Store
  Store
  Store
  Store
  Store
  Store

திருமணத்தடையை நீக்கும் மந்திரம்
    ன்புள்ள குருஜி அவர்களுக்கு, உங்கள் பாதக் கமலங்களில் தலை சாய்த்து வணங்குகிறேன். விடியுமா? விடியாதா? என்று கேள்விக்குறியாக இருந்த என் வாழ்க்கைக்கு விடியலை தந்த உங்களுக்கு நன்றி சொல்லவே இந்த கடிதம் எழுதுகிறேன் என்றாலும், எனக்கு அடிப்படையான சந்தேகம் ஒன்று உண்டு. அதை தீர்த்துக் கொள்ளவும் இந்த கடிதம் எழுதுகிறேன்.

எனது பூர்வீகம் வேலூர் பக்கத்தில் உள்ள சிறிய கிராமம் என்றாலும், என் தந்தையார் வேலை நிமித்தமாக சென்னைக்கு வந்து நிரந்தரமாக தங்கி விட்டதனால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். எனக்கு இப்போது முப்பத்தாறு வயது முடிகிறது. இது வரையில் திருமணம் ஆகாமல் என் குடும்பத்திற்கு பெரிய பாரமாக இருந்தேன்.

வரதட்சணை சீதனம் கொடுப்பதற்கு வசதி இல்லை. அதனால் திருமணம் நடக்கவில்லை என்று கூற முடியாது. காரணம் எனது தகப்பனார் போதுமான அளவு சம்பாதித்து வைத்துள்ளார். அவர் சொத்துகள் அனைத்திற்கும் நான் மட்டுமே வாரிசு. பெண் அழகு இல்லை, படிப்பு இல்லை அதனால் திருமணம் நடக்கவில்லை என்றும் கூற முடியாது. பார்ப்பதற்கு ஒன்றும் நான் அவலட்சணம் ஆனவள் இல்லை. தமிழ் மொழியில் முதுகலை பட்டம் பெற்று ஆசிரியை வேலையையும் பார்க்கிறேன்.

ஆனாலும், எனக்கு இதுவரை திருமணம் ஆகாதது? ஏன் என்றே புரியவில்லை. ஜாதகத்திலும் பெரிய அளவு தோஷம் இல்லை என்று கூறினார்கள். நான் வாழுகிற வீடும் வாஸ்துப்படி நன்றாகவே இருக்கிறது. எனது முன்ஜென்மத்தின் கர்மா தான் என் வாழ்வில் சூறைக்காற்றாக வீசியது என்று கூறவேண்டும். வந்த வரன் எல்லாம் ஏனோ வெட்டிக் கொண்டு போனது. இருபது வயதில் வந்த வரன்களில் சிலவற்றை எனக்குப் பிடிக்காத காரணத்தினால் மறுத்திருக்கிறேன். அதன்பிறகு பெரிய அளவில் என வரனையும் நானாக மறுத்தது இல்லை. அவர்களாகத்தான் விலகி விடுவார்கள்.

இப்படிப்பட்ட என் தலையெழுத்து மாறவே மாறாது என்ற எண்ணம் உறுதிபட்ட பிறகு ஆன்மீக வழியில் வாழ்க்கையை திருப்பிக் கொண்டு வாழலாம் என்று நினைத்த போது தான் உங்களது இணையதளத்தை படிக்க நேரிட்டது. அதில் நீங்கள் தற்போது வெளியிட்ட அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை விவரம் என்னை கவர்ந்தது. எனக்கு பணம் தேவையில்லை என்றாலும், உங்களிடமிருந்து ஏதாவது ஒரு தீட்சை பெற வேண்டும் என்ற ஒரே ஆசையில் முதல் ஆளாக ஓடோடி வந்து தீட்சை பெற்றேன்.

தீட்சை பெற்ற அந்த நாள் முதல், அந்த மந்திரத்தின் மீது என் முழு மனதும் ஆழ்ந்து விட்டது என்று சொல்லலாம். உண்ணும் போது, உறங்கும் போது இயற்கை கடன்களை முடிக்கும் போது தவிர, மீதமுள்ள எல்லா நேரத்திலும் அந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தேன். இப்படி நான் இருப்பதை பார்த்து எனது தாயார் கூட உனக்கு பைத்தியம் பிடித்தாலும் பிடித்து விடும். மந்திரம் சொல்வதை குறைத்துக் கொள் என்றார்கள். நான் அதையெல்லாம் பொருட்படுத்த வில்லை.

என்ன ஆச்சரியம் பாருங்கள். மந்திரம் சொல்லி ஒரு மாதம் ஆன உடனேயே என் அப்பாவின் நண்பர் வழியாக வந்த ஒரு வரன் என்னை திருமணம் முடிக்க சம்மதித்து விட்டார். அவரும் வயது நாற்பத்தைந்தை கடந்தவர் தான். தனது சகோதரிகளுக்கு திருமணம் முடிந்த பிறகே தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியோடு இருந்தாராம். ஒற்றை சம்பாத்தியத்தில் நான்கு பெண்களை கரையேற்ற இத்தனை காலம் ஆகிவிட்டதாம்.

