Store
  Store
  Store
  Store
  Store
  Store

வீட்டில் கிளி வளர்க்கலாமா ?



   ன்புள்ள குருஜி அவர்களுக்கு வீட்டில் கிளி வளர்க்க கூடாது என்கிறார்களே அது ஏன்? வளர்த்தால் ஏதாவது தீய விளைவுகள் ஏற்படுமா?

இப்படிக்கு 
மாரியம்மாள் 
சிங்கப்பூர் 




   கூண்டில் அடைக்கப்பட்ட கிளி பல நேரங்களில் ஒற்றை காலில் கண்ணை மூடி கொண்டு நிற்கும் இப்படி ஒற்றை காலில் நிற்பது அபசகுனம் என்று சிலர் நம்புவதால் கிளி வளர்க்க கூடாது என்கிறார்கள். மற்றபடி கிளி வளர்ப்பதற்கு சாஸ்திரப்படி பெரிய தடைகள் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை 

விலங்கினங்களின் மீது அன்புகொண்ட பலர் சுதந்திரமாக பறந்து செல்லும் பறவைகளை கூடுகளில் அடைப்பது தவறு என்கிறார்கள் அதை முற்றிலுமாக நான் ஒத்து கொள்கிறேன் ஆனால் அதற்காக கூடுகளிலிருந்து தவறி விழுந்து அனாதையாக கிடக்கும் பறவை குஞ்சுகளை எடுத்து வந்து வளர்ப்பதில் தவறு இல்லை என்பது என் வாதம் 

சிறகுகள் முளைத்தபிறகு பறக்க விட்டுவிட வேண்டியது தானே என்று சிலர் கேட்கலாம் மனிதர்களிடம் வளர்ந்து பழக்கப்பட்ட உயிரனங்கள் அவ்வளவு சுலபமாக தன்னை பாதுகாத்து கொள்ள முடியாது எனவே அவைகளுக்கு உயிர் பாதுகாப்பு கொடுக்க நாம் வளர்க்கலாம் பாதுகாக்கலாம் சில பயிற்சிகள் கூட கொடுக்கலாம். 



Contact Form

Name

Email *

Message *