Store
 Store
 Store
 Store
 Store
 Store

பணப்பிரச்சனை தீர பரிகார பூஜை   மெரிக்க நாட்டில் இரவுப்பொழுது என்றால் இந்தியாவில் பகல் நேரம். ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபட்ட நேரங்கள் இருக்கின்றன. இவை புவியியல் விதி. பூமியில் நேரங்கள் மாறுபடுவது போல, அயன வெளியில் இருக்கும் கிரகங்களில் நாட்களே மாறுபடும். நமக்கு ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரமாகும். சனிக்கிரகத்தில் அறுபது நாள் ஒருநாளாக இருக்கிறது. இப்படி ஒவ்வொன்றிலும் வேற்றுமை என்பது இருந்து கொண்டே இருக்கிறது.

இதே போலவே, நமது புராணங்களும், பண்டையகால சாஸ்திரங்களும் மனிதர்களுக்கு ஒரு நேரம் என்றால் தேவர்களுக்கு அந்த நேரக்கணக்கு வேறு ஒன்றாக இருக்கும் என்று சொல்கிறது. உதாரணமாக தேவர்களுக்கு பனிரெண்டு மாதங்கள் கூடிய ஒரு வருடம் ஒரு நாளாக இருக்கிறது. அதாவது நமக்கு ஆறுமாதம் என்பது அவர்களுக்கு பகல் பொழுது. மீதமுள்ள ஆறுமாதம் இரவுப்பொழுது.

இன்னும் விளக்கமாக சொல்வது என்றால் தைமாதம் முதல் ஆனிமாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடிமாதம் முதல் மார்கழிமாதம் வரையில் இரவுப்பொழுதாகவும் தேவர்களுக்கு இருக்கிறது. இதில் தைமாதம் என்பது தேவர்களின் காலைப்பொழுது. தைக்கு முந்தைய மார்கழி மாதம் அதிகாலைப்பொழுதாக, அதாவது பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறது.

விடியற்காலைப்பொழுதின் சுகம் நமக்கு தெரியும். அதுவும் மார்கழி மாதத்தின் விடியற்காலை நேரம் ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ்நாளில் சந்திக்கும் அதி உன்னதமான கற்பனையில் மட்டுமே அனுபவிக்ககூடிய சொர்க்க பொழுதாகும். அந்த நேரத்து பஜனையும், பெருமாள் கோவில் பொங்கலும், ஆற்று நீரில் கதகதப்பான குளியலும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வர்ணஜால உணர்வுகளால் மனிதனுக்கே மார்கழிப்பொழுதின் சுகம் இப்படி என்றால் தேவலோகத்து மார்கழி எப்படி இருக்கும்.

அதனால் தான் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் சொன்னான். மார்கழி மாதத்தின் காலைப்பொழுது உடலை புத்துணர்ச்சியோடு வைக்கிறது. மனதை குழப்பமின்றி அமைதியாக வைக்கிறது. புத்தியை தடுமாற்றம் இன்றி தெளிவாக நிற்கச்செய்கிறது கடவுளுக்கும், மனிதனுக்கும் ஒரு நல்ல பாதையாக மார்கழி மாதம் அமைகிறது.

மார்கழி மாதத்தில் செய்யப்படும் பூஜைகளும், பிரார்த்தனைகளும் சந்தேகமே இல்லாமல் உடனடியாக நிறைவேறும். இது அனுபவத்தில் கண்ட முடிவு. கொட்டுகிற பனி ஊரெங்கும் உள்ள இதயங்களை அமைதியாக உறங்கச் செய்கிறது. நடுநிசியில் ஊளையிடும் நாய்கள் கூட கதகதப்பான இடம் தேடி உறங்கப்போய்விடுகிறது. அமைதி ஊர் முழுவதும் அமைதி. இந்த நேரம் வானத்திற்கும், பூமிக்கும் பிரபஞ்ச ஆற்றல் அலை போன்ற பாதையாக விரிகிறது. அதனால் தான் நமது பிரார்த்தனை உடனடியாக குறிக்கோளை சென்றடைந்து வெற்றியாக திரும்புகிறது.

