Store
  Store
  Store
  Store
  Store
  Store

பித்ரு பூஜைக்கு எதிர்பாராத காணிக்கை...!


    ரம்ப காலத்தில் ஆங்கில இணையதளத்திலோ, தமிழ் இணையதளத்திலேயோ எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. எந்த ஒரு விஷயத்தையும் புத்தகத்தில் படிக்கும் போது கிடைக்கும் நிறைவும், ஆத்ம திருப்தியும் வேறு எதிலும் கிடைப்பதில்லை என்பது எனது எண்ணம். இப்போதும் எனது எண்ணம் மிக உறுதியாக அதுவே என்றாலும் கூட இணையதள படிப்பிலும் சில விஷயங்கள் சாத்தியமாகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறேன். குறிப்பிட்ட ஒரு விஷயத்தை புத்தகங்களில் தேடி பெறுவது என்றால் மிக கடினமான உடல் உழைப்பு அவசியமாக இருக்கிறது. ஆனால் இணையங்களில் அத்தகைய உழைப்பு மிகவும் குறைந்து விடுகிறது தேடுவது இருக்கிறதா இல்லையா? என்பதை சில வினாடிகளிலேயே நம்மால் அறிய முடிகிறது. 

அந்த வகையில் நாடி ஜோதிடத்தை பற்றி தேடி தான் வலைதளத்திற்கு வந்தேன் அப்படி வருகிற போது உஜிலாதேவி என்ற உங்கள் வலைதளத்தை படிக்க நேரிட்டது ஆரம்பத்தில் இணையதளத்தின் பெயரும் அதிலுள்ள உங்களது புகைப்படமும் என்னை ஈர்த்தது என்றாலும் நீங்கள் எழுதி இருக்கும் கருத்துக்களை படிக்க படிக்க முற்றிலுமாக என்னை அடிமைப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம். நீங்கள் இதுவரை பதிவு செய்தவகைகளில் சுமார் ஆயிரம் பதிவுகளை மூச்சு விடாமல் படித்து முடித்திருக்கிறேன். இன்னும் சிறிது தான் பாக்கி இருக்கிறது. அதையும் படித்து முடித்து விட்டால் நீங்கள் தினம் தினம் செய்கிற பதிவுகளை சூட்டோடு படிக்கின்ற உங்கள் வாசகர்களில் நான் கண்டிப்பாக முதல் வாசகனாக வருவேன். 

அந்தகால எழுத்தாளர்கள் மட்டுமே சிறப்பான மொழி நடையை கையாளுவார்கள் இப்போது இருப்பவர்கள் நாகரீக எழுத்து என்ற மாயையில் தமிழை சிதைத்து ஆங்கிலத்தையையும் வதைத்து எழுதி வருகிறார்கள் பூச்சாண்டி வருகிறான் கதவை சாத்திக்கொள் என்று குழந்தைகளை மிரட்டுவது போல இப்போதைய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பயமுறுத்துகின்றன என்று அஞ்சி நடுங்கி ஒருமூலையில் கிடந்தேன் என்னை தூக்கி நிறுத்தி கெட்டவன் எங்கும் நிறைந்திருப்பது போல நல்லவனும் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கிறான் என்பதாக உங்களது அழகான எழுத்து நடை எனக்கு அடையாளம் சொல்லி கற்பித்தது. அன்றுமுதல் நீங்கள் எழுதும் எந்த பதிவையும் நான் விட்டு வைப்பதில்லை. படித்து முடிக்காமல் வேறு வேலைக்கும் போக மனது வரவில்லை.

உங்களால் மட்டும் எப்படி இதே போல எழுத முடிகிறது? தில்லானா மோகனாம்பாள் படத்தில் மனோரமா, சிவாஜி கணேசனை பார்த்து நீங்கள் நாயனத்திற்குள் விசை வைத்து ஊதுகிறீர்களா என்று கேட்பாரே அதே போலவே உங்களிடமும் கேட்க தோன்றுகிறது? இருந்தாலும் இதற்கான பதில் என்னிடம் இல்லாமல் இல்லை மனம் ரோஜாப்பூவானால் வாசனை சொற்களில் தெரியுமென்று ஓஷோ சொல்வாரே அதே போல உங்கள் மனமும் இயற்கையாக அழகாக இருக்கிறது. அதனால் உங்கள் எழுத்தும் யதார்த்தமான அழகோடு ஜொலிக்கிறது என்ற உண்மையை புரிந்து கொண்டேன். 

சில நாட்களுக்கு முன்பு பித்ருதோஷ பரிகாரம் செய்யப்போவதாக எழுதி இருந்தீர்கள் அதை படித்தவுடன் என்னை போல மகிழ்ந்தவன் யாரும் இருக்க முடியாது. காரணம் பித்ரு தோஷம் என்றால் என்ன அதன் பாதிப்புகள் தான் எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக காத்திருந்து பெற்றவன் நான். அந்த தோஷத்தை நிவர்த்தி செய்தால் நிகழுகின்ற நல்லதையும் அனுபவித்தவன் நான். எனவே ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன், கிறிஸ்தவன், முஸ்லீம் என்ற பாகுபாடுகள் எதுவுமே இல்லை. பாதிப்படைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கண்டிப்பாக நிவாரணம் கிடைக்கும் என்ற முழு உத்திரவாதத்துடன் நீங்கள் துவங்கி இருக்கும் இந்த பணி மெய்சிலிர்க்க வைக்கிறது. 

