Store
  Store
  Store
  Store
  Store
  Store

மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் !
   குருஜி அவர்களை வணங்கி பணிகிறேன். என் மகளுக்கு இருபத்தி மூன்று வயதாகிறது. அவளுக்கு திருமணம் நடத்தி வைக்க விரும்புகிறோம். இதற்காக அவள் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் கொடுத்துப்பார்த்தோம். அவர் உங்கள் மகள் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருக்கிறது. எனவே இருபத்தி ஏழு வயதிற்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் இப்போது செய்தால் விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என்று கூறி விட்டார். அன்று முதல் எங்களுக்கு மனக்கவலையாக இருக்கிறது. அவர் கூறியது சரியா? காலதாமதம் செய்து தான் மகளின் கல்யாணத்தை நடத்த வேண்டுமா? அல்லது அப்படி எதுவும் இல்லையா? என்பதை தாங்கள் தயை கூர்ந்து கணித்து சொல்லவும்.

இப்படிக்கு,
மலர்க்கொடி ரங்கநாதன்.
ஸ்ரீரங்கம்.கிரஹங்களில் செவ்வாயை மாங்கல்யத்தின் அதிபதி என்று சொல்வார்கள். அத்தகைய செவ்வாய், பெண்ணின் ஜாதகத்தில் எட்டாவது இடத்தில் அமர்ந்தால் அந்த பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறது. தாமதித்தே திருமணம் நடத்த வேண்டும். மீறி நடத்தினால், கணவன் உயிருக்கு பிரச்சனை என்று கூறுவார்கள். ஆனால் எட்டாமிடத்தில் தோஷத்தோடு  இருக்கின்ற செவ்வாயை, குரு பார்த்தால் நிவர்த்தி ஆகிவிடும் என்ற சூத்திரமும் உள்ளது. என் அனுபவத்தை பொறுத்தவரை செவ்வாய் எட்டாமிடத்தில் அமர்ந்தாலோ அல்லது நீசம் பெற்றாலோ திருமணத்தை தாமதமாக்கி செய்வது தான் நல்லது என்று கருதுகிறேன்.

இப்படிப்பட்ட ஜாதகம் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமை தோறும் அல்லது சஷ்டி தோறும் முருக வழிபாட்டை விரதத்தோடு செய்ய வேண்டும். சற்று வசதி இருந்தால், தங்கத்தில் தாலி அணியாத அல்லது அணிய வசதி இல்லாத பெண்களுக்கு மாங்கல்யம் வாங்கி தானம் கொடுக்கலாம். மேலும் முருகனின் சன்னதியில் வயதான சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் வெற்றிலை பாக்குடன் தட்சணை கொடுத்து அவர்களையும் ஆலயத்திற்கு வெளியில் வணங்கினால் தோஷ நிவர்த்தி கண்டிப்பாக உண்டு.


Contact Form

Name

Email *

Message *