கடந்த பதினைந்து வருட காலமாக இந்த நேரத்தில் அன்பர்களின் தலையாய பிரச்சனைகளுக்காக, பூஜைகளும், பிரார்த்தனைகளும் நான் செய்து வருகிறேன். இந்த நேரத்தில் இறைவன் முன்னால் சமர்ப்பிக்கப்படும் எந்த கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதில்லை. அதுவும் அக்னிஹோத்ர ஹோமம் செய்து முறைப்படியான ஆகுதிகளை அர்ப்பணித்து வைக்கப்படும் கோரிக்கைகள் எழுதப்படாத சட்டங்களாக உடனே நிறைவேறி இருக்கின்றன. இதை இதுவரையிலும் ஒரு மிகச்சிறிய வட்டத்திற்குள் செய்து வந்த நான் இப்போது அதை சற்று விரிவாக செய்யலாம் என்று நினைக்கிறேன்.

தினசரி பலரை நான் சந்திக்கிறேன், மாதம் முழுவதும் நல்லவர்களும், கெட்டவர்களுமாக. சில நூறு பேர்களையாவது தனிப்பட்ட ரீதியில் சந்திக்க வேண்டியச்சூழல் ஏற்படுகிறது. அவர்களில் பலருக்கு இருக்கின்ற ஒரே பிரச்சனை பொருளாதாரச்சிக்கல். கோடீஸ்வரன் முதல் கோவணாண்டி வரையிலும் இந்த பணப்பிரச்சனை மனிதனை பாடாய்படுத்துகிறது. அவரவரின் தகுதிக்கு ஏற்ப பணத்தின் தேவை விரிவடைகிறது.

சிலருக்கு பணம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியவில்லை. சிலருக்கு மானத்தோடு வாழ முடியவில்லை. சிலருக்கு மனிதனாக நடமாட கூட முடியவில்லை. வேறு சிலர் கைநிறைய பணம் வைத்திருக்கிறார்கள். கார், பங்களா என்று வசதியோடு வாழ்கிறார்கள். ஆடம்பர வாழ்க்கையின் பளபளப்பு அவர்கள் முகத்தில் தெரிகிறது. ஆனாலும் அவர்களைச்சுற்றி கரையானின் புற்றைப்போல கடன் சுமை வளர்ந்து கிடக்கிறது. படுத்தால் உறக்கமில்லை. எப்போது நீதிமன்ற வாசல் தன்னை அழைக்குமோ என்று அச்சம் உறக்கத்தை துரத்துகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்கள், அரசுப்பதவியில் ஆட்சிசெய்பவர்கள், கலைத்துறையில் ஜாம்பவான்கள் இவர்கள் அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் பணத்தேவை இருந்துகொண்டே இருக்கிறது. அதிகப்படியான ஆசைக்கு பணம் வேண்டும் என்பது பேராசையாக இருந்தாலும் கூட அத்தியாவசிய தேவைக்கு பணம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதனால் தான் வள்ளுவனும் பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்றான்.

எனவே இந்த மார்கழி மாதத்து பூஜையை எனது அன்பர்களுக்காகவும், உஜிலாதேவியின் வாசகர்களுக்ககவும், அவர்களின் செல்வ வளம் மேம்பாடு அடைவதற்கும், பணக்கஷ்டம் தீருவதற்காகவும் நடத்தலாம் என்று தீர்மானித்து இந்த அறிக்கையை உங்களுக்கு தருகிறேன். எவ்வளவு பெரிய பணக்கஷ்டம் இருந்தாலும், கவலைப்படாதீர்கள். வரும் மார்கழி மாதத்து பூஜையில் செல்வத்தின் தலைவியாகிய திருமகளை மார்பினில் தாங்கிய ஸ்ரீமன் நாராயணன் கண்டிப்பாக தீர்த்து வைப்பான்.

பொருளாதாரச்சிக்கலை தீர்த்து, நல்ல பலனை உங்களுக்கு தரக்கூடிய இந்த பூஜையில் மகாலஷ்மி, குபேரர் இவர்களோடு சொர்ணாகர்ஷன பைரவரும் பூஜைக்குரிய தெய்வமாக இருப்பார். சாஸ்திரப்படியும், தாந்திரீக நெறிப்படியும் நடக்கப்போகும் பூஜையில், சித்தர்களின் மரபும் பின்பற்றப்படும். இதனால் ஒன்றுக்கு மூன்றாக பலன் இருக்கும் என்று நம்பலாம்.

