( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

என்ன சொல்வது? எப்படி சொல்வது?


ன்ன சொல்வது?
எப்படி சொல்வது?
எந்தன் கண்ணன்
எனக்குள் செய்த லீலையை
என்ன சொல்வது?
எப்படி சொல்வது?

அந்தி சாயும் நேரம்
ஆற்றங்கரை ஓரம்
கன்னத்திலே முத்தமிட்டான்
என் கண்களுக்குள் வட்டமிட்டான்
மூங்கில் குழல் ஊதி
என் ஆவியிலே பாதி
கைகளிலே அள்ளி கொண்டான்
என் கைகளிலே பள்ளி கொண்டான்
என்ன சொல்வது ?
எப்படி சொல்வது ?


ஆயர்பாடி தெருவில்
கோபி என்ற உருவில்
சேலை தொட்டு ஆடினான்
என் மூச்சை விழிகளால் மூடினான்
வெண்ணை திருடும் கண்ணன்
பெண்ணை திருடும் மன்னன்
மண்ணை தின்று நின்றான்
என் அசடு மனதை கொன்றான்
என்ன சொல்வது?
எப்படி சொல்வது?

மின்னல் ஊஞ்சல் கட்டி
மிதக்கும் சந்தன பெட்டி
என்னை ஜோடி சேர்த்தான்
எனை தொட்ட போது வியர்த்தான்
பார்த்தன் கேட்ட கீதை
பார்த்தேன் நல்ல பாதை
காதல் மாலை தந்தான்
என் ஆத்ம மலரை கொய்தான்
என்ன சொல்வது ?
எப்படி சொல்வது ?
Next Post Next Post Home
 
Back to Top