Store
  Store
  Store
  Store
  Store
  Store

திருநள்ளாறு போக வேண்டுமா?     சுவாமிஜி வணக்கம் எனக்கு அஷ்டமத்து சனி நடக்கின்றது நான் இலங்கையில் இருப்பதனால் திருநள்ளாறு வந்து தோஷ பரிகாரம் செய்துகொள்ள முடியாது இங்கேயே எங்கள் நாட்டிலேயே செய்துகொள்ளும் படியான பரிகாரங்கள் ஏதாவது கூறுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு, 
மயூரன், 
கண்டி, 
இலங்கை.     திருநள்ளாரில் வந்து பரிகாரம் செய்து கொள்வது நல்லது தான் அதை நான் வேண்டாமென்று எப்போதும் சொல்ல மாட்டேன் அதற்காக அங்கு பரிகாரம் செய்தால் மட்டுமே சுகம் கிடைக்கும் மற்ற இடங்களில் செய்தால் கிடைக்காது என்று யாராவது சொன்னால் வாதப்படியும் தத்துவப்படியும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் சில இடங்களில் மட்டும் தனது சக்தியை சற்று அதிகப்படி காட்டுகிறார் அவ்வளவு தான் 

நீங்கள் இலங்கையில் இருப்பதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை உங்களை பிடித்திருக்கிற அஷ்டமத்து சனியை விட மிக கொடிய சனி உங்கள் நாட்டை பிடித்திருப்பதனால் இந்த சனியால் பெரிய தொல்லை இருக்காது. இருந்தாலும் இந்த சனியின் தொல்லை நீங்க ஒரு வழி சொல்கிறேன் 

உங்கள் பக்கத்தில் இருக்கிற சிவன் கோவிலுக்கு சென்று சனீஸ்வரன் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனிக்கிழமை தோறும் வழிபடுங்கள் பெளர்ணமி தினத்தன்று குறைந்தது மூன்று பேருக்காவது அன்னதானம் செய்யுங்கள் அதுவும் முடியவில்லை என்றால் 


மந்தனாம் சனியே உந்தன்
மகத்துவம் அறிந்து கொண்டேன்
வந்ததோர் துயரம் நீக்கு
மனதினில் அமைதி கூட்டு

என்ற தமிழ் ஸ்துதியை நூற்றி எட்டுமுறை பாராயணம் செய்து வாருங்கள் நல்லது நடக்கும்.

Contact Form

Name

Email *

Message *