Store
  Store
  Store
  Store
  Store
  Store

குழந்தை பிழைக்குமா...?    குருஜி அவர்களுக்கு வணக்கம் எனக்கு மிக நெருங்கிய தோழிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை பிறந்த நாள் முதல் இன்றுவரை ஆரோக்கியமாக இருந்ததே இல்லை. மாதம் முழுவதும் மருத்துவ மனையிலேயே காலம் தள்ள வேண்டிய நிலையில் என் தோழியும் அவளது கணவரும் இருக்கிறார்கள். குழந்தையை பார்த்து பார்த்து அவர்களுக்கு தொழிலும் கெட்டுவிட்டது மருத்துவத்திற்கு செலவு செய்தே கடனும் ஏறிவிட்டது நான் இத்தோடு அந்த குழந்தையின் ஜாதகத்தை அனுப்பி உள்ளேன் கணித்து பார்த்து குழந்தை தேறுமா? தேறாதா? என்பதை தயவு செய்து கூறுங்கள் இதை என் தோழிக்கு தெரியாமல் அனுப்பி இருப்பதனால் என் பெயரை வெளியிட வேண்டாம்.

இப்படிக்கு 
பெயர் வெளியிட விரும்பாத தோழி 
டெல்லி     நீங்கள் அனுப்பிய குழந்தையின் ஜாதகத்தை ஒருமுறைக்கு இருமுறை பார்த்தேன் எப்படி பார்த்தாலும் ஒரே பதில் தான் வந்தது ஆயுள்காரகன் கேந்திரத்தில் இருக்க, லக்கினாதிபதி பலம் இழந்து போனால் ஆயுள் குறைவு என்பதே அந்த பதில். எதற்கும் மூன்று மாதங்கள் கழித்து குழந்தையின் ஆயுளை பற்றி முடிந்தால் பேசுவோம்.

Contact Form

Name

Email *

Message *