( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

திருமணம் ஏன் தடைபடுகிறது ?     ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம். எனது தங்கைக்கு திருமண வயது வந்து சில வருடங்கள் ஆகி விட்டன. பார்த்த வரன்கள் எதுவும் சரியானபடி அமையவில்லை. அவள் ஜாதகத்தில், தோஷங்களும் கிடையாது. பிறகு எதற்காக திருமணம் தள்ளிப்போகிறது என்று தெரியவில்லை. நீங்கள் தயவு செய்து திருமணம் முடிய நல்ல பரிகாரங்கள் எது இருந்தாலும் சொல்லவும். அதன்படி நடந்து உங்களின் ஆசியோடு நல்வாழ்க்கையை நடத்துகிறோம்.

இப்படிக்கு,
சாம்பசிவராஜா,
கனடா.
   தோஷம் இல்லாத ஜாதகமாக இருந்தாலும், லக்கினத்திற்கு இரண்டு, ஏழு மற்றும் எட்டு ஆகிய இடங்களில் சூரியன் இருந்தாலோ அல்லது ராகு, கேது எதுவோ ஒன்று எட்டில் இருந்தாலோ திருமணம் தாமதமாகும். ஆனால், கண்டிப்பாக திருமணம் நடக்கும். அதுவரையிலும் காத்திருக்க முடியுமா? எந்த குறையாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதற்கு இறைவன் ஒருவன் இருக்கிறான் அல்லவா?

அருகில் உள்ள துர்க்கையம்மன் ஆலயத்தில் பதினொரு வெள்ளிக்கிழமைகள் விளக்கேற்றி வழிபட வேண்டும். அதுவும் சாதாரணமாக அல்ல. பஞ்சுத் திரியை மஞ்சளில் நனைத்து காயவைத்துக்கொள்ள வேண்டும். தீபம் ஏற்றும் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூள் கலந்துகொள்ள வேண்டும். விளக்கு ஏற்றும் சாமியின் முன்னால், மஞ்சளை உருண்டையாக பிடித்து வைத்து அதன் மீது விளக்கு வைத்து துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.Next Post Next Post Home
 
Back to Top