Store
  Store
  Store
  Store
  Store
  Store

கருச்சிதைவை தடுக்கும் பரிகாரம்
    சுவாமிஜி அவர்களுக்கு எனக்கு திருமணமாகி ஆறுவருடங்கள் முடிந்து விட்டது. இதுவரை நான்குமுறை கர்ப்பம் தரித்து ஐந்தாவது மாதம் வருவதற்கு முன்பே கலைந்து போய்விட்டது. மருத்துவர்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என்கிறார்கள் ஜோதிடர்கள் உனக்கு கர்ப்பத்தோஷம் இருக்கிறது குழந்தை பெறுவது மிகவும் கடினம் என்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது குழந்தை வேண்டுமென்று தவியாக தவிக்கிறேன். நான் வேண்டாத கடவுள் இல்லை. போகாத கோவில் இல்லை உங்களை தெய்வமாகவே மதித்து கேட்கிறேன் நான் அம்மா என்ற பேரின்ப நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் செய்ய சித்தமாக இருக்கிறேன் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். 

இப்படிக்கு, 
மைதிலிராகவன், 
மடிப்பாக்கம்.
   திருமணம் முடியாமல் முதிர் கன்னியாக வீட்டில் இருக்கும் போது நம்மை விட சிறியவர்களுக்கெல்லாம் திருமணம் நடக்கிறதே நமக்கு இன்னும் நடக்கவில்லையே? என்ற ஏக்கம் பிறக்கும். வாழ்க்கையில் வேறு எந்த சுகமும் வேண்டாம் மணமாலையோடு வாழுகிற ஒரு நாள் வாழ்க்கை போதும் என்ற ஆசை துரத்தும். 

மணமான பிறகு கணவன் மட்டும் குடிகாரனாக, முரடனாக இருந்துவிட்டால் போதும் ஐயோ எனக்கு பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம் ஆத்துக்காரர் மட்டும் சாந்தமாக, சமத்தாக இருந்தால் போதும் என்றும் எண்ணத்தோன்றும் இப்படி ஒவ்வொன்றாக இல்லாததை நினைத்து கிடைக்காததற்காக ஏங்கி கவலைப்படுவது தான் மனிதனது இயல்பு. 

இன்று குழந்தை இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கின்ற மனது நாளை குழந்தையின் ஆரோக்கியத்தை பற்றி, கல்வியை பற்றி, வாழ்க்கையை பற்றி, எதிர்காலத்தை பற்றி கவலைப்பட்டுகொண்டே போகுமே தவிர ஒருநாளும் ஒருபோதும் ஓய்வெடுத்து நிற்காது இது இயற்கையான சுபாவம். 

அதுவும் மனிதன் தனது கைவசம் இல்லாத பொருளுக்காக ஏங்கி துடிக்கும் துடிப்பிருக்கிறதே அதை கண்ணால் பார்த்தால் பாறை கூட தண்ணீரை போல உருகி ஓடிவிடும் என்று தோன்றும். அந்த பொருள் கிடைத்துவிட்டால் பிறகு அதன்மேல் உள்ள ஆசை படிப்படியாக குறைந்து விடும். ஆனால் இப்படி குறைவது பொருளின் மீதுள்ள ஆசையாக இருக்கலாமே தவிர குழந்தையின் மீதுள்ள ஆசையாக மட்டும் இருக்காது. 

ஒரு குழந்தை பிறந்தால் மட்டும் போது பிறகு எதுவுமே வேண்டாம் என்பார்கள். அதன் பிறகு ஐயோ என் பிள்ளை உடன் பிறந்தார்கள் யாருமே இல்லாமல் தனிமரமாக நிற்கிறதே அதற்கு ஒரு இரத்த சொந்தம் வேண்டாமா? என்று அடுத்த பிள்ளைக்கு, பிள்ளையார் சுழி தேடுவார்கள். 

இப்படிப்பட்ட உலகத்தில் உனக்கு குழந்தையே கிடையாது, என்று ஒரு பெண்ணிடம் சொன்னால் அவளால் எப்படி தாங்க முடியும்? இந்த கேள்வி கேட்ட அம்மையாரின் மனக்கொதிப்பு நமக்கு புரிகிறது. இவரின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் கண்டிப்பாக குழந்தைபேறு உண்டு என்பதும் தெளிவாக தெரிகிறது. 

பொதுவாக லக்கினத்திற்கு நான்காவது வீடு, செவ்வாயின் ஆட்சி வீடாக வந்தால் அந்த ஜாதகத்தை கர்ப்ப தோஷமுள்ள ஜாதகம் என்று கூறுவார்கள். அதற்காக அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று சுவாமியின் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இதை மாதத்தில் முதல் செவ்வாய் கிழமை துவங்கி இருபத்தி ஏழு செவ்வாய் கிழமைகள் வரை தொடர்ந்து செய்து வர வேண்டும். கடைசி செவ்வாய் அன்று பள்ளிக்கூட குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்க வேண்டும். இப்படி செய்தால் கர்ப்ப தோஷம் விலகும் கண்ணனை போன்ற குழந்தை பிறக்கும்.Contact Form

Name

Email *

Message *