Store
  Store
  Store
  Store
  Store
  Store

நோய் நீங்க யாரை வழிபடுவது?   தியந்த பிரபுவை வழிபட்டால் நோய் விலகுமென்று சொல்கிறார்களே? அப்படி என்றால் எந்த தெய்வம் என்று எனக்கு புரியவில்லை. தயவு செய்து குருஜி அவர்கள் விளக்கம் தருமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
ஞானேந்திரன் ,
கனடா.சிவனும் சக்தியும் இணைந்த உருவத்தை அர்த்தநாரீஸ்வரர் என்பார்கள். சிவனும், விஷ்ணுவும் பாதி பாதியாக நின்றால் அந்த மூர்த்தியை "சங்கர நாராயணன்" என்று அழைப்பார்கள். ஹிந்து மதம் என்பது கொள்கையில் வேறுபட்டு நின்றாலும் பொதுவில் ஒன்றே என்பது வெளிச்சம் போட்டு காட்டுவதே இந்த இறை அடையாளங்களின் விளக்கமாகும். 

இதே போல சைவர்கள் வழிபடுகிற விநாயாக பெருமானையும், ஆஞ்சநேய மூர்த்தியையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட தோற்றமே ஆதியந்த பிரபு என்கிற தெய்வம். இருவருமே வீரியத்தின் மறுவடிவம், ஒழுக்கத்தின் அவதாரம். ஒழுக்கம் இருக்கும் இடத்தில் வீரியம் இருக்கும். வீரியம் இருந்தால் ஆரோக்கியம் இருக்கும் எனவே தான் நோய் நீங்க இவரை வழிபட சொன்னார்கள்.

Contact Form

Name

Email *

Message *