Store
  Store
  Store
  Store
  Store
  Store

கால்டுவெல்லின் விபரீத கற்பனை !


கேள்வி 1

    2020 ஆம் வருடம் ஜனவரி மாதம் அதாவது தைமாத பொங்கலுக்கு உள்ளூரில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக சில இளைஞர்கள் குருஜியை ஆலோசனையை பெற ஆசிரமத்திற்கு வந்திருந்தார்கள் அவர்களோடு குருஜி பல விஷயங்களை பற்றி ஆர்வத்தோடு கலந்துரையாடினர் அப்போது அதிலிருந்த ஒரு இளைஞன் ஆரியம் திராவிடம் என்றெல்லாம் சிலர் பேசுகிறார்களே அப்படி என்றால் என்ன? அதனுடைய தோற்றத்திற்கு என்ன காரணம் என்று கேட்டான் அதற்கு குருஜி மிக விரிவாக பதிலை சொன்னார். அவர் சொன்ன பதில்களும் இளைஞர்களின் கேள்விகளும் மொத்த தொகுப்பாக இந்த சிறிய நூல் வெளிவருகிறது 

விடுதலைக்கு முந்தைய தமிழகம், சுதந்திர போராட்டம், தியாகம் என்ற பாதையில் நடை போட்டுக்கொண்டிருந்தது. விடுதலை பெற்ற பிறகு, நமது தமிழகம் இரண்டே இரண்டு வார்த்தைகளோடு சண்டைபோட்டு கொண்டு புறப்பட்ட இடத்திலேயே அரசியல் ரீதியில் வளராமல் நின்றுகொண்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய அந்த இரண்டு வார்த்தை ஆரியம், திராவிடம் என்பது. தமிழகம் வளராமல் போனதற்கு ஆரியத்தின் அடக்குமுறையே காரணம் என்று ஒருசாராரும், திராவிடம் என்ற மாயவலையில் பின்னிக்கொண்டு கிடப்பதுவே வளர்ச்சி இல்லாததற்கு ஒரு காரணம் என்று இன்னொரு சாராரும் பேசி வருகிறார்கள். இந்த வாத பிரதிவாதங்கள் முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. உண்மையில் ஆரியம், திராவிடம் என்ற மாயைகள் எப்போது ஒழிகிறதோ அப்போது நாடு உருப்படும் என்று குருஜி விவாதத்தை துவங்கினார். 

கேள்வி:-    நீங்கள் கூறுவது விசித்திரமான காரணம். தமிழ்நாடு வளராமல் போனதற்கு முக்கிய காரணம் அது இந்திய யூனியனோடு ஒன்றுபட்டு இருப்பது தான் இந்தியா எப்போதுமே ஒரு நாடாக இருந்தது இல்லை. வெள்ளைக்காரன் தனது நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்தான். சிறிய மாநிலங்கள் பெரிய வளர்ச்சி பெறும் என்ற வாதம் சரியென்றால், சிறிய நாடுகள் மட்டும் சீரழிந்து விடுமா என்ன? எனவே தமிழகத்தை மீட்டெடுத்தால் மட்டுமே அது முடியும் என்று சில தமிழ்          தேசியவாதிகள் கூறுகிறார்கள். எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு அது சரியான வாதமாகவே தெரிகிறது. 

ஒருபக்கத்தில் காவேரி தண்ணீர் வர மறுக்கிறது, இன்னொரு பக்கத்தில் ஆந்திரா பாலாற்றை தடுக்கிறது. கேரளாவோ பெரியாறு அணையை உடைப்பேன் என்கிறது. இலங்கை இராணுவம் நமது மீனவர்களை குண்டுகள் போட்டு சாகடிக்கிறது இவைகளை எல்லாம் கேட்பதற்கு ஒன்றுபட்ட இந்தியாவில் யாருமே கிடையாது ஒடுக்கப்பட்ட தமிழனின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு வழியே கிடையாது. எனவே ஆரியம், திராவிடம் என்ற பழைய கதையை விட்டுவிட்டு தமிழ் தேசியம் என்பது என்னவென்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

