Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஊனம் உள்ள குழந்தை யாருக்கு பிறக்கும்?



    குருஜி அவர்களுக்கு வணக்கம். என் மகளின் ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும் இவள் பெற்றெடுக்கும் குழந்தையால் ஆறாத துயரம் ஏற்படும் என்று கூறுகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று யாரும் வெளிப்படையாக கூற மறுக்கிறார்கள் குருஜி. அந்த காரணத்தையும் கூறி அதிலிருந்து விடுபட வழியும் கூறுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
காயத்ரி ரகுராமன்,
சிங்கப்பூர்.



ரு பெண்ணின் ஜாதகத்தில், நான்காம் இடத்தில் ராகு அல்லது சனி ஆட்சியோ உச்சமோ பெற்று அமர்ந்தால் அந்த பெண் ஊனம் உள்ள குழந்தையை பெற்றெடுப்பாள் என்பது ஜோதிட விதியாகும். தனது ஆயுள் காலம் வரையில் இயலாத அந்த குழந்தையை பார்த்து பார்த்து வருந்த வேண்டி வரும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

இந்த மாதிரியான குறைகள் பூர்வஜென்ம தோஷத்தால் வருவதாகும். பரிகாரங்கள் மூலம் இந்த ஜென்மாவில் அத்தகைய துயரங்களிலிருந்து தப்பித்துக்கொண்டாலும் வரக்கூடிய ஜென்மாக்களில் துயரத்தை அனுபவித்தே தீரவேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. அதனால் தான் எப்போதும் நல்லதை நினை, நல்லதை சொல், நல்லதை செய் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

இன்றைய துயரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள வழி தேடுவதும், நாளைய துயரத்தை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று எண்ணுவதும் மனிதனது இயற்கை சுபாவம் என்றாலும் அவர்களுக்கு பரிகாரங்களை கூறுவது ஒருவகையில் நமது கடமையாகிறது. நான்காம் இடத்தில் சனி இருந்தால் அந்த பெண் தினசரி காக்கைக்கு உணவு வைக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு முறையும் கர்ப்பம் தரிக்கும் போதும் திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை வழிபட வேண்டும்.

நான்காம் இடத்தில் ராகு இருந்தால், உள்ளூர் அம்மன் ஆலயங்களில் உள்ள நாக தேவதைகளை வழிபட வேண்டும். கர்ப்ப காலத்தில் ராகு ஸ்தலங்களுக்கு சென்று அபிஷேக ஆராதனையோடு வழிபாடு நிகழ்த்த வேண்டும். இவைகள் எதையும் செய்ய முடியாமல் அயல்நாட்டில் இருப்பவர்கள் வெள்ளெருக்கன் வினாயகரை இயற்கை உபாதை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் விநாயகர் அகவல் பாராயணத்தோடு வணங்க வேண்டும்.


Contact Form

Name

Email *

Message *