Store
  Store
  Store
  Store
  Store
  Store

காமப் பேயா மோகினி...?


    ந்த்ரா சாஸ்திரம் என்பதுவே தாந்த்ரீக வழிபாடாகும்.ஆனால் ஆரம்ப கால முதலே தந்த்ரமும், மந்தரமும் இணைந்தே பயன்படுவதால் இரண்டையும் சேர்த்து தாந்ரீகம் என்று அழைப்பது வழக்கமாக இருக்கிறது. ஒருவகையில் சொல்லப்போனால் மிக சாதாரண மனிதனுக்கும் உடனடியாக இறை அனுபவத்தை தருவது தந்த்ரா. இதை விளங்கும்படியாக சொல்வது என்றால் கிருஷ்ணன் என்றால் என்ன? கிருஷ்ணனோடு ஐக்கியமாவது என்றால் என்ன? அதன் அனுபவங்கள் எப்படி இருக்கும்? என்று பலவிதமான விளக்கங்களை மற்ற சாஸ்திர முறைகள் சொல்லிக்கொண்டே செல்லும். அதாவது வெறும் வார்த்தைகளால் ஆனால் தந்த்ரம் இவைகளை சொல்லாது இது இப்படித்தான் என்று நமக்கு நேரடியாகவே அறிமுகப்படுத்தி அனுபவமும்படுத்தி வைத்து விடும். உலகத்தில் எந்த மதத்திலும் இல்லாத தனி சிறப்பு தந்திர சாஸ்திரம் எனலாம். மற்ற மதங்கள் கடவுளுக்கு விளக்கங்கள் கொடுத்து கொண்டு இருக்கும் போது தந்த்ர சாஸ்திரம் கடவுளை கண்ணெதிரே பார்க்க வைத்து விளங்க வைத்துவிடும். 

இவ்வளவு உன்னதமான தந்த்ரா சாஸ்திரம் இன்று மிகவும் கீழான நிலையில் கிடக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம் மற்ற மதங்கள் எதுவும் தந்த்ரா சாஸ்திரத்தை அழிக்க நினைத்து, அழித்து விடவில்லை தந்த்ரா சாஸ்திரமே தன்னை தானே அழித்து கொண்டது என்று சொல்லலாம். முத்திரைகள் வழியாக மந்திரங்களின் வழியாக ஆனந்த அனுபவத்தை அடைவதை விட்டு விட்டு எப்போது தந்த்ரா சாஸ்திரம் புறப்பொருளின் துணையோடு ஆனந்த அனுபவத்திற்கு ஆசை பட்டதோ அப்போதே அது கெட துவங்கி விட்டது. மது, மாமிசம், மாது என்ற வார்த்தைகளுக்கு நேரடியான பொருட்களை எடுத்துக்கொண்டு உண்மை பொருளை மறைவு பொருளை புறக்கணித்து விட்டு செயல்பட ஆரம்பித்தது அப்போதே தந்த்ரம் மண்ணை கவ்வ ஆரம்பித்து விட்டது. 

மரண வைராக்கியம் வந்தால் மட்டுமே மனிதனால் உடம்பு என்ற பந்தத்தை கடந்து சிவானந்த லஹரியை அனுபவிக்க முடியும் என்பது தாந்த்ரீக கோட்பாடாகும். அதற்காகவே மயானங்களில் ஆன்மீக சாதனைகளை அது செய்ய சொன்னது. ஒரு பிணத்தின் அருகில் இருந்தாலும் பைசாசத்தை பற்றிய அச்சமோ வாழ்வின் நிலையாமையை பற்றிய பயமோ வரக்கூடாது. செத்து கிடப்பதும் சிவமே சாக கிடப்பது ( அதாவது தாந்த்ரீக பயிற்சியாளனும் ) சிவமே என்ற எண்ணம் வர வேண்டும் இதற்காகத்தான் சுட்ட பிணத்தின் அருகாமையை வலியுறுத்தியது ஆனால் நாளடைவில் பிணத்தையே தின்பது என்ற மன வக்கிரத்திற்கு வளர்ந்து உண்மையான சிவானந்தத்தை பெறுவதற்கு போலியான ஆனந்தத்தை தருகின்ற மது மற்றும் கஞ்சா பொருட்களில் அடிமையாகி பார்பதற்கே விகாரமாகி விட்டது. 

