( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தகப்பனை மிதிக்கும் குழந்தை !    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம். எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தையாக மகன் பிறந்தான். அவன் பிறந்த நாள் முதல் இன்று வரை எனக்கு பல வகையிலும் கஷ்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது செய்த தொழில் கடன் சுமையால் இழுத்து மூடுகிற அளவிற்கு வந்து விட்டது. வாங்கிய பணத்தை திருப்பி கட்ட முடியாத நிலையில் வழக்குகளை சந்திக்க வேண்டிய நிலையும் உருவாகி விட்டது சுருக்கமாக சொல்வது என்றால் நடுத்தெருவிற்கு வந்து விட்டேனோ என்ற அச்சம் ஏற்படுகிறது. என் குழந்தையை குறை சொல்ல மனசு வரவில்லை என்றாலும் ஒருவேளை அவன் கிரகநிலை இப்படி என்னை ஆட்டு விக்கிறதோ என்று நினைக்கிறேன் இது சரியா? நான் மீண்டு வருவதற்கு வழி ஏதாவது உண்டா என்று பார்த்து சொல்லவும் 


இப்படிக்கு, 
மனோகரன், 
கேரளா.     சில குழந்தைகள் பிறந்தவுடன் குப்பைமேட்டில் கிடக்கிற தகப்பனை கோபுர உச்சிக்கு தூக்கி செல்லும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் சில குழந்தைகள் அரசனையும் ஆண்டியாக்கிவிடும் இது ஜோதிட படி உண்மை. கர்மாவின் கொள்கைபடியும் உண்மை. புத்திர சோகத்தால் உயிர் இழக்க வேண்டும் என்ற தசரதனின் சாபமும் தகப்பனுக்கு இறுதி காரியங்களை கூடவே இருந்தாலும் செய்ய முடியாது என்ற பரதனின் நிலையும் இத்தகைய கணக்குகளை உண்மை என்று நமக்கு காட்டுகிறது பலபேருடைய வாழ்க்கையிலும் இது நடந்திருப்பதை மறுக்க இயலாது 

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மிக சிறிய அளவில் சோப்பு கம்பெனி ஒன்று நடத்திவந்தார் அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது பிறந்த குழந்தை பிறவியிலேயே மூளை வளர்ச்சி இல்லாத குழந்தையாக அமைந்து விட்டது தனது வறிய நிலையிலும் அந்த குழந்தையை சரிபடுத்துவதற்கு எவ்வளவோ பாடுபட்டார் ஒன்றும் முடியவில்லை ஆனால் அந்த குழந்தை பிறந்த அதிர்ஷ்டம் அவரது தொழில் பல மடங்கு வளர்ந்தது இன்று கோடீஸ்வரன் என்ற நிலையையும் தாண்டி அதற்கு மேலே இருக்கிறார் இப்படி ஒவ்வொரு குழந்தையும் அதிர்ஷ்டத்தோடோ துரதிருஷ்டமாகவோ பிறக்கிறார்கள் இதை இறைவன் அவர்களுக்கு கொடுத்தனுப்பும் வரம் என்று கூட சொல்லலாம்.

இங்கே உங்கள் விஷயம் வேறு விதமாக இருக்கிறது குழந்தையின் ஜாதகம் தகப்பனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை அதே நேரம் குழந்தை வாழுகிற வீடு சரியான முறையில் இல்லை வீடு மாற்றியோ அல்லது ஊர் மாற்றியோ இருக்க வேண்டுமென்று ஜாதகம் சொல்கிறது எனவே இந்த மாற்றங்களை ஏற்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்குமென்று நம்புகிறேன்.


Next Post Next Post Home
 
Back to Top