நான் ஒரு சாதாரண பெண். சராசரி மனிதர்களை போல சிறிய ஆசைகளுக்கு அடிமையானவள். இதுவரை ஏக்கத்தோடு காத்திருந்த இல்லற வாழ்க்கை இனி எனக்கு அமையப்போகிறது. உங்களது ஆசிர்வாதத்தால் நான் நல்லபடியாக வாழ வேண்டுமென்று மனதார என்னை வாழ்த்துங்கள் எனக்காக உங்கள் நாராயணனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

இப்போது நான் கேட்க நினைத்த கேள்வியை கேட்கிறேன். நீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை, பொருளாதார இடைஞ்சலை நீக்குவதற்காக தான் என்று எழுதி இருந்தீர்கள். எனக்கு இருந்ததோ ஜென்மாந்திர கர்மாவின் தொல்லை, முன்ஜென்ம பாவம் அவைகளை கூட இந்த மஹா மந்திர தீட்சை விலக்குமா? இதற்கு பதிலை தருமாறு அன்போடு வேண்டி நிற்கிறேன்.

இப்படிக்கு,
கல்பனா,
சென்னை.வியாழன் கிரகத்தை “குரு” என்று அழைப்பார்கள். அதற்கு காரணம் நமது புராணங்கள் மற்றும் சாஸ்திர நூல்கள் வியாழனை பிரகஸ்பதி என்றும், தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு இதுவே ஆசிரியராக இருக்கிறது என்று கூறுவதனால், ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் குரு என்ற பட்டம் வியாழனுக்கும் கொடுக்கப்படுகிறது. வியாழன் கிரகம் நமது பூமியை விட மிகப் பெரியது. சரியாக சொல்வது என்றால், நம்மை விட பதினாறு மடங்கு பெரியது வியாழன்.

உருவத்தில் பெரியது என்றாலும், இது தன்னைத் தானே சுற்றிக் கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பத்துமணி மட்டுமே. இதற்கே நமது பூமிக்கு இருபத்தி நாலுமணி நேரம் ஆகிறது. தன்னைச் சுற்றிக் கொள்வதில் வேகம் காட்டும். குரு, சூரியனை சுற்றிச் வருவதில் மிகவும் தாமதம் செய்கிறது. அதாவது மூவாயிரத்து  அறநூற்று ஐம்பது நாட்கள் அது சூரியனை சுற்ற எடுத்துக் கொள்கிறது இதன் காரணமாகவே வியாழன் கிரகத்திலிருந்து வெளிப்படுகின்ற ஈர்ப்பு ஆற்றல் மிகவும் சக்தி வாய்ந்ததாக பூமியை வந்து பூமியில் உள்ள உயிரினங்களை தொட்டு ஆற்றலை காட்டுகிறது.

பெரிய மந்தையில் உள்ள தாய் ஆட்டை, குட்டி ஆடு அடையாளம் தெரிந்து சேர்ந்து கொள்வது போல, மனிதனாகிய நம்மை நோக்கி வரும் பாவ புண்ணியங்களை வேகமாகவும், வலுவானதாகவும் நம்மிடம் அழைத்து வருகிறது. வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி அதனால் தான் வியாழனுக்கு ஜோதிட சாஸ்திரம் பூர்வ புண்ணியாதிபதி என்ற சிறப்பு பட்டத்தை கொடுக்கிறது. இந்த வியாழன் ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் நீசம் பெற்றுவிட்டால், அவர் ராஜாவாக இருந்தாலும் சென்ற ஜென்மத்தின் கர்மாவால் அழுத்தப்படுவார் நசுக்கப்படுவார்.

உங்களது ஜாதகமும் அப்படி இருந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே நீங்கள் துயரங்களை அனுபவித்திருக்க வேண்டும். நீங்கள் எடுத்துக் கொண்ட அமிர்ததாரா மஹாமந்திர தீட்சை எந்த வகையில் கர்மவலையில் இருந்து நீங்கள் தப்பிக்க உதவி இருக்கிறது என்றால், தெரிந்தோ தெரியாமலோ மிக அதிகமான நேரம் மந்திரத்தை உச்சாடனம் செய்திருக்கிறீர்கள். மந்திர அதிர்வானது பலமுறை உச்சரிக்கப்படுவதனால் அபரீதமான சக்தியை உடனடியாக பெறுகிறது.

இப்படி நீங்கள் சக்தியாக பெற்ற மந்திரம், கர்மாவை அழைத்து தரும் வியாழன் கிரகத்தின் எதிர்மறையான ஈர்ப்பாற்றலை முறைப்படுத்தி உங்களை தாக்காத வண்ணம் தடுத்திருக்க வேண்டும். அப்படி தடுத்ததனால் உங்களுக்கு அமையவேண்டிய இல்லற வாழ்க்கை இனிதே அமைந்து விட்டது. இனிமேலும் உங்களது இன்பம் தொடர வேண்டும் என்றால், கூடியமனவரை சொல்லாலும் செயலாலும், சிந்தனையாலும் நல்லதை மட்டுமே செய்யுங்கள். இறைவழிபாட்டை ஒருபோதும் கைவிடாதீர்கள். இறைவனது அனுக்கிரகமும், அருளும் இருந்தால் தான் மந்திரங்கள் கூட துணைசெய்யும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Contact Form

Name

Email *

Message *