ஆனாலும் கலப்படம் இல்லாத தூய்மையான தந்த்ரா சாஸ்திரம் இன்னும் முழுமையாக மறைந்து போகவில்லை புத்தம் புதிதாக அப்படியே இருக்கிறது நல்ல வேளை அதற்கான ஆச்சாரியார் கூட்டமும் தசமகா வித்தையில் தேர்ந்து ஸ்ரீ வித்யா உபாசகராக இன்றும் நடமாடுகிறார்கள். அதனால் தாந்த்ரீக சாஸ்திரம் தப்பி பிழைத்தது என்றாலும் இன்னும் அதனுடைய பல அமானுஷ்ய விஷயங்கள் மறைபொருளாகவே இருந்து வருகிறது அவற்றில் ஒன்று அபிசார பிரயோகங்களை அதாவது சாதாரண மனிதர்கள் சொல்லுகிற ஏவல், பில்லி, சூன்யங்களை கட்டுடைக்கும் மந்திர பகுதியாகும் இதில் பெருவாரியான பகுதிகள் பகுதி பகுதியாக பிரிந்து கிடக்கிறது உண்மையான விஷயங்கள் நலிந்து கொண்டே வருகிறது என்று சொன்னாலும் அதில் மிகையில்லை. 

அமானுஷ்யம் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பது தான் பொருள். அப்படி அவனது சக்திக்கு அப்பாற்பட்டு எதாவது இருக்கிறதா? அதை எப்படி நம்புவது என்ற கேள்வி தானாகவே பிறந்து விடுகிறது. மனிதன் என்பவன் எண்ணங்களால் உருவாக்கப்பட்டவன் அதாவது எண்ணங்களை உற்பத்தி செய்கின்ற மனம் என்ற ஒன்று இருப்பதனாலேயே அவன் மனிதன் என்று கருதப்படுகிறான் இந்த மனத்தால் அறிய முடிகிறவைகள் கட்டுப்படுத்த கூடியவைகள் மட்டுமே உண்மை. மற்றவைகள் அனைத்தும் வீண் கற்பனை என்று நாம் நினைக்கிறோம் அதாவது இந்த உலகத்தில் நடைபெறுகின்ற அனைத்து இயக்கங்களுமே நமக்கு உட்படுத்தப்பட்டது என்று நினைக்கிறோம். 

இது மிகவும் தவறான நினைப்பு. உதாரணமாக கடல் கொந்தளிப்பதும், சூரியன் உதிப்பதும் நமக்கு கட்டுப்பட்டா நடக்கிறது? அவ்வளவு தூரம் போவானேன் நமது உடம்பிற்குள்ளே இயங்குகின்ற இரத்த ஓட்டத்தையும், இதயத்தையும் நாம் நினைத்தபடி இயக்குவதற்கு நம்மால் முடியுமா? நமது உடம்பே நமது ஆட்சியில் இல்லாத போது நம்மையும் மீறிய பல சக்திகள் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையே நாம் ஏற்பதில் என்ன தவறு இருக்கிறது?எதற்கெடுத்தாலும் அறிவியல் ரீதியிலான ஆதாரங்களை தேடுவது புத்திசாலித்தனமானது அல்ல. உண்மையாக இருக்கும் எத்தனையோ விஷயங்களை ஆதாரமே இல்லாமல் நம்ப வேண்டிய நிலையும் அனுபவிக்க வேண்டிய நிலையும் நம்மில் பலருக்கு ஏற்படுகிறது. இந்த அனுபவங்கள் பொய்யானது அல்ல சத்தியமானவைகள். 

நம்மால் மிக குறைவான வெளிச்சத்தையும் அதீதமான வெளிச்சத்தையும் காண முடியாது. சத்தங்களையும் அப்படித்தான் கேட்க முடியாது. ஒரு குறிப்பிட அளவு வேகத்தில் உள்ளவைகளையே நம்மால் பார்க்கவும் கேட்கவும் இயலும் அதற்காக நான் பார்க்காதவைகள் அனைத்தும் இல்லவே இல்லை என்று சண்டை போட கூடாது. இந்த பூமியிலே கண்ணால் காணுகிற இந்த உலகத்தை போல கண்ணால் காண முடியாத இன்னொரு உலகமும் இருக்கிறது என்றால் அதில் நம்மை போலவே உயிர்கள், பொருட்களும் வாழுகிறது என்றால் நம்ப முடியுமா? ஆனால் வெகு சிலரின் உண்மையான அனுபவங்களை தொகுத்து பார்க்கும் போது அதை நம்பியே ஆக வேண்டியுள்ளது அந்த உலகத்தை சில பயிற்சிகள் இருந்தால் நீங்களும் நானும் கூட நேராக பார்க்கலாம். 

