( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சூன்யத்தை அறிந்துகொள்ள வழி     குருஜி அவர்களுக்கு வணக்கம். எனது குடும்பத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு நோய் தொற்றிக்கொண்டே இருக்கிறது. கடந்த மூன்றுவருடமாக எங்கள் குடும்பமே நோய் பாதிப்பால் அல்லல்படுகிறது. வாஸ்துப்படி வீடும் நன்றாக இருக்கிறது. ஜோதிடப்படி அனைவரின் கிரகமும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனாலும் பிரச்சனை தீரவில்லை. இதற்கு என்ன செய்வது பரிகாரம் என்ன? என்பதை தயவு செய்து கூறி எங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தருமாறு உங்கள் பாதங்களை தொட்டு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
உதயகுமார்,
சென்னை.
   ந்த காரணமுமே இல்லாமல் நோய் வருகிறது என்றால் என்னைப்பொறுத்தவரை அதற்கு இரண்டு சூழ்நிலைகள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒன்று உங்கள் வீடு அமைந்துள்ள பகுதி சுகாதாரம் இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டு உங்கள் எதிரிகள் யாராவது அபிசார பிரயோகம் என்ற சூன்யத்தை செய்திருக்க வேண்டும்.

சுகாதாரம் இல்லாத இடத்தில் வீடு அமைந்திருந்தால் அதை நீங்கள் மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை. ஏவல், பில்லி, சூன்யத்தால் பாதிப்பு இருந்தால் அது இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள இப்போது நான் சொல்லுகிறப்படி பரிசோதனை ஒன்றை செய்து பாருங்கள். அதை வைத்து அடுத்தகட்டத்தை யோசிக்கலாம்.

வளர்பிறையில் வரும் சஷ்டி தினத்தில் ராஜ அலங்காரத்தோடு இருக்கும் பழனி முருகனின் திருவுருவப்படத்தை பூஜை அறையில் வைத்து நூற்றி எட்டு   மல்லிகைப்பூவால் “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தால் சாமிக்கு அர்ச்சனை செய்து வணங்குங்கள். தொடர்ச்சியாக பதினைந்து நாட்கள் செய்து வாருங்கள். இந்த நாட்களில் நோயின் தாக்கம் குறைந்து பூஜை காலம் முடிந்தப்பிறகு அதிகரித்தால் கண்டிப்பாக அது சூன்யத்தாக்குதலே என்பதை முடிவு செய்து விடலாம். முடிவு செய்த பிறகு அதை எடுப்பது பெரிய காரியம் அல்ல.
Next Post Next Post Home
 
Back to Top