Store
  Store
  Store
  Store
  Store
  Store

கெட்ட கனவை தடுக்க பரிகாரம்
   குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் எனக்கு ஒருவருட காலமாகவே நல்ல உறக்கம் கிடையாது ஆழ்ந்த் உறக்கத்தில் செல்லும் போது ஏதாவது ஒரு கெட்ட கணவு வந்துவிடுகிறது தூக்கம் கலைந்து  விடுகிறது பிறகு உறங்குவதற்கு வெகுநேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது இதனால் அலுவலக வேலையை சரிவர செய்ய முடியவில்லை எப்போதும் உடல் சோர்வாக இருக்கிறது மருத்துவரை கேட்டால் மருந்துகள் தான் தருகிறார்களே தவிர சுகம் கிடைப்பதில்லை என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன் தயவு செய்து வழிகாட்டவும் 

இப்படிக்கு 
வீரபாண்டியன் 
தஞ்சாவூர் 


   தாறுமாறான கனவுகள் வருவதற்கு நரம்பு தளர்ச்சியை மருத்துவ சாஸ்திரம் ஒரு காரணமாக கூறினாலும் அமானுஷ்யமான காரணங்கள் பல இருப்பதாக மந்திர சாஸ்திரம் கூறுகிறது. மிக குறிப்பாக சொல்வது என்றால் நம்மை ஏக்கத்தோடோ கோபத்தோடோ கண்காணித்து கொண்டே ஒரு உயிர் அருகில் இருக்கிறது அதனால் உறக்கம் கெடுகிறது என்றும் கூறுகிறது 

மந்திர சாஸ்திரம் கூறுவதையும் தள்ளிவிட முடியாது வேறு சில காரணங்கள் இருப்பதையும் மருத்துவிடவும் முடியாது ஒன்று நீங்கள் வாழுகிற வீடு வாஸ்து குறைபாடு கொண்டதாக இருக்கலாம் அடுத்ததாக முற்றிலும் ஒவ்வாத எதோ ஒரு உணவை நீங்கள் தினசரி எடுத்து கொள்ளலாம் அல்லது நீங்கள் அடிக்கடி மயான பூமியில் நடப்பவறாகவோ அமருபவராகவோ இருக்கலாம் இவற்றில் எதுவென்று ஆராயாமல் கெட்ட கனவுக்கு காரணம் கூற இயலாது.

இருந்தாலும் இந்த காரணங்கள் ஒட்டுமொத்தமாக தீர்வதற்கு மிக சுலபமான ஒரு பரிகாரம் இருக்கிறது ஐந்து அமாவசை தினங்கள் அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு சென்று நூற்றி எட்டு எலுமிச்சை பழம் மாலை சாற்றி அம்பாளை வழிபடவும் முடிந்தால் அன்றைய இரவு அன்னையின் ஆலயத்திலேயே தங்கவும் இப்படி செய்தால் உடனடியான பலன் கிடைத்து கனவுகள் இல்லாத உறக்கம் வரும் 


Contact Form

Name

Email *

Message *