருக்கு ஈழத்தமிழர்களை பற்றி அவர்களது அமைதியான அந்தஸ்து மிக்க வாழ்க்கையை பற்றி எந்த அடிப்படை ஞானமும் கிடையாது. அப்படி ஒரு எதிர்பார்ப்பும் கிடையாது. இலங்கை பிரச்சினை தீர்ந்தால் தங்களது தொந்தி நிரம்ப பந்தியில் சாதம் கிடைக்காது என்பதற்காகவே ஈழ பிரச்சினையை பேசி கொண்டே அலைகிறார்கள்

இலங்கை மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொண்டு இலங்கை அரசும் அதன் அதிபரும் தமிழ் மக்களிடத்தில் எந்த அளவிற்கு காட்டுமிராண்டித்தனமாக கட்டுபாடற்ற முறையில் மனித உரிமைகளையே மீறி செயல்பட்டார்கள். இவர்களை சர்வேதேச சமூகம் மன்னிக்க கூடாது என்று ஓங்கி குரல் கொடுத்திருக்க வேண்டும் என்று தான் இங்கே இருக்கின்ற தமிழ் ஆர்வலர்கள் செயல்பட்டிருக்க வேண்டும் ஆனால் நடந்த அவலம் நமக்கு தெரியும்.

இந்திய பிரதமர் கலந்து கொள்ள வில்லை என்றவுடன் இலங்கைக்கு என்ன சிக்கல் வந்தது ஏதாவது தலைகுனிவோ தர்மசங்கடமோ ஏற்பட்டதா? வெடிக்க வேண்டிய நேரத்தில் வெடிக்காமல் பிசுபிசுத்து போவது மன்மோகன்சிங் அரசாங்கம் மட்டுமல்ல தமிழ் ஆர்வலர்களில் ஆர்ப்பாட்டமும் தான்.

+ comments + 5 comments

Anonymous
10:23

இந்தியா ௭ப்போதும் எமக்கு கெடுதலையே செய்துள்ளது இனியும் அப்படியே மானங்கெட்ட முட்டாள் தமிழ் அரசியல் வாதிகளால் உங்களுக்கு யார் ௭க்கேடு கெட்டால் ௭ன்ன? பணம் சேருங்கள், இனம் வரலாறு எல்லாம் ௨ங்களுக்கு எதற்கு? இப்போது நீங்களே ௨லகின் மிகச்சிறந்த காட்டுமிராண்டிகள் ஊழல், கூட்டுகற்பழிப்பு, திரைப்படம், சீரியல் மூலம் ௨ங்கள் சீரழிவுகளை ௨லகெங்கும் வியாபித்தல் முடியுமானால் மனித மாமிசத்தையும் ௨ண்ணுங்கள்

ஈழத் தமிழா்களுக்கு தமிழக அரசியல் வாதிகளில் உதவி அறிக்கைகள் தேவையில்லை. தமிழ்நாட்டில் மௌனமாக இருந்தால்போதும் ஈழத்தமிழா்கள் தங்களக்குண்டான உாிமைகள் அனைத்தையும் வென்று விடுவாா்கள்.

Anonymous
23:59

very good article

Anonymous
09:08

Intha Arasiyal vathikalukku ithuvellam ketka,parka,padikka theriyathu enbathu yen unkalukku theriyavillai. Ithu gandhi desam enpathu ,poi, pithallattam, mada veri kondu alayum koottu kollayarkal enpathil ellalavum santhekam illai. Thanks.

மோடி யைப்பற்றிய குருஜியின் கணிப்பு மிகவும் தவறு. பாரதிய ஜனதாக்கட்சியில் இன்று உயாந்த தகுதி பெற்றப் பலா் இருக்கின்றாா்கள். அந்த அளவுக்கு தகுதிபெற்றவர்கள் வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் இல்லை. பல குறைகள் இருந்தாலும் -பொிய அரசியல் கட்சி எனவே குறைகள் இருக்கத்தான் செய்யும்- எந்த பிற கட்சியைவிட பாரதிய ஜனதா சிறந்ததாக உள்ளது. நோ்மையாக பொதுவாழ்வு என்ற கொள்கையை பாரதிய ஜனதாக்கட்சியின் முதுகெலும்பான ராஷ்டிாிய ஸவயம் சேவக் சங்கம் தொடா்ந்து வலியுருத்தி வருகினறது.எனவே குறைகள் பொிதாகாமல் சங்கம் பாா்ததுக் கொள்ளும். பொது வாழ்வில் நிறைய பணிகளை நிறைவேற்ற வேண்டும். மோடி மற்றும் சங்கம் தான் இந்துக்களுக்கு தேசிய அளவிலும் ( காஷ்மீா் உட்பட அளவிலும் )சா்வ தச அளவிலும் நற்பெயரை பாதுகாப்பை வழங்க முடியும்.


Next Post Next Post Home
 
Back to Top