விஞ்ஞானம் கூறுவதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதையும் விஞ்ஞானமும் விஞ்ஞானிகளும் பேச மாட்டார்கள் மக்கள் மத்தியில் ஆணித்தரமாக எடுத்து வைக்க மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இந்த நம்பிக்கையானது கெட்டுபோய் விடக்கூடாது என்று பல அரசாங்கங்களும் பாடுபட்டு வருகிறது ஆனால் உண்மையில் விஞ்ஞான கூற்றுகள் அனைத்துமே சந்தேகமே இல்லாமல் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளா? என்பதை ஆராய வேண்டிய காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற பரிணாம கொள்கை சார்லஸ் டார்வின் என்பவரால் உலகுக்கு தரப்பட்டது அதன் பிறகு அறிவுக்கு புறம்பான மதவாதிகளின் கூக்குரல்கள் ஒடுங்கி விட்டன என்று பெருமை அடிக்கிறார்கள். 

இப்படி பெருமை பேசுபவர்களிடத்தில் ஒரு கேள்வி கேட்க வேண்டும். டார்வின் சொன்ன பரிணாம கொள்கை சரியானதாகவே இருக்கட்டும் அந்த கொள்கை விஞ்ஞான பூர்வமாக தக்க ஆதாரத்தை காட்டி நிரூபிக்க பட்டதா? எப்போது யார் முன்னால் அது நிரூபனமானது என்பதை விளக்க முடியுமா? மேலும் பிக் பேங் தியரி என்ற அதிர்வெடி கொள்கை அதாவது உலகம் ஒரு பெரிய வெடிப்பிலிருந்து உருவானது என்ற கொள்கை இதுவரை ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டிருக்கிறதா நிச்சயமாக இல்லை அதை நிரூபிக்கவும் முடியாது ஒரு விஞ்ஞானியின் கருத்து என்பதனால் மட்டுமே அவைகளை விஞ்ஞானம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நேற்று தோன்றிய ஒரு விஞ்ஞானியின் கருத்தை நம்பும் நாம் சற்று காலத்திற்கு முன்பு துவங்கிய ஞானிகளின் கருத்தை ஏற்கும் போது மட்டும் ஆதாரங்களை கேட்பது ஏன்?

இந்த இடத்தில் ஒரு முறை சிந்திக்க வேண்டும் வெள்ளைக்காரர்கள் தாங்கள் அரசாண்ட பூமியில் உள்ள அனைத்து விஷயங்களையுமே முட்டாள்த்தனமானது நம்பத்தகுந்தது அல்ல என்ற ஒரு கருத்தை வலுவாக விதைக்க விரும்பினார்கள் காரணம் அப்படி விதைத்தால் தான் அடிமைப்படுத்த வந்த அந்நியனின் புத்திசாலித்தனத்தை கண்டு வியந்து அடிமை அடிமையாக இருப்பான் அடிமைகளின் அறிவு சுரங்கங்கள் திறந்து காட்டப்பட்டால் ஆதிக்க சக்திகளை முறியடிக்க அவன் கிளம்பி விடுவான் அல்லவா? அதனால் தான் விஞ்ஞானம் ஆதாரம் என்பது போன்ற சரக்குகளை உலவ விட்டிருக்கிறார்கள் 

பேய், பிசாசுகள், ஆவிகள், மோகினிகள் என்று நம்மால் பல்வேறு விதமாக நம்பபட்டு விமர்சனம் செய்யப்படும் சக்திகள் அந்த கண்ணுக்கு தெரியாத உலகத்தில் வாழுகிறதே தவிர இந்த உலகத்தை விட்டு விட்டு வேறு எங்கோ உயரத்தில் வாழவில்லை என்று கூறினாலும் அதற்கும் சில ஆதாரங்கள் இருக்கின்றன. இனி நான் கூறப்போகும் சில விஷயங்களை அறிவியல் ரீதியில் நீங்கள் சிந்தித்து கேள்விகள் கேட்டால் விஞ்ஞான பூர்வமானது என்ற வார்த்தையின் அரசியல் ரீதியிலான அர்த்தத்தை மனதில் வைத்து கொண்டால் பெரிய பதில்கள் எதுவும் தேவை இருக்காது மாறாக பிடிவாதமாக மீண்டும் மீண்டும் ஒரே எண்ணத்தோடு கேள்விகளை கேட்டால் அதற்கு உங்களை திருப்தி படுத்தும் பதில் எதுவும் என்னிடம் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் நான் சொல்ல போகும் விஷயங்கள் அனைத்தும் உண்மை. உண்மைகளை எப்போதுமே வாதங்களால் வெற்றி பெற செய்யவைக்க முடியாது அப்படி செய்ய வேண்டிய அவசியமும் உண்மைக்கு இல்லை. 