காசிக்கு போகவேண்டும், ராமேஸ்வரத்திற்கு வரவேண்டும், கும்பமேளாவில் கங்கையில் நீராடி அஞ்சலி செலுத்த வேண்டும் அப்போது தான் உனது பித்ருதோஷம் நிவர்த்தியாகும் என்று ஜோதிடர்கள் கூறுவதை கேட்டு கையில் பணமில்லையே என்னால் என்ன செய்ய முடியும் என்று தவிக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களும், இந்து மக்களும் பணமே வேண்டாம் முதலில் தகவலை கொடு சாந்தி செய்கிறோம் என்ற உங்களது அறிவிப்பு அனாதைகளையும், அகதிகளையும் கூட நெருப்பாக சுட்டு எதையாவது செய்ய வைக்கும். 

நான் மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். எனது தகப்பனார் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவர் என்பதனால் அவருக்கு சாஸ்திரம், சம்பிரதாயம், தர்ப்பணம் போன்ற எதிலும் நாட்டம் இருந்தது கிடையாது. யாருக்காகவும் அவர் அப்படி செய்ததும் இல்லை அது அவருடைய சொந்த விஷயம் சுதந்திரம் என்பதோடு மட்டும் நின்றிருந்தால் யாருக்கும் சிக்கலில்லை ஆனால் அவர் அப்படி இருக்கவில்லை தன்னிடம் பணிபுரிகின்ற பணியாளர்களை கூட வழிபாடு செய்வதற்கும் தர்ப்பண காரியங்கள் செய்வதற்கும் அனுமதி கொடுத்ததில்லை. ஒளிந்து மறைந்து யாராவது ஒரு பணியாள் செய்த தகவல் இவருக்கு தகவல் கிடைத்தால் வேலையை விட்டு தூக்குவார். நமது விஜயகாந்த் டிரைவர்களை அடித்து விட்டு தோசை வாங்கி கொடுப்பது போல மற்றவர்களை அடித்தும் துரத்துவார். 

ஆரம்பத்தில் இளமையில் இதிலுள்ள வலி அவருக்கு தெரியவில்லை. காலம் செல்ல செல்ல ஆடம்பர செலவும், உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற சோம்பேறித்தனமும் அதிகரித்து வட்டியும் கடனும் வீட்டு வாசல்வரை வந்து அவமானப்படுத்திய போதும் அவர் அதை லட்சியம் செய்யவில்லை. அவர் காலத்திற்கு பிறகு நாங்கள் தலையெடுத்து படாதபாடு பட்டு குடும்பத்தை தூக்கி நிமிர்த்த எவ்வளவு முயன்றும் முடியாமல் கடைசியில் அத்தனை தோல்விகளுக்கும் பித்ரு தோஷமே அஸ்திவாரம் என்பதை அறிந்து முறைப்படி அவைகளை விலக்கி இன்று நன்றாக இருக்கிறோம். 

பணம் இருப்பவன் காரியம் சாதிக்கிறான். இல்லாதவன் என்ன செய்வான் என்பதை உங்களை போன்ற ஒரு பெரிய மனிதனால் தான் சிந்தனை செய்து பார்க்க முடியும். அதனால் தான் பணம் வேண்டாம் உன் விபரங்களை மட்டும் கொடு என்று கேட்கிறீர்கள் அத்தகைய உங்களது உயர்ந்த எண்ணத்திற்கு எத்தனை சிம்மாசனங்கள் போட்டு எத்தனை சாமரங்கள் வீசினாலும் அது குறைவாகவே இருக்கும். 

அரக்கனை வீழ்த்தி சீதையை மீட்டுவர ராமன் சேதுபந்தனம் அமைத்த போது அணிலும் கல்லெடுத்து கொடுத்து உதவி செய்ததாமே? அதே போல நானும் உங்கள் பணிக்கு உதவலாம் என்று நினைக்கிறேன். பணம் இல்லாதவர்கள் நிறையப்பேர் உங்களிடம் தொடர்பு கொள்ளலாம் அவர்களுக்காக நீங்கள் சிரமமும்படலாம். ஊராரின் குறையை உங்களால் தீர்க்க முடியம் என்றால், உங்களின் சுமையை என்னாலும் சிறிது தாங்க முடியமென்று நினைக்கிறேன். அதனால் என் சொந்த சம்பாத்தியத்தில் சம்பாதித்த இருபத்தி ஐயாயிரம் ரூபாயை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். பித்ரு சாந்தி பூஜைக்கு ஆகும் செலவில் இதையும் அன்போடு ஏற்று கொள்ளுங்கள்.

இதை நான் நிச்சயமாக பெருமைக்காக தரவில்லை. முழுமையான சுயநலத்தோடே தருகிறேன். காரணம் பத்துபேர் பித்ரு சாந்தி செய்ய நாம் ஒத்தாசை செய்தால் நமக்கு பலமடங்கு நன்மை கிடைக்குமென்று சொல்வார்கள். அப்படி நன்மை எனக்கு கிடைக்க வேண்டும். அதனால் நான் வளர வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தருகிறேன் நோக்கம் தவறாக இருந்தாலும் அதை பொய் கூறி மறைக்க விரும்பவில்லை. இந்த சிறியவனின் கருத்துக்களில் தவறுகள் இருந்தால் மன்னிக்குமாறு வேண்டுகிறேன்.


இப்படிக்கு, 
உஜிலாதேவி வாசகன், 
கோ.தமிழ்ச்செழியன், 
வேதாரண்யம். 


    ன்புள்ள வாசகருக்கு உங்களது காணிக்கையை அன்போடு ஏற்றுக்கொண்டோம் இதுவரை மாசிமாத பித்ரு சாந்தி பூஜைக்கு தங்களது முன்னோர்களுக்கான சாந்தியை செய்யுமாறு 2837 பேர் மின்னஞ்சலிலும், தபால் வழியாகவும் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள். நீங்களும் மிக விரைவில் பதிவு செய்தால் வசதியாக இருக்கும். 

சதீஷ் குமார்.






Contact Form

Name

Email *

Message *