Store
  Store
  Store
  Store
  Store
  Store

பயத்தை நீக்கும் அம்மன் வழிபாடு




    குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். நான் தமிழ்நாடு காவல் துறையில் பணி செய்கிறேன். உண்மையை சொல்லப் போனால் இந்த துறையில் பணி செய்வதற்கான எந்த தகுதியும் எனக்கு இல்லை. காரணம் சிறிய வயதிலிருந்தே எதைக் கண்டாலும் எனக்கு பயம். குடிகாரர்கள் தெருவில் குடித்து விட்டு கலாட்டா செய்தால், வீட்டில் ஒளிந்து கொள்வேன். பக்கத்து தெருவில், யாரவது செத்துப் போனால் அந்த தெரு பக்கம் மாதக் கணக்கில் போகமாட்டேன். இப்படிப்பட்ட நான், வயிற்றுப்பாட்டுக்கு வேறு வழி தெரியாமல் காவல் துறையில் சேர்ந்து விட்டேன். இப்போது நான் மிகவும் அவதிப்படுகிறேன். கொலை செய்யப்பட்ட பிணங்களை பார்க்காமல், திருடர்களை சந்திக்காமல், இந்த வேலை செய்ய முடியாது. ஆனால் நான் நடுங்குவது யாருக்கும் தெரியாமல், மிகவும் கஷ்டப்படுகிறேன். வேலையை விட்டு போய்விடலாம் என்றால், வேறு வேலை கிடைக்குமா? என்று பயமாக இருக்கிறது. வேலை எதுவும் கிடைக்காமல், குடும்பத்தாரை கஷ்டப்படுத்தி விடுவேனோ? என்ற எண்ணத்தோடு தினம் தினம் தவிக்கிறேன். எனக்கு சரியான வழி காட்டுங்கள்.

இப்படிக்கு,
ராஜகுரு,
கன்னியாகுமரி.


    போலீசாக இருந்து விட்டு, பயந்தாங்கொள்ளியாக இருப்பது ஒன்றும் புதியதல்ல. உங்களைப் போன்று நிறைய பேர் அந்த துறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் வெளிப்படையாக உங்கள் குறைகளை ஒத்துக்கொள்கிறீர்கள். அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள்.

நீங்கள் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். போலீஸ் உத்தியோகம் பார்ப்பவர்கள், அனைவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் போலவோ, ராஜ ராஜ சோழன் போலவோ வீராதி வீரர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது மிகவும் தவறு. அவர்களும் நம்மைப் போன்று சாதாரண மனிதர்களே!

சாலையில், ஒரு கழகக் கும்பல் கல்வீசி தாக்குகிறது என்றால், அது போலீஸ்காரன் மேலே பட்டாலும் வலிக்கும், நம்மீது பட்டாலும் வலிக்கும். எனவே இரண்டு பேரும் கல்லைக் கண்டு ஒதுங்குவது தவிர்க்க முடியாத செயலாகும். எனவே நீங்கள் உங்கள் வருத்தத்தை மூட்டைக் கட்டி பரண் மீது வைத்து விட்டு ஆகவேண்டிய வேலையை கவனியுங்கள்.

நல்லவேளை நீங்கள் கன்னியாகுமரியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு பக்கத்தில் தான் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் இருக்கிறது. அங்கே ஐந்து வெள்ளிக் கிழமைகள் ராகுகாலத்தில் சென்று, பித்தளை அகல்விளக்கில் வேப்பெண்ணெய் ஊற்றி, ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபடுங்கள். உங்களால் செல்ல முடியவில்லை என்றால், உங்களுக்காக உங்கள் தாயாரையோ, மனைவியையோ சென்று தீபம் ஏற்றச் சொல்லுங்கள்.

இசக்கி அம்மன் அருளால் உங்களது பிரச்சனை மிக எளிதாக தீர்ந்து விடும். இந்த பரிகாரம் தவிர வேறு சில மந்திரப் பூர்வமான பரிகாரங்கள் இருக்கிறது. அதை செய்தால், கண்டிப்பாக பலன் கிடைக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை உங்களுகென்று தனியாக சொல்வது என்றால், பரிகாரங்களை விட அம்மன் வழிபாடே சிறந்த பலனை தரும்.




Contact Form

Name

Email *

Message *