சில காலத்திற்கு முன்பு கொச்சியிலிருந்து இருபது இருபத்திரண்டு வயது மதிக்க தக்க ஒரு பையனை என்னிடம் அழைத்து வந்தார்கள் அவனுக்கு மிகப்பெரிய பிரச்சினை இந்திரியம் நிற்காமல் ஒரே நாளில் பலமுறை வீணாகி விடுகிறது இப்படியே தொடர்ந்து நடப்பதனால் நரம்புகள் தளர்ந்து எதையும் செய்ய முடியாத நிலைக்கு அவன் ஆளாகிவிட்டான். மூச்சு விடுவதற்கு கூட இயலாத நிலை அவனுக்கு உடம்பில் உள்ள ஜீவ அணுக்கள் பல செத்து விட்டது எனலாம் வைத்தியனையும் பார் மாந்த்ரீகனையும் பார் என்பது போல ஏராளமான சிகிச்சைகளை செய்து விட்டார்கள் எந்த பலனும் கிடையாது அந்த நோய்கான காரணத்தை கூட யாராலும் கண்டறிய முடியவில்லை இன்னும் சில நாள் போனால் செத்துவிடுவான் என்ற நிலையிலேயே அவனை அழைத்து வந்திருந்தார்கள். 

அமானுஷ்ய சக்திகளின் துணைகொண்டு அவனுக்கான பிரச்சினைகளை ஆராய்ந்த போது சக்தி வாய்ந்த மோகினி ஒன்று அவன் உடம்பில் உட்கார்ந்து இந்திரியத்தை வீணடித்து கொண்டிருப்பதை அறிய முடிந்தது. அவனது குடும்பத்தார் பல காலத்திற்கு முன்பே ஒரு பெண்ணிற்கு தீமை செய்ததனால் அவள் மரித்து மோகினியாக மாறி அந்த குடும்பத்தையே பழிவாங்கி வருகிறாள். குடும்பத்தின் கடைசி வாரிசான இவனையும் பழிதீர்த்து கொள்ள முனைந்து விட்டாள் என்பதை அறிய முடிந்தது. அந்த பையனின் உடம்பிலிருந்து மோகினி பேயை அகற்ற வேண்டுமானால் குறைந்தபட்சம் இருபது ஆண்டுகளாவது பெண்களையே தொடாத பிரம்மச்சாரி ஒருவனின் இந்திரியத்தை ஆகுதியாக சங்கல்பித்து கொடுக்க வேண்டும் அப்போது தான் மோகினி விலகும் அவனும் பிழைப்பான் என்ற விடைகள் கிடைத்தன. 

அவனை நான் பார்க்கும் போது நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மேலிருக்கும் அன்று அமாவாசையும் கூட இதை போன்ற அமானுஷ்ய பரிகாரங்களை செய்வதற்கு அமாவாசை மிகவும் முக்கியம் இன்றைய தினத்தை விட்டு விட்டால் அடுத்து ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் ஆனால் விடிவதற்குள் அப்படிப்பட்ட பிரம்மச்சாரி ஒருவரை தேடி கண்டுபிடிக்க இயலுமா? கண்டிப்பாக முடியாது அந்த நேரத்தில் அந்த பையனை காப்பாற்றுவது ஒன்றுதான் என் கருத்தில் நின்றதே தவிர வேறு எதுவும் எனக்கு தெரியவே இல்லை எதையும் நான் யோசிக்காமல் என்னையே ஆகுதி பொருளாக ஆக்கி கொண்டு அவனிடத்தில் உள்ள மோகினியை வெளியேற்றி அவனை இறைவன் அருளால் காப்பாற்றினேன். இன்று அவன் நன்றாக இருக்கிறான் அதனால் எனக்கு உடம்பில் சக்தி விரயமாகி பல நோய்களுக்கு ஆட்பட்டது தான் விதி. 