மார்கழிமாதம் முதலாம் தேதி துவங்கி மாதம் முடியும் வரையிலும் தொடர்ந்து நடைபெறும் இந்த பூஜையில் ஒவ்வொரு நாளும் ஹோமங்களும் நடத்தப்படும். அதனால் இதற்கென்று ஆகும் செலவுகள் சற்று அதிகம். மூலிகை பொருட்கள் ஆகுதி பொருட்கள் விலை ஏறிவிட்டது தேங்காய் மற்றும் நெய்யின் விலை கூட கையில் பிடிக்க முடியாத உயரத்திற்கு சென்று விட்டது இதனால் ஒருநாள் பூஜைக்கான செலவு ஆறாயிரம் ரூபாய் வரை சென்றாலும் ஆச்சரிபடுவதற்கு இல்லை

 ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யாமல் பத்துருபாய் சம்பாதிப்பது நடக்கிற காரியமா? எனவேதான் இதற்கான செலவை சில அன்பர்கள் ஒரு பொருட்டாக கருதுவது இல்லை. இதுவரையிலும் அவர்கள் அதை தாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போதும் தாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் இருந்தாலும், உங்களுக்காகவும் இந்த பூஜை நடைபெறுகிறது என்பதனால் உங்களால் முடிந்த காணிக்கையை அனுப்ப வேண்டியது உங்கள் கடமையாகும். இங்கு கொடுப்பது நீங்கள் பெறுவதற்கே அன்றி வேறோன்றும் அல்ல.

உங்களால் முடிந்த காணிக்கையை அனுப்பி, உங்கள் பெயர், தாய் – தந்தை, பெயர், உங்கள் புகைப்படம் இவற்றோடு ஜாதகம் இருந்தால் அதன் நகலையும் இணைத்து பெயர் உள்ளிட்ட விவரங்களை தெளிவாக எழுதி தபாலில் அனுப்பி வையுங்கள். கண்டிப்பாக மின்னஞ்சலில் கொடுக்கும் தகவல்களை ஏற்க இயலாது. பூஜை முடிந்தவுடன் வரிசைப்படி பிரசாதமும், தன ஆகர்ஷன யந்திரமும் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த மார்கழி, தசமி திதியன்று பிறக்கிறது. அதாவது 2014டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி தமிழ் மாதம் பிறக்கிறது. எனவே அதற்கு முன்னால் உங்களது விபரங்களை அனுப்பினால் பூஜையில் சேர்த்துக்கொள்ள வசதியாக இருக்கும். ஒருவேளை நீங்கள் இந்த அறிக்கையை படிப்பதற்கு தாமதமாகி விட்டால் மார்கழி மாதம் 15 ஆம் தேதிக்குள் உங்கள் விபரங்களை கண்டிப்பாக அனுப்பிவிடுங்கள்.30.12.2014 க்கு பிறகு வருகின்ற எந்த கடிதத்தையும் இணைக்க முடியாது என்பதை மனதில் வையுங்கள்.

நீங்கள் எந்த மொழியை பேசுபவர்களாக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், இந்த பூஜையில் உங்கள் பிரச்சனை தீருவதற்காக கண்டிப்பாக கலந்து கொள்ளலாம். உங்களைப்பற்றிய ரகசியங்கள் மிக நிச்சயமாக பாதுகாக்கப்படும். எனவே தயக்கமின்றி இறையருளை பெறுவதற்கு விரைந்து வாருங்கள்.


 • மிக முக்கிய குறிப்பு :-


      இந்த  பூஜையில் பங்குபெற நினைக்கும் நேயர்கள் 30.12.2014 தேதி வரையில் தங்களை பற்றிய விபரங்களை அனுப்பலாம்.


 • தபால் முகவரி :-


குருஜி,
4/76 C காமராஜ் சாலை, 
அரகண்டநல்லூர்   - 605752,
திருக்கோவிலூர்  (தாலுக்கா),
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு.


 • மின்னஞ்சல் முகவரி :-


 • தொலைபேசி எண் :-
+91 - 8110088846 • காணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :-
காசோலை அல்லது டிடி Guruji என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும் 

 • வங்கி முகவரி :-
                NAME - Guruji

                A/C NO - 0106301000035874,

                LAKSHMI VILAS BANK,

                IFSC CODE - LAVB0000106,

                ARAKANDANALLUR.


இப்படிக்கு 

சதீஷ் குமார் 

Contact Form

Name

Email *

Message *