Store
  Store
  Store
  Store
  Store
  Store

பசும்பால் சைவமா? அசைவமா?




ணக்கம் குருஜி,

நான் எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யகூடாதுனு நினைத்து கடந்த 2 மாதங்களாக அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். ஆனால் சிலரின் அறிவுரைப்படி முட்டை மட்டும் சாப்பிடுகிறேன். 
முட்டை சாப்பிடலாமா?

உங்கள் ஆலோசனை தேவை ஐயா.

இப்படிக்கு
தங்கள் அன்புள்ள,
சுந்தர்ராஜ் .நா 




சைவம் சாப்பிடுவது மிகவும் நல்ல விஷயம் உணவு என்பது உடம்பை வளர்க்கும் பொருள் மட்டுமல்ல மனிதனது உணர்வையும் உயிர் தன்மையையும் உணவு வளர்க்கிறது 

மாமிசம் சாப்பிடுவது மனிதனிடத்தில் உள்ள மென்மையான சுபாவத்தை மட்டுபடுத்துகிறது கடினமான சிந்தனைகளை வளரவிட்டு ஆத்மீக சிந்தனைகளை துளிர்க்க விடாமல் தடுக்கிறது 

அதற்காக நான் அசைவ உணவை  எல்லோரும் தடுத்து விடுங்கள் என்று கூறவர வில்லை நமது இந்துமதம் அவனவன் தொழிலுக்கும் சிந்தனைக்கும் ஏற்றவாறு உணவு இருக்க வேண்டுமென்று சொல்கிறது. தவம் செய்யும் யோகியும் போர் செய்யும் வீரனும் ஒரே மாதிரியான உணவை உட்கொண்டால் அது சரிவராது அதனால் தான் உணவு விஷயத்தில் முழு சுகந்திரத்தை நமது மதம் நமக்கு தந்திருக்கிறது 

இறைவனது சிந்தனை வேண்டும் என்று நினைப்பவன் அசைவத்தை நாடினால் அது தவறு அசைவம் என்றவுடன் மீனும் மாமிசமுமே என்று நினைத்தாலும் அதுவும் தவறு என் பார்வையில் பசுவின் இரத்தத்திலிருந்து உற்பத்தியாகும் பால் கூட அசைவமே அதனால்தான் காந்தியும் அதை எடுத்துகொள்ள மறுத்தார் பாலே அசைவம் எனும் போது முட்டையை பற்றி கேட்கவே வேண்டாம் அதுவும் சந்தேகமே இல்லாத அசைவமே.





Contact Form

Name

Email *

Message *