இங்கு மோகினி என்ற பதத்தை படித்தவுடன் அப்படி என்றால் யார்? என்ற கேள்வி இயற்கையாகவே தோன்றும். காரணம் மோகினிகளை பற்றி நம் சமூகத்தில் கூறப்பட்டு வரும் கதைகள் மிகவும் சுவாரஷ்யமானவைகள் திகிலூட்ட கூடியவைகள் இதுமட்டுமல்ல மோகின என்றால் அழகான மயக்கும்படியான தோற்றமுடைய பெண் என்பதனாலும் மனிதர்களுக்கு அதன்மேல் ஒரு ஈர்ப்பு இயற்கையாகவே வந்து விடுகிறது  உண்மையில் மோகினி என்பவைகள் நம் மனதிலுள்ள கற்பனை என்ற வட்டத்திற்குள் அடங்காத அமானுஷ்ய சக்திகள் என்று சொல்லலாம் அதாவது மோகினி பற்றிய நமது கருத்துக்கள் பெருவாரியானவைகள் கதாசிரியர்கள் வளர்த்து விட்ட கற்பனை சார்ந்ததே தவிர வேறொன்றும் இல்லை 

மோகினி என்ற வார்த்தை வசீகரித்தல் என்ற பொருளை தரும் வசீகரம் என்பதற்கு அழகு மட்டும் தான் காரணமாக இருக்கும் என்பது தவறு அழகை தவிர வேறு சில பொருட்களும் வசீகரிக்க கூடியவைகளே இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் மோகினி என்ற சக்திகள் எப்படி உருவாக்கம் பெறுகின்றன என்பதை பார்க்க வேண்டும் பொதுவாக வேதம் படிப்பதற்கு பெண்களுக்கு அனுமதி இல்லை என்று நமக்கு தெரியும் வேதங்களை படிக்கவில்லை என்றாலும் வேதாங்கம் என்ற ஆரண்ய காண்டத்தை உணர்ந்து அதன்படி தனது வாழ்க்கையை நடத்தி வருகிற பெண் திருமணம் ஆகாமல் அதாவது கன்னித்தன்மை நீங்காமல் இறந்து போனால் அவள் மோகினியாக மாறுகிறாள்.  

மோகினி என்ற ஒரே வார்த்தையில் இந்த ஆவிகளை நாம் அழைத்தாலும் அவைகளுக்குள் இரண்டுவிதமான தன்மைகள் இருக்கின்றன ஒன்று சாத்வீக மோகினி, இன்னொன்று ராஜஸ மோகினி. சாத்வீகமான மோகினி என்பது இளமையான வயது என்றாலும் விதி முடிந்து இறந்து போயிருந்தால் அந்த நிலைக்கு வருகிறது. இந்த மோகினிகள் கெடுதிகள் செய்வது இல்லை தான் சம்மந்தப்பட்ட குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் நன்மையை செய்யும் விதி முடியாமல் சாகடிக்கப்பட்டால் அந்த மோகினிகளை ராஜஸ மோகினிகள் என்று அழைக்கிறார்கள் இவைகளுக்கு கோபம் மட்டுமே குறியாக இருக்குமே தவிர கோபத்தை தவிர்த்து குணங்களை எடுத்து கொள்ள தெரியாது தனது செயலால் மற்றவர்கள் வருந்துவதும் அவைகளுக்கு ஒரு விளையாட்டாகவே தெரியும். எனவே மோகினி என்றவுடன் அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை அதற்காக தயக்கம் இல்லாமல் இருக்க வேண்டிய தேவையும் இல்லை.


இங்கு இதை எதற்காக சொல்ல வருகிறேன் என்றால் தாந்த்ரீக வழிபாட்டில் இப்படி எத்தனையோ நல்ல விஷயங்கள் மறைந்து கிடக்கிறது அதில் சிலருக்கு தெரிகிறது பல யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்தவர்களும் வியாபார நோக்கத்திற்காகவும் குருமுகமான ரகசிய காப்புகளாலும் வெளியில் கூறுவது கிடையாது இதனால் அத்தியாவசிய தேவையான ஒரு கலை கொலைசெய்யப்பட்டு உயிருக்கு ஊசலாடுகிற நிலையில் பரிதாபமாக கிடக்கிறது இதை மாற்ற வேண்டுமென்று நினைப்பவர்கள் கண்டிப்பாக தந்த்ரா சாஸ்திரத்தில் உள்ள பல அருவறுக்க தக்க பூஜை முறைகளை கைவிட்டு விட்டு ஸ்ரீ வித்யா முறைக்கு வரவேண்டும் அப்படி வந்தால் மட்டுமே அதர்வண வேதம் சொல்லும் பல ரகசிய வழிமுறைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம். 


Contact Form

Name

Email *

Message *