Store
  Store
  Store
  Store
  Store
  Store

பிரிந்த குடும்பத்தை சேர்த்த மந்திர தீட்சை !ன்புள்ள குருஜி அவர்களுக்கு, உங்கள் பாதங்களை வணங்கி இந்த கடிதம் எழுதுகிறேன். நான் எனது அத்தை மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமணத்திற்கு இரண்டு வீட்டாரும், எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. என் தோழிகள் எல்லாம் நினைத்தவனையே பிரச்சனை ஏதும் இல்லாமல், திருமணம் செய்து கொண்டாயே நீ அதிர்ஷ்டசாலி என்று என்னை வாழ்த்தினார்கள். அதில் சிலர் பொறாமையும் பட்டார்கள்.

எங்கள் இருவரின் திருமண வாழ்வு இன்பகரமானதாகவே நடந்தது. எங்கள் தாம்பத்தியத்தின் அடையாளமாக இரண்டு குழந்தைகள் பிறந்து, மூன்றாவதாகவும் கருவுற்றேன். ஐந்து மாதம் கர்ப்பினியாக இருந்த போது, திடீரென்று ஒருநாள், என் கணவர் சொல்லாமல், கொள்ளாமல் எங்கோ போய்விட்டார். எல்லா இடங்களிலும், அவரை தேடினோம். எந்த தகவலும் கிடைக்கவில்லை அவர் இருக்கிறாரா? இல்லையா என்ற சந்தேகத்திலேயே மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தேன்.

குழந்தை பிறந்து இருபது நாளில், அவரை பற்றிய தகவல் வந்தது. அவர் தினசரி செல்லும் அலுவலகத்தில், வாடிக்கையாளராக வரும் ஒரு பெண்ணோடு தவறான முறையில் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஓடி போய் மும்பையில் வாழ்கிறார்கள் என்பதே அந்த தகவல். நான் இடிந்து போய்விட்டேன். அவள் எப்போதோ ஒருமுறை வரும் வாடிக்கையாளர் என்பதனால், அவளைப் பற்றிய எந்த விபரமும் அவரோடு பணியாற்றியவர்களுக்கு, தெரியாமல் போய்விட்டது. மேலும் தனது கள்ளக்காதலை, திறமையான முறையில் மூடி மறைத்ததனாலும், யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய முந்தையகால நடவடிக்கைகளும் சந்தேகப்படும்படி இல்லை என்பதனால், யாரும் அவரை தவறாக கணிக்கவில்லை.

மும்பையில் அவர்கள் இருக்கும் இடத்தை மிகவும் சிரமப்பட்டு கண்டுபிடித்து நானும், என் அண்ணனும் சென்று பார்த்தோம். எங்களை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளாத குறையாக நடந்து கொண்டார். அவரும், அவளும் என்னை பேசிய பேச்சுகளை கேட்டு என் அண்ணன் கொதிப்படைந்து அவரை அடிக்கவும் கை ஓங்கி விட்டார். நான் அண்ணனை சமாதானப்படுத்தி நான் அவருக்கு சரியான மனைவியாக நடந்து கொண்டேன். அவர் எனது, என் அன்பை புரிந்து கொள்ளாமல் தாறுமாறாக போய்விட்டார். இன்று இல்லை என்றாலும் நாளை சாக்கடைக்கும், சந்தனத்திற்கும் அவருக்கு வித்தியாசம் தெரியும். அதுவரை பொறுத்திருப்போம். நீ அவரை தொட்டு வீணாக அசிங்கப்படாதே என்று கூறி அழைத்து வந்தேன்.

என்னைப் பாதுகாக்க, என் குழந்தைகளை வளர்க்க, என் பிறந்தவீட்டிலும், புகுந்தவீட்டிலும் அனைவரும் தயார் என்றாலும், நான் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. என் சொந்தக் காலில் நின்று குழந்தைகளை வளர்க்க தீர்மானித்தேன். எங்கள் தெருவில் உள்ள தனியார் மழலைப் பள்ளி ஒன்றில், மிகக் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தினேன். ஆனாலும், என் மனதில் தைரியமும், துணிச்சலும் குறையவே இல்லை. கடவுள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையும் குறையவில்லை. என் காலம் மாறும் என்று காத்திருந்தேன்.

