( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கடன் படுபவர் ஜாதகம்    திப்புமிக்க குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். எனது இருபது வயதில் சம்பாதிக்க துவங்கினேன். எனது முதல் மூலதனமே கடன்வாங்கி தான் நடந்தது. அன்று முதல் இன்றுவரை கடன் என்பது உடன் பிறவா சகோதரனை போல் என்னை விட்டு அகல மாட்டேன் என்கிறது. எப்படியாவது கடன்களை அடைத்து விட வேண்டும். கடன்காரனாக வாழவே கூடாது என்று முடிவு செய்து கஷ்டப்பட்டு, சம்பாதித்து கடனை அடைக்க போனால் வேறு ஏதாவது ஒருவழியில் அந்த பணம் செலவாகி விடுகிறதே தவிர கடனை அடைக்க முடிவதில்லை. சாவு வருவதற்குள் ஒரு நாள் மட்டுமாவது கடனே இல்லை என்ற நிம்மதியோடு இருக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. அந்த ஆசை நிறைவேறுமா? கடன் அடையுமா? என்பதை தாங்கள் தயவு செய்து சொல்லவும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,
சுரேஷ்பாபு,
சென்னை.
    ம்மாவுக்கு நகை நட்டு வாங்கி கொடுக்கிறோம். மாடி, மனை வீடுகட்டி குடிவைத்து பார்த்து மகிழ்கிறோம். வண்ண வண்ண ஆடைகளை வாங்கி கொடுத்து அவரது காலடியில் வணங்கி மகிழ்கிறோம். இப்படி ஆயிரம் செய்தாலும், அவர் நமக்கு தனது இரத்தத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்தாரே! அந்த தாய் பாலுக்கு கடன் பட்டு இருக்கிறோமே, அந்த கடனை நம்மால் அடைக்க முடியுமா?

சம்பளம் வாங்கி கொண்டு உத்தியோகம் பார்த்தாலும், நீங்களும், நானும் அறிவை வளர்த்து நாலுபேர் மத்தியில் மனுஷனாக உலவ வேண்டும் என்பதற்காக கத்தி கத்தி பாடம் எடுத்தாரே நமது ஆசிரியர் அவருக்கும் நாம் பட்ட கடனை எப்படி அடைக்க முடியும்? எங்கோ பிறந்து, எப்படியோ வளர்ந்து ஒரு மஞ்சள் கயிறு கட்டிவிட்டோம் என்ற பாவத்திற்காக நமது வறுமையிலும், வயோதிகத்திலும் கூடவே இருந்து தொண்டு செய்கிறாளே நமது பாரியாள் அவளிடம் பட்ட கடனை தான் நம்மால் அடைக்க முடியுமா?

இப்படி தீர்க்கவே முடியாத கடன்கள் பல நமது வாழ்க்கையில் இருக்கிறது. ஒருவகையில் நாம் அனைவருமே கடன்காரர்கள் தான். இதற்காக ஐயோ நான் கடன்காரனாக இருக்கிறேனே என்று அழுது புலம்ப முடியுமா? நீதி கேட்டு போராடத்தான் முடியுமா? இயற்கை சீற்றத்திற்கு முன்னால், எதிர்த்து நிற்க முடியாமல் அமைதியாக ஏற்றுக்கொண்டு அடங்குவது தான் விதி என்பது போல, சில விஷயங்களை நமது வாழ்நாளில் சகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

யாரும் விரும்பி கடன்காரனாக மாறுவது இல்லை. இயற்கையும், விதியும் மனிதனை அந்த நிலையில் கொண்டு நிறுத்தி விடுகிறது. உலகிலேயே மிகப்பெரிய துயரம் கடன்காரனிடம் தவணை கேட்டு தலைகுனிந்து நிற்பது என்று எல்லோருக்கும் தெரியும், எனக்கும் புரியும். ஆனால் சிலர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த துயரத்திலிருந்து மீள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற சனிக்கு, நாலு – எட்டு - பனிரெண்டு ஆகிய இடங்களில் செவ்வாய் அல்லது கேது இருந்தால் கடன் தொல்லை அவரை விடாது துரத்திக்கொண்டே இருக்குமென்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனாலும், அந்த ஓட்டத்தை நிறுத்த, வாட்டத்தை போக்க மிகச்சிறிய ஆனால் மிகப்பெரிய பலனை தரும் மந்திரம் ஒன்று இருக்கிறது. அதை தொடர்ந்து உபாசனை செய்து வந்தால் கடன் சுமையிலிருந்து படிப்படியாக விடுபடலாம். என்னிடம் வாருங்கள். அந்த மந்திரத்தை உங்களுக்கு கற்றுத்தருகிறேன். கண்டிப்பாக பலன் இருக்கும்.


+ comments + 1 comments

மிகவும் அருமையான பதில். அதுவும் குருஜி போன்ற ஆன்மிகத்தை கடைபிடிக்கும் ஒரு நபரிடம் இருந்து இது போன்ற வாழ்கையின் நிதரிசனங்களை உள்ளடக்கி தரப்பட்ட பதில் மிக மிக அருமை.


Next Post Next Post Home
 
Back to Top