Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜாதகப்படி மந்திரி பதவி யாருக்கு?



குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். என் ஜாதகத்தை, பார்த்த பலர் நீ வருங்காலத்தில், மந்திரியாகவோ அல்லது அதற்கு இணையான அதிகாரம் உள்ள பதவியில் இருப்பவனாகவோ வருவாய் என்கிறார்கள். அவர்கள் கூறுவதை பார்த்தால், எனக்கு சிரிப்பு வருகிறது. காரணம் என்னிடம் பணபலம், ஆள்பலம், சாதிபலம் எதுவும் கிடையாது. சுருக்கமாக சொல்வது என்றால், என்னை அடித்துப் போட்டால் கேட்பதற்கு யாரும் இல்லை. இதைவிட இன்னொரு விஷயம் எனக்கு அரசியலில் நாட்டமே இல்லை. தனியார் துணிக்கடை ஒன்றில் குமாஸ்தாவாக வேலை பார்கிறேன். இப்படி கூறும் ஜோதிடர்கள் அனைவரும் என்னை கிண்டல் செய்கிறார்களா? இல்லை உண்மையாகவே எனக்கு அப்படி ஒரு யோகம் இருக்கிறதா? என்று நீங்கள் பார்த்து சொல்லவும்.

இப்படிக்கு,
நிஜாமுதின்,
ஏர்வாடி.




திருக்குவளையிலிருந்து, சென்னைக்கு கலைஞர் புறப்பட்டு வந்த அதே நாளில், எத்தனையோ நபர்கள் அவருடன் வந்திருக்கலாம். அவரை விட இலக்கியத்தில் மேம்பட்டவர்கள், அரசியல் விற்பன்னர்கள், நிர்வாகத்தில் நிபுணர்கள் என்று பலர் இருந்திருக்கலாம். ஆனால், அவர்களில் எவரும் எட்டமுடியாத இடத்தை கலைஞர் பெற்றிருக்கிறார். அதற்கு காரணம் அவரிடம் இருந்த பண பலமா? படை பலமா? அல்லது நீங்கள் கூறுவது போல் பெருவாரியான எண்ணிக்கையுள்ள ஜாதியில் பிறந்தவரா? இவற்றில் எதுவுமே இல்லை.

கலைஞர் இல்லை என்று சொன்னாலும், எப்போதுமே இருக்க கூடிய இறைவனும், கிரகங்களின் பலன்களுமே அவரை உச்சியில் தூக்கி வைத்திருக்கிறது. ஆகவே ஒரு மனிதன் உயர்வான் அல்லது தாழ்வான் என்று உலக நடைமுறையை வைத்து கணக்குப் போடாதீர்கள். அது எப்போதுமே தப்பு கணக்காகத்தான் போயிருக்கிறது.

ஒரு ஜாதகத்தில், குருவோடு, சனியோ அல்லது சந்திரனோ அல்லது சுக்கிரனோ சேர்ந்து பலம் பெற்ற ராசியில் இருந்தால், அவர்கள் அரசர்கள் போல வாழ்வார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. உங்களது ஜாதகத்தில் உச்சம் பெற்ற குருவோடு சந்திரன் சேர்ந்துள்ளது அதனால் தான் நீங்கள் குறைந்தபட்சம் அமைச்சர் பதவியை அனுபவிப்பீர்கள் என்று ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

உங்களுக்கு அரசியலில் நாட்டம் இல்லாமல் போனால், அதில் ஒன்றும் குறையில்லை. தொழில் நாட்டம் என்பது நிறையவே இருக்கிறது. வருங்காலத்தில், பெரிய அறக்கட்டளையை  நிறுவி அதன் மூலம் தொண்டு செய்து, அரசரைப் போல் வாழலாம் அல்லவா? அரச வாழ்க்கை என்றவுடன், சுகபோகமான வாழ்க்கை என்று நினைத்துவிடாதீர்கள். முகமது நபி கூட அரசராகத்தான் வாழ்ந்தார். ஆனால், அவர் ஒருபோதும் அரண்மனை கொண்டாட்டங்களில், கலந்து கொண்டது இல்லை. தனது குடிசையிலேயே, வாழ்ந்தார். இப்படியும் அரசர்கள் வாழலாம்.




Contact Form

Name

Email *

Message *