குருஜி:- இன்று நிறைய தமிழ் தேசியவாதிகள் இந்தியா எப்போதுமே ஒன்றுபட்டு இருந்தது இல்லை. அது பல நாடுகளின் கூட்டுக்கலவை என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கில் பார்க்கும் போது, அவர்கள் கூறுவதை தவறு என்று கருத இயலாது. ஆனால் அவர்கள் இதே அரசியல் காரணம் மறுமுனையிலும் இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது. இன்று தமிழகம் என்றும், தமிழ்நாடு என்றும் அழைக்கின்றோமே இந்த தமிழ் மாநிலம் இன்று இருப்பது போல முன்பு பழைய காலத்திலும் இருந்ததா? நிச்சயமாக இது ஒரே நாடாக இருந்தது இல்லை. 

தமிழ்நாட்டில் தெற்கு பகுதி தன்னை பாண்டியநாடு என்று அழைத்தது. அந்த பாண்டிய மண்டலத்திற்குள் பல்வேறுபட்ட குட்டி நாடுகள் முளைத்திருந்தன. சேரநாடு, சோழநாடு என்ற மற்ற இரண்டு பிரிவுகளுக்குள்ளும் எண்ண முடியாத அளவிற்கு நாடுகள் நிறைந்து கிடந்தன. இந்த மூன்று மண்டலங்களை தவிர கொங்குநாடு, தொண்டைநாடு, பல்லவநாடு, நடுநாடு என்று ஏகப்பட்ட நாடுகள் இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரியவேண்டுமானால் தமிழ் நாட்டிலிருந்தும் இந்த பகுதிகள் பிரிக்கப்பட வேண்டுமென்று கூப்பாடு எழும். ஒருநிமிடம் யோசித்து பாருங்கள்? மதுரையில் இருந்து விருதுநகருக்கு செல்வது என்றால் பாஸ்போர்ட், விசா வேண்டும் இல்லை என்றால் போலீஸ் பிடித்துவிடும். இப்படி ஒரு தமாஷ்தான் இந்தியா பிரிந்தால் நடக்கும். இந்தியாவை பிரிப்பது என்பது குரூரமான வக்ர கற்பனை. 

மனித பண்பு என்பது, தமிழன் பண்பு என்பது உலகம் தழுவியதே தவிர ஒரு வட்டத்திற்குள் அடங்கியது இல்லை. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகம் மொத்தத்தையும் சகோதர பாங்கில் பார்த்த தமிழனை ஆரியன், திராவிடன் என்ற மாயக்கற்பனையை கிளறிவிட்டு பிரிவினைவாதிகளை போல ஆக்கினார்கள். சில ஆதிக்க சக்திகள் அவர்களின் வழி தோன்றல்களே இன்று தனி தமிழ்தேசியம் பேசிக்கொண்டு அலைகிறார்கள். தமிழர்கள் ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்க மாட்டார்கள் அது அவர்களுக்கு உகந்ததும் அல்ல. 

கேள்வி:- தனி தமிழ்நாட்டை பற்றி பேசுபவர்களுக்கு நல்ல பதில் சொன்னீர்கள் இன்று ஒவ்வொரு மாநிலத்தையும், தனித்தனியாக பிரிக்க வேண்டுமென்று கூறுபவர்கள் நாளை ஒவ்வொரு ஊரையும் பிரிக்கச்சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. தமிழன் என்ற அடையாளத்தை நாம் இழக்காமல் இருக்க வேண்டுமானால் இந்தியாவோடு இணைந்து வாழ வேண்டும். அதை விட்டு விட்டு இயற்கைக்கு புறம்பான வழியில் சென்றால் அழிவு நிச்சயம்.

ஆரிய, திராவிடம் என்பது என்னவென்று எங்களுக்கு தெளிவாக சொல்லுங்கள். நாங்கள் ஆரியர்கள், வெளியிலிருந்து வந்தவர்கள். திராவிடர்கள் இந்த நாட்டிலேயே வாழ்ந்த பூர்வகுடி மக்கள் என்றுதான் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறோம். அதற்கு மேலும் அதை பற்றிய அதிக விபரங்கள் எங்களுக்கு தெரியாது. ஆனாலும் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்று பாடும் போது நான் திராவிடன் என்பதில் பெருமைப்படுகிறோம். நீங்கள் கூறுகின்ற வார்த்தைகள் வைத்து பார்த்தால் திராவிடம் என்பதே புனையப்பட்ட வார்த்தைபோல் தெரிகிறது உண்மையில் திராவிடம் என்றால் என்ன?

குருஜி:- உங்கள் பழைய பாடல் புத்தகங்களில், பாரதநாட்டின் பூர்வ குடிமக்கள் திராவிடர்கள் என்றும், அவர்கள் ஆரியர்கள் நாட்டிற்குள் நுழைந்தவுடன் தோற்கடிக்கப்பட்டு தென்பாரதத்திற்கு துரத்தப்பட்டார்கள் என்றும் படித்திருப்பீர்கள். இது மட்டுமல்ல, ஆரியர்கள் வெண்மையான சருமம், நெடிய தேகம், நீளமான தலைமுடி, நீண்ட மூக்கு உடையவர்கள் என்றும்; திராவிடர்கள் கருமையான நிறம், குட்டையான தேகம், அகண்ட மூக்கு, சுருட்டை முடி கொண்டவர்கள் என்றும் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். உண்மையில் சொல்வது என்றால் நீங்கள் பாடப் புத்தகத்தில் படித்த இந்த விஷயத்தில் ஒரு வார்த்தையில் கூட உண்மை இல்லை. முழுக்க முழுக்க கற்பனையாக உருவாக்கி விஞ்ஞானப்பூர்வமாக வார்த்தைகளை சேர்த்து நடமாடவிட்ட போலி சரித்திர ஆதாரமே ஆரிய திராவிட கதைகள். 

இந்த ஆரிய, திராவிட கதைகளை உருவாக்கிய பெருமை திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் உட்கார்ந்து கொண்டு கிறிஸ்தவ மதத்தை பரப்பிய கால்டுவெல் போப்பையே சேரும். இவரது கற்பனையை உண்மை என்று ஏற்றால் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்கு ஆரியர்கள் வந்தார்கள் என்றால் அப்படி வருவதற்கு முன்னால் அவர்கள் எங்கே வாழ்ந்தார்கள். அவர்கள் பூர்வதேசம் என்ன? ஆரிய தேசம் என்பது உலகத்தில் எந்த மூலையில் இருந்தது என்ற பல கேள்விகளை கேட்க வேண்டிய சூழல் வரும். பழங்கால சரித்திர ஏடுகளிலும், புராணங்களிலும், காந்தாரம், சாளுக்கியம் என்று பாரதத்திற்கு வெளியில் உள்ள பல தேசங்கள் காட்டப்பட்டிருக்கிறதே தவிர ஆரிய தேசம் என்ற ஒன்று இருந்ததாக எங்கேயும் யாரும் சொன்னது இல்லை. 

ஆரியர்களை வந்தேறிகள் என்று கூறுகிறவர்கள், அவர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளியிலிருந்து ஊடுருவினார்கள் என்கிறார்கள். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. வேதங்கள் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன என்று நாம் சொன்னாலும், சில விஞ்ஞான பார்வையாளர்கள் அதை ஒத்துக்கொள்வது இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் வேதங்கள் தோன்றி இருக்க வேண்டும் என்கிறார்கள். அவர்கள் கூற்றுப்படி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதங்களிலோ, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் சங்க இலக்கியங்களிலோ ஆரியநாடு என்று தனிநாடு குறிப்பிடப்படவில்லை. அது மட்டுமல்ல ஆரியர்களைப்பற்றி பல்வேறு தகவல்களை கொண்டுள்ள அந்த நூல்களில் ஒன்றில் கூட ஆரியர்கள் பாரத தேசத்திற்கு ஊடுருவி வந்தார்கள் என்ற குறிப்புகள் கிடையாது. கால்டுவெல் போன்ற காலனி ஆதிக்க மத பிரச்சாரர்களின் கற்பனையில் மட்டுமே அந்த தகவல்கள் இருந்ததாக கூறலாம். 

கேள்வி:- அப்படி என்றால் ஆரியம் என்றால் என்ன? ஆரியன் என்று யாருமே அழைக்கப்படவில்லையா? முழுமையான கற்பனை என்றால் ஆரியன் என்ற இந்த வார்த்தை கூட கால்டுவெல் கண்டுபிடித்ததா? 

குருஜி:-   ஆரியன் என்ற வார்த்தையை கால்டுவேல்தான் கண்டுபிடித்தார். அவர்தான் அதை முதன் முதலாக பயன்படுத்தினார் என்று நான் சொன்னால் வரலாறு தெரியாத சிறிய குழந்தை நான் என்று அர்த்தமாகிவிடும். ஆரியன் என்ற வார்த்தை வேதங்களில் இருக்கிறது, புராணங்களில் இருக்கிறது, பகவத்கீதை யில் இருக்கிறது. தமிழ் இலக்கிய நூல்களில் இருக்கிறது, இந்தியா முழுமைக்கும் இலக்கியத்தரம் வாய்ந்த எத்தனை மொழிகள் இருக்கிறதோ அத்தனை மொழியிலும் ஆரியன் என்ற வார்த்தை இருக்கிறது. ஆனால் அந்த வார்த்தையை ஒரு இணைக்குழுவாக ஒரு இனக்குழுவின் பெயராக உருமாற்றிய பெருமை கால்டுவெல்லை சாரும் என்று துணிந்து சொல்லலாம். 

நமது சாஸ்திரங்கள் தர்மத்தின் வழியில் நிற்பவர்களை, அதர்மம் செய்ய அஞ்சுபவர்களை, ஆரியன் என்று அழைக்கிறது. மனிதப்பிறவியின் மதிப்பை உணர்ந்து மனித நாகரீகத்தின் செழுமையை அறிந்து, அவைகளை மேம்படுத்துவதற்காக உழைக்கும் மக்களை ஆரியர்கள் என்றும் அழைத்தார்கள். மதங்கள் என்பது அது எந்த மதமாக இருந்தாலும், மனிதனை விலங்கு நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதே அவைகளின் நோக்கமாகும். அத்தகைய உயர்ந்த மதக்கோட்பாடுகளை தங்களது வாழ்வில் ஒரு சிறிது கூட வழுவாமல் கடைபிடிப்பவர்களை வளர்ச்சி அடைந்த மனிதர்கள் என்ற பொருள் வரும்படி ஆரியர்கள் என்று அழைக்கும் பழக்கம் நமது நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. சுருக்கமாக சொன்னால் ஊருக்கும், உறவுக்கும் உழைப்பவன் எவனாக இருந்தாலும் அவனை ஆரியன் என்பது நமது மரபு. 

அதன்படி கடமையை செய்ய தவறுபவன் ஆரியன் அல்லாதவன் என்று அழைப்பதும் நமது மரபாகும். உதாரணமாக போர் புரிய வேண்டிய நேரத்தில் போர் செய்யாமல் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, வெற்று வேதாந்தங்கள் பேசிக்கொண்டு இந்த அர்ஜுனனை பார்த்து கிருஷ்ணன் அனார்யா என்று அழைப்பதை கீதையில் காணலாம். அதாவது ஆரியன் அல்லாதவன் என்பது பொருளாகும். ஆகவே தர்மத்தின் வழியிலே செல்பவன் சந்தேகத்திற்கே இடமில்லாமல் ஆரியன். தர்மத்தின் வழியில் செல்லாதவன் ஆரியன் அல்லாதவன் இங்கே மிக நன்றாக கவனிக்க வேண்டும். ஒருவனை ஆரியத்திற்கு விரோதமாக இருப்பவனை, ஆரியன் அல்லாதவன் என்று அழைப்பது வழக்காக இருந்திருக்கிறதே தவிர அவனை ஒருபோதும் திராவிடன் என்று யாரும் அழைக்கவில்லை. 

கேள்வி:- அப்படி என்றால் ஆரியம் என்ற வார்த்தை இருக்கும் காலத்திலேயே திராவிடம் என்ற வார்த்தையும் இருக்கிறது. அப்போது இந்த திராவிடம் என்ற வார்த்தை யாரை சுட்டிக்காட்டுகிறது? அவர்கள் ஆரியர்களின் விரோதிகள் இல்லை என்றால் பிறகு யார்? http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *