Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாக சாபம் விலக பரிகாரம்



     குருஜி அவர்களுக்கு நமஸ்காரம். எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. இதுவரை மூன்று குழந்தைகள் கருவாகி கலைந்து விட்டது என் ஜாதகத்தை எங்கே யாரிடம் கொண்டு கொடுத்தாலும் உனக்கு நாக சாபம் இருக்கிறது எனவே குழந்தை இருப்பது மிகவும் கடினம் என்கிறார்கள். எனக்கு விபரம் தெரிந்து ஒரு பாம்பை கூட நான் கொன்றது இல்லை. பிறகு எப்படி எனக்கு நாக சாபம் ஏற்படும்? நான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பது எந்த வகையில் நியாயம்? ஐயா நீங்கள் எனக்கு சரியான மார்க்கத்தை காட்டி நான் தாயாகி மகிழ்வோடு வாழ வழி கூறுங்கள். காலாகாலத்திற்கு நன்றியுடையவளாக இருப்பேன்.
.
இப்படிக்கு, 
புவனேஸ்வரி, 
மதுரை. 



       நாகதோஷம், நாகசாபம் என்ற வார்த்தைகள் ஜோதிட சாஸ்திரத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுவதை பார்க்கிறோம். இத்தகைய குறைபாடுகள் இருந்தவுடன் வெள்ளியிலோ, தங்கத்திலோ நாக உருவத்தை செய்து வழிபடுங்கள், பாம்பு வாழுகிற புற்றுக்களுக்கு பால் ஊற்றுங்கள் என்றெல்லாம் பரிகாரங்கள் கூறுவதை பார்த்தவுடன் பாம்புகளுக்கும் நமக்கும் எதோ சண்டை வந்திருக்கும் போலிருக்கிறது. அதனால் நாம் தோஷம் அடைந்து விட்டோம் என்று பலர் நினைக்கிறார்கள். 

உண்மையில் நாக தோஷம் என்ற வார்த்தையில் நாகம் என்ற ஒரே ஒரு சொல் வருவதை தவிர மற்றபடி பாம்பிற்கும் இந்த தோஷத்திற்கும் சம்மந்தமே கிடையாது. நாகப்பாம்பு மகுடி ஓசை கேட்டு ஆடும், மாணிக்க கல்லை கக்கும், இரண்டு நாகங்கள் சேரும் போது துணியால் போர்த்தினால் போர்த்திய துணி தங்கமாக மாறிவிடும் என்பதெல்லாம் எப்படி ஆதாரம் இல்லாத, அறிவுக்கு பொருந்தாத மூட நம்பிக்கையோ அதே போன்றதே நாக தோஷம் என்பதற்கும் நாகத்திற்கும் உள்ள தொடர்பு. 

ஒன்பது கிரகங்களில் ராகு-கேது ஆகிய நிழல் கிரகங்கள் இரண்டும் பாம்பு வடிவம் கொண்டது என்பது நமக்கு தெரியும். இந்த கிரகங்களின் சஞ்சாரங்களை கணக்கில் வைத்தே நாக தோஷம், நாக சாபம் என்பவைகள் கூறப்படுகிறது. உதாரணமாக ஐந்தாவது வீட்டை சுபகிரகங்கள் எதுவும் பார்க்காமல், ஐந்தாம் அதிபதியோடு ராகு சேர்ந்து இருந்தால், அல்லது ஜென்ம லக்கினத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அல்லது ஒன்பதாவது வீட்டில் ராகு கேதுக்கள் இருந்தால் அந்த ஜாதகத்தை நாக சாப ஜாதகம் என்று ஜைமினி மகரிஷி கூறுகிறார். 

உங்கள் ஜாதகத்திலும் நாக சாபம் இருக்கிறது. அதைத்தான் ஜோதிடர்கள் மிகைப்படுத்தி கூறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இதனால் உங்களுக்கு குழந்தைப்பேறு இல்லை என்று கூற இயலாது. உங்களது ஏழாவது வீடு சில பிரச்சனைகளை கூறுகிறது. அதாவது கணவன்-மனைவி இடையில் சரியான இணக்கம் இல்லை என்று தெரிகிறது. குழந்தை வேண்டுமானால் கணவன்-மனைவி மத்தியில் அன்பான உறவு வேண்டும். அது இல்லையென்றால் குழந்தை எப்படி பிறக்கும்? எனவே உங்களுக்குள் இருக்கும் சிக்கல்களை தீர்க்க வழிபாருங்கள் தானாக குழந்தைப்பேறு அமையும். 

சரி இனி விஷயத்திற்கு வருவோம். இப்படி நாக சாபம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பார்ப்போம். இது கிரகங்களின் சஞ்சாரங்களினால் உருவான சிக்கல் என்பதனால் கிரகங்களின் ஈர்ப்பாற்றலை சரியான முறையில் பெற்றாலே மிக சுலபமாக வெற்றி பெற்று விடலாம். எனவே ராகு-கேது கிரகத்தின் நல்ல ஈர்ப்பை பெற பல வண்ண நிறத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பூவை அது எந்த பூவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தினசரி பயன்படுத்துங்கள் அதாவது உடம்பில் படுகிற வண்ணம் வைத்துக்கொள்ளுங்கள் சாபம் விலகும். காளிங்க நர்த்தனம் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணனை வழிபட்டாலும் உடனடி விடுதலை பெறலாம்.

Contact Form

Name

Email *

Message *