நான் நினைத்திருந்தால், நான் சரி என்று தலையசைத்திருந்தால், அவரை தூக்கி வந்து என்னிடம் சேர்த்திருப்பார்கள். அவரது கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டியிருப்பார்கள். ஆனால், அவரை நான் வலுக்கட்டாயப்படுத்த விரும்பவில்லை. கட்டாயாப்படுத்தி வாழ்வது இல்லறம் ஆகாது என்று, என் படிப்பும், நான் வளர்ந்த சூழலும் எனக்கு சொல்லியது. அவர் தவறு செய்து விட்டார். தான் செய்தது பெரிய தவறு, மன்னிக்க முடியாத குற்றம் என்பதை ஒருநாள் உணர்வார் அவர். என் மீது கொண்ட காதலும், அவர் மீது நான் வைத்திருக்கும் காதலும், ஒருநாள் அவர் இதயத்தை தட்டும், சாட்டையால் அடிக்கும் அப்போது அவர் திரும்பி வருவார் திருந்தி வாழ்வார் என்று நம்பினேன்.

அறிவு உறுதியாக இருந்தாலும், உணர்சிகள் அதைக் கேட்பது இல்லை. அவர் வருகிற காலம் விரைவாக இருக்க வேண்டும், என் அழுகையின் நேரம் நொடியில் மறைய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன், மன்றாடினேன். தினம், தினம் மண்டியிட்டு கதறி அழுது புலம்பினேன். பெற்றவர்களுக்கு புரியாத என் இதயம், கட்டியவர் உணராத என் உணர்ச்சி, கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்ற இதய பாரத்தில் ஆறுதலுக்காக காத்திருந்தேன்.

இந்த நிலையில் தான் தற்செயலாக உங்கள் இணையதளத்தை படிக்க ஆரம்பித்தேன். உங்கள் எழுத்துக்கள் எனக்கு நம்பிக்கை ஊட்டியது. உங்கள் வாழ்க்கை போராட்டம் எனக்கு துணிச்சல் தந்தது. கடவுளை நம்பி காத்திருக்கும் யாரும் கைவிடப்படுவதில்லை என்று உறுதியாக நம்ப துவங்கினேன். அப்போது தான் நீங்கள் அமிர்ததாரா மகா மந்திரத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டீர்கள். காசுதரும் மந்திரம் என்று நீங்கள் கொடுத்திருந்த அந்த தலைப்பு எனக்கு அந்நியமாக தேவையற்றதாக தெரிந்தாலும், ஒருமுறை படித்து பார் என்று தூண்டியது. அதில், நீங்கள் இந்த மந்திர தீட்சை பணத்தை மட்டுமல்ல, நீங்கள் விரும்பும் எதையும் உங்களுக்கு தேவைப்படும் எதையும் இது தருமென்று கூறியிருந்தீர்கள்.

இதுவரை நான் எந்த ஜோதிடரிடமும் சென்றதில்லை. எந்த சாமியாரையும் பார்த்து பரிகாரங்கள் செய்தது இல்லை. ஆனால், நீங்கள் பரிகாரங்களுக்கு முற்றிலும் மாறுபட்டு உன் பிரார்த்தனையின் சாவி உன் கையிலேயே இருக்கிறது என்று கூறியது. எனக்கு வித்தியாசமாகப்பட்டது. எனவே, உங்களை நாடுவது தவறல்ல என்று தீர்மானித்து எனது சூழல் காரணமாக தபால் வழியில் தான் தீட்சை எடுத்தேன். எனது வேண்டுதல் நிறைவேறும். என் கோரிக்கை இறைவனின் காதுகளில் விழும் என்ற நம்பிக்கையில் நீங்கள் கொடுத்த மந்திரத்தை முழு ஈடுபாட்டோடு ஜெபிக்கத் துவங்கினேன்.

நான் மந்திர தீட்சையை எடுத்து முழுமையாக இரண்டு மாதங்களாகி விட்டது. என்னால் என் கண்ணையே நம்ப முடியவில்லை. பத்து நாட்களுக்கு முன்னால், என் கணவர், என் வீட்டு வாசலில் வந்து நின்றார். அழுக்கான சட்டை, சவரம் செய்யபடாத முகம், எண்ணெய் பசையே இல்லாத தலைமுடி என்று ஏறக்குறைய ஒரு பிச்சைகாரனