( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நாடு தாங்காது...!


      டநாட்டுக்காரன்தான் பிரதம மந்திரியா இருக்கனுமா?  தெற்கில் உள்ளவன் பிரதம மந்திரியானா அந்த நாற்காலி உட்கார இடம் கொடுக்காதா? ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதே வழக்கமாகி விட்டது இவர்களை எல்லாம் யார் வந்து திருத்தப்போகிறார்களோ தெரியவில்லை. 

மிளகு ரசம் கொதிப்பது போல கோபத்தில் கொதிக்கிறீரே நீர் கொதிக்கிற அளவிற்கு இப்ப என்ன நடந்து போச்சி? தென்னாட்டில் உள்ளவன் பிரதமார் ஆகக் கூடாது என்று வடக்கத்தியான் சதி செய்கிறான் என்றால் நரசிம்மராவும், தேவகவுடாவும் எப்படி பிரதமாராகி இருக்க முடியும்? ஒரு வேளை இவர்கள் இருவரும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்களா? வாய் புளித்தததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது நிதானமாக பேசினால் மூளை வேலை செய்யும்.

ஆமாம் எனக்குதான் மூளை கெட்டுபோச்சி உங்க மூளை அப்படியே தளுக்கா இருக்கு நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் என்று பேசுபவர்களும் ராகுல் காந்தி அடுத்ததாக வரவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்களும் இருக்கிறார்களே தவிர ஒருவராவது ஜெயலலிதா பிரதமரானால் என்ன? ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே என்று சிந்திப்பதற்கு கூட ஆள் கிடையாது. நரேந்திர மோடியை விட ராகுலை விட ஜெயலலிதா எதில் குறைந்து போய்விட்டார்? ராகுலிடம் இருக்கும் குடும்ப பாரம்பரியம் வேண்டுமானால் ஜெ யிடம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் மோடியிடம் இருக்கும் அனைத்து திறமைகளும் அம்மாவிடம் இருக்கிறதே? அதை ஏன் நாடு கவனிக்க மாட்டேன் என்கிறது. 

மோடிஜீயும் ஒரு மாநிலத்தின் முதல்வர், அம்மாஜீயும் முதல்வர் தான் இருவருக்குமே சவால்களை எதிர்கொண்டு பழக்கம் இருக்கிறது. ஆனால் மோடிக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதே அதையும் நாம் பார்க்க வேண்டும் அல்லவா? மோடி பிரதமரானால் அவரை வைத்து அவரது கட்சிக்காரர்கள் மட்டும் அதிகார பலத்தை ருசி பார்ப்பவர்களாக இருப்பார்கள் என்று சொல்லலாம். அம்மாவை பொறுத்தவரை அப்படி சொல்லிவிட முடியுமா? அவருக்கு பின்னால் இருக்கும் மன்னார்குடி உறவுகள் ஆட்டம் போட மாட்டார்களா? அவர்களை கட்டுக்குள் வைக்கும் எண்ணம் இவருக்கு உண்டா? இது ஒருபுறம் இருக்கட்டும் ஒரு அமைச்சரை ஒரு மாதமாவது ஒழுங்காக ஒரு இலாக்காவில் வைத்திருப்பாரா துக்ளக் தர்பாரில் நடப்பது போல இந்திய அரசு நடக்க ஆரம்பித்து விடுமே? இந்திய மொழிகள் அனைத்திலுமே அம்மாவை துதிபாட வேண்டிய நிலைமைக்கு உறுப்பினர்கள் வந்து விடுவார்களே 

இப்போது மட்டும் சோனியாவை யாரும் துதி பாடவில்லையா? அவரை துதிபாடினால் அது இனிக்கிறது இவரை துதிபாடினால் அது கசக்கிறது என்ன ஐயா நியாயம் உங்கள் நியாயம். இப்போது சோனியா குடும்பம் பிரியங்கா குடும்பம் ஆடாத ஆட்டத்தை போடாத கூத்தை அம்மாவின் நண்பர்கள் போட்டுவிட போகிறார்களா? மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற கதையாக இருக்கிறது. உங்கள் கதை 

தமிழ்நாட்டுக்காரர் தான் பிரதமராக வேண்டுமானால் அதற்கு ஜெயலலிதா மட்டும் தானா இருக்கிறார்? அவரை விட அனுபவத்தில் நிர்வாகத்திறமையில் மேம்பட்டவரான கலைஞர் கருணாநிதி இல்லையா? இந்த வயதான காலத்தில் அவரது அரசியல் சேவையை பாராட்டி பிரதமர் மந்திரி பதவியை அவருக்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஜெயலலிதா, ராகுல், மோடி என்று மேட்டு குடிகளையே முன்னிறுத்த பார்க்கிறீர்களே கலைஞர் போல ஒரு ஒதுக்கப்பட்ட சமூகத்தவரை பிரதமராக்கினால் என்ன கேடு? 

ஐயையோ தெரியாத்தனமாக ஜெயலலிதாவிற்கு சப்போர்ட் செய்து விட்டேன் தயவு செய்து மன்னித்து விடுங்கள். கருணாநிதியை இழுப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் வாயே திறந்திருக்க மாட்டேன். தள்ளாடுகிற வயதில் அவரை பிரதமராக்கி ஸ்டாலினை நிதி மந்திரியாக்கி கனிமொழிக்கு உள்துறை இலாகா கொடுத்து அஞ்சா நெஞ்சனுக்கு தென்மாநில மண்டல செயலாளர் பதவியை கொடுத்து தாங்காதையா நாடு தாங்காது தலைக்கு ஒருவராக இந்தியாவை கூறு போட்டு கொண்டு போகும் கொடுமையை பார்க்க என்னால் முடியாது. இன்று முதல் நான் அரசியலே பேசவில்லை என்னை விடுங்கள் எங்காவது ஓடிப்போய் பிழைத்துக்கொள்கிறேன்.

+ comments + 11 comments

நயனில சொல்லினும் சொல்லற்க சான்றோர் பயனில சொல்லாமை நன்று. குருஸ்ரீ அவர்கள பயனில்லாத, தங்களின் தகுதிக்குப் பொருத்தமில்லாத, எழுதியும் எந்த பயனையும் ஏற்படுத்தாக கட்டுரைகளை வெளியிடுவது தங்களுது வலைதளத்தை ஒரு குப்பைத் தொட்டி அளவிற்கு தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். மேற்படி கட்டுரை ஒரு குப்பை. ஒன்று குப்பையை நீக்க வேண்டும். இல்லையெனில் குப்பை இருக்கும் வலைதளம் குப்பை தொட்டியாகும். முடிவு உங்கள் கையில்.

இதற்கு ஒரு விடிவே கிடையாதா ஐயா

பாரத பூமியை இவ்வாறு கூறுபோடுபவர்களை எவ்வாறு தடுத்து நிறுத்துவது..

ஒரு பக்கம் மதமாற்றம் என்று மாற்றி கொண்டிருக்கீறார்கள்

என்ன செய்வது ஐயா..

நன்றி

MPK
VLR

Anonymous
10:57

mooligai patriya pathuvu podungal

Amma manal vivagarangalilum matrum sasikala erandu vidayathilum vittu koduthal athavathu kollai thaduthu niruthinal nangal PM aakivittu maru velai parkirom sariya

மணிகண்டன்
02:11

@டாக்டர் அன்பு ராஜ்ஜிக்கு நீங்கள் அரசியல் எழுதுவது பிடிக்கவில்லை அதை என்கிறார் எனவே நீங்கள் அரசியல் எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என் நண்பருக்கு நீங்கள் கவிதை எழுதுவது பிடிக்கவில்லை எனவே அதை நிறுத்தி விடுங்கள் வேறொருவருக்கு நீங்கள் ஆன்மிகம் எழுதுவது கட்டோடு பிடிக்கவில்லை எனவே அதையும் நிறுத்தி விடுங்கள். மற்றொருவர் சொல்கிறார் நீங்கள் எழுதுவதே பிடிக்கவில்லை என்று எனவே எழுதுவதையும் நிறுத்தி விட்டு வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்ன உலகம் இது மனதில் பட்டதை எழுதுவதற்கு கூட உரிமை இல்லை. விருப்பம் இருந்தால் படியுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள் யாரையும் வற்புறுத்தவில்லையே பிறகு ஒருவரின் கருத்தை குப்பை என்று சொல்ல நமக்கென்ன உரிமை இருக்கிறது டாக்டர் சார் கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்கள் தொழிலுக்கு அன்பு ராஜ் என்ற பெயர் கெளரவ குறைச்சலாக இருக்கிறது என்று நான் சொன்னால் உங்களால் அதை மாற்ற முடியுமா? கிடக்கிறான் பைத்தியகாரன் என்று தானே போவீர்கள்


உங்களுகொரு நியாயம் ஊருக்கொரு நியாயமா?

ஐயா
தங்களின் கருத்து எனக்கு விளங்கவில்லை.குருஸ்ரீயின் கட்டுரையில் என்ன கருத்து வலியுருத்தப்படுகின்றது. முன்னிருத்தப்படுகின்றது. தீர்க்கமான கருத்துக்களை முன்வைக்க வேண்டுகின்றேன். தங்களின் கருத்தும் அது என்றால் எனக்கு மகிழ்ச்சிதான்.எனது கடிதம் தவறு என்றால் மன்னிக்க வேண்டுகின்றேன்.

Anonymous
08:56

டேய் முட்டாள் Dr .anburaj .....

அவர் சொல்ல வர்றது இந்தியாவை ஆள தகுதி ஒல்லவன் ஏத்த கட்சி தலைமையிலும் இல்லை என்கிறார்...புரியுதா

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்ற பழமொழிக் கேற்ப நானும் முட்டாள்தான். மேலும் நிறைய கற்க வேண்டிய நிலைமையில்தான் நான் உள்ளேன் என்பதை எனக்கு நினைவு படுத்திய பெயரில்லா நண்பருக்கு எனது நன்றி!. என் நண்பரே தங்கள் பெயரோடு கடிதம் எழுதுங்களேன்.

பாரதிய ஜனதாக் கட்சியில் உயர்தகுதி பெற்றவர்கள் நிறைய பேர்கள் உள்ளனர் இதை ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். முட்டாள் நண்பருக்கு .....அதாவது என்னை முட்டாள் என்று நிறைய படிக்க சிந்திக்க வேண்டிய நிலையில் நான் உள்ளதை நினைவு படுத்திய பேரறிவுள்ள பெரும்புலமை பெற்ற மேதை கல்விக் கடல் அறிவுக் களஞ்சியம் பண்பின் திலகம் அன்பின் சொரூபம் அருமை வலைதள நண்பருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


Next Post Next Post Home
 
Back to Top