Store
  Store
  Store
  Store
  Store
  Store

சொந்த ஊரில் வாழ முடியுமா?
    குருஜி அவர்களுக்கு வணக்கம் எங்களது குடும்பம் ராதாபுரம் தாலுக்கா ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய குடும்பம் இப்போது நாங்கள் எங்கள் சொந்த ஊரில் வாழ வில்லை நாங்கள் அந்த ஊரில் இருக்கின்ற வரையில் பெரிய செல்வந்தராக வாழ்ந்தோம் எங்கள் அப்பா அவருடைய தகப்பனார் ஆகிய அனைவருமே பரம்பரையாக நிறைய சொத்து படைத்தவர்கள் உறவினர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தோம் தினம் தினம் எங்கள் வீட்டில் கல்யாண சாப்பாடு தான் நான் பதினைந்து வயது வரையிலும் சட்டை மடித்து கொடுப்பதற்கு கூட வேலைக்காரர்களின் துணையை நாடி இருந்தேன் என்றால் எங்கள் வசதியை பற்றி அதிகம் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன் 

எனது தகப்பனார் பல வகையிலும் தீய சகவாசம் தீய பழக்கங்களால் சொத்து சுகம் அனைத்தையும் இழந்து பிள்ளைகள் நாங்கள் தலை எடுப்பதற்கு முன்பே காலமாகி விட்டார் படிப்பறிவு இல்லாத எங்களை தாயாரை ஏமாற்றி உறவினர்கள் பல சொத்துக்களை பறித்து கொண்டார்கள் கடேசியில் எங்களை குடும்பத்தோடு தீர்த்து கட்ட முயற்சித்த போது கையில் இருந்த சொற்ப பணத்தோடு அம்மா எங்களை சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்கள் 

எனக்கும் இப்போது ஐம்பது வயது ஆகிறது என் தாயாரும் காலமாகி விட்டார்கள் அண்ணன் தம்பி அனைவருமே இன்றும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் மிக கடினமாக பாடுபட்டு உழைத்து சென்னையில் சொந்த வீடு ஒன்று மட்டும் வாங்கி உள்ளோம் ஆயிரம் காலம் மாறிவிட்டாலும் எனது பழைய வாழ்க்கையை சிறிதளவாவது வாழ்ந்து பார்க்க ஆசை படுகிறேன் எங்கள் குடும்பத்தில் எனக்கு மட்டும் ஜாதகம் எழுதி வைத்திருக்கிறார்கள் இந்த ஜாதகப்படி பழைய செல்வாக்கை நான் பெற முடியுமா? சொந்த ஊருக்கு போக முடியுமா? என்பதை கணித்து பார்த்து சொல்லவும் 

இப்படிக்கு 
அமீர்கான் 
சென்னை 
  க்கினாதிபதி ராசி கட்டத்தில் உச்சம் பெற்று கேந்திரத்தில் குருவோடு சேர்க்கை பெற்று இருந்தால் அந்த ஜாதகன் தனது பூர்வீக சுகத்தை சொத்துக்களை இழந்து தேசாந்திரி போல தப்பி ஓடி வாழ நேரிடும் என்றும் பிறகு அவன் சொந்த முயற்சியில் பல சொத்துக்களை சுகங்களை சம்பாதிப்பான் என்றும் புலிப்பாணி ஜாதக நூல்கள் கூறுகின்றன 

இதன் அடிப்படையில் பார்த்தால் அமீர்கானின் ஜாதகம் சரியாகவே பொருந்தி வருகிறது முன்னோர்கள் சம்பாதித்தது முன்னோர்களின் தவறுகளாலேயே கரைந்து மறைந்து போனது ஒருவகையில் உங்களுக்கு நல்லது காரணம் அவர்கள் சம்பாதித்த பாவம் அவர்களோடே போய்விட்டது அது நீங்கள் சிறிது காலம் திக்கற்று அலைந்த துயரத்தோடு உங்களையும் விட்டு விட்டது 

இனி கவலை இல்லை நிச்சயமாக உங்கள் முன்னோர்கள் சம்பாதித்த அளவு உங்களால் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் அவர்களை விட சுகமாக வாழ்வீர்கள் ஆனால் உங்களது காலம் மட்டும் பூர்வீக ஊரில் குடியிருக்க இயலாது ஒரு விருந்தினர் போல போய் வரலாம் இப்போதைக்கு அதுவே சுகம் தானே!


Contact Form

Name

Email *

Message *