Store
  Store
  Store
  Store
  Store
  Store

நரம்பு தளர்ச்சி போக்கும் மந்திரம்    குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவன். எனக்கு தமிழ் தெரியாது. என் நண்பர் ஒருவர் உங்களை பற்றி கூறினார். அவர் மூலமாக இந்த கடிதத்தை உங்களுக்கு தமிழில் எழுதுகிறேன். எனக்கு முப்பத்திமூன்று வயதாகிறது, இன்னும் திருமணம் ஆகவில்லை. காரணம் திருமணம் செய்வதற்கு பயமாக இருக்கிறது. சிறிய வயதில் இருந்தே என் உடல் நடுங்கிக்கொண்டே இருக்கும். உள்ளங்கையிலும், முகத்திலும் அளவுக்கதிகமான வியர்வை வரும். மிகவும் மெலிந்து காணப்படுவேன். பெரிய சத்தத்தை கேட்டால் கூட உடல் நடுங்கும். இதயம் வேகமாக அடித்துக்கொள்ளும். படபடப்பில் அரைமணிநேரம் எதுவும் செய்ய இயலாது. 

இங்குள்ள டாக்டர்களிடம் காண்பித்ததற்கு உனக்கு நரம்பு தளர்ச்சி. நல்ல உடற் பயிற்சியும், தொடர்ந்து மருந்தும் எடுத்துக்கொண்டால் தான் ஓரளவு சுகம் கிடைக்கும் என்கிறார்கள். திருமணத்தை அவசரப்பட்டு செய்யாதே என்றும் அறிவுரை தருகிறார்கள். இந்த நோய் எனக்கு பிறவியில் இருந்தே வந்தது கிடையாது பதினைந்து வயது வரை நன்றாக இருந்தேன். அதன் பிறகு என் சித்தப்பா ஒருவர் சாலை விபத்தில் மரணம் அடைந்ததை நேரில் பார்த்த போது மயங்கி விழுந்து விட்டேன். அன்று முதல் எனக்கு இந்த நோய் துவங்கி விட்டது. எனவே இது மருத்துவர்கள் சொல்லுகிறபடி தீராத வியாதி அல்ல, கண்டிப்பாக தீரும் என்று நம்பிக்கை எனக்கிருக்கிறது. 

உங்களை போன்ற அருளாளர்களால் மட்டுமே என் வியாதியின் மூலத்தை அறிந்து நிவாரணம் தர முடியும். கண்டிப்பாக இந்த ஏழையின் குரல் உங்கள் காதுகளில் விழுமென்று நம்புகிறேன். நீங்கள் ஆன்மீகத்தில் மட்டுமல்ல, தாந்திரீக சாஸ்திரத்திலும், வைத்திய சாஸ்திரத்திலும் உயர்ந்தவர் என்று என் நண்பர் கூறினார். அது முதல் நீங்களே எனது சரியான வழிகாட்டி என்று நம்பிக்கையோடு இருக்கிறேன். என் வாழ்க்கையில் விளக்கேற்றி வைப்பீர்கள் என்று நம்புகிறேன். 

இப்படிக்கு, 
தாமோதர் செளதாலா, 
ஹரியானா.     ண்மையாகவே இணையதளம் என்ற ஊடகம் மிகச்சிறப்பு வாய்ந்தது தான். எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மனிதர்களை சில நிமிட நேரங்களிலேயே அறிமுகப்படுத்தி இணைத்து விடுகிறது. அந்த வகையில் பல நாடுகளிலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும், எனது தமிழ் மொழியே தெரியாத பலர் என்னை அறிந்து என்னோடு தொடர்பு கொண்டு மிகச்சிறந்த நட்புக்கு இலக்கணமாக இருந்து வருகிறார்கள். அதற்காக இந்த ஊடகத்திற்கு நன்றி செலுத்த வேண்டும். 

அடுத்து இவருடைய பிரச்சனைக்கு வருவோம். இவருக்கு ஏற்பட்டிருப்பது இப்போது உடல்நல கோளாறாக மாறி இருக்கிறதே தவிர, ஆரம்ப காலத்தில் அது உடல் கோளாறாக இல்லை. சிறிய தந்தையின் அகால மரணத்தை கண்ணால் பார்த்த அதிர்ச்சி அவர் இதயத்தையும், வயிற்றையும் நேரடியாக பாதித்ததனால் நரம்பு மண்டலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது அதன் தொடர்ச்சியே இன்று நரம்பு தளர்ச்சியாக பரிணாமம் அடைந்துள்ளது. 

சில நேரங்களில் நாம் நோய்க்கான மருத்துவத்தை பார்கிறோமே தவிர, நோயின் மூலத்தை கவனிப்பது இல்லை. அதனால் தான் உலகில் மிகச்சிறந்த மருத்துவ அறிஞனான திருவள்ளுவர் நோய்மூலத்தை அறிந்து சிகிச்சை செய் என்று அறிவுறுத்தினார். நோயின் தோற்றுவாயை அடைக்கவில்லை என்றால் அதிலிருந்து கொட்டிக்கொண்டிருக்கின்ற வேதனையை நிறுத்த முடியாது. இதுவரை இந்த அன்பரின் நோய் கவனிக்கப்பட்டிருக்கிறதே தவிர மூலத்தை பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். 

இவருடைய வாய்மொழியும், இவர் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலையும் இவரது பாதிப்புக்கான காரணம் நரம்பில் இல்லை, மூளையில் இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. எனவே மூளையை அழுத்துகிற பாரத்தை உடனடியாக போக்க வேண்டும் இதற்கு மருந்தும் வேண்டும், மந்திரமும் வேண்டும். இரண்டும் இல்லை என்றால் ஒன்றும் நடக்காது. முதலில் மருந்தை சொல்கிறேன். 

ஹிந்தியில் சந்திரிகா அல்லது சோட்டாசந்த் என்று ஒரு மூலிகை சொல்வார்கள் அதற்கு நமது தமிழ் நாட்டில் சர்பகந்தி என்று பெயர் உண்டு. இந்த மருந்தை கனிஷ்கர் நமது நாட்டை ஆண்ட காலத்தில் அதாவது ஆயிரத்தி எண்ணூறு வருடத்திற்கு முன்பு ராஜ வைத்தியத்தில் சேர்த்துக்கொண்டதாக காரஹா என்ற வைத்தியநிபுணர் கூறுகிறார். அரசர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், இரத்த கொதிப்பு, நரம்பு தளர்ச்சி போன்றவைகளை இந்த மருந்து குணப்படுத்துமாம். சர்பகந்தி சமூலம் என்று தமிழ்நாட்டு மருந்து கடைகளிலும், வடநாடுகளில் சோட்டாசந்த் சமூலம் என்றும் மருந்து கடைகளில் இது கிடைக்கும். 

இந்த மருந்தை வாங்கி ஆறு மாதத்திற்கு தினசரி மூன்று வேளை உண்டு வரவேண்டும். கூடவே ரோஜா குல்கந்து சேர்த்து கொள்ளவும். நன்றாக காய்ச்சிய பசும்பாலில் குங்குமப்பூ போட்டு சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ச்சியாக ஆறுமாதம் சாப்பிட்டால் கண்டிப்பாக இந்த நோய் குணமாகி விடும். கூடவே "ஓம் கங் கணபதே நம" என்ற கணபதியின் மூல மந்திரத்தை காலை, மாலை இரண்டு வேளையிலும் இளம் வெயில் உடம்பில் படுமாறு உட்கார்ந்து நூற்றியெட்டு முறை ஜபம் செய்ய வேண்டும். மிக உறுதியாக கூறுகிறேன் நரம்பு தளர்ச்சி என்பது இருந்த இடம் தெரியாமல் பறந்து போகும். 
Contact Form

Name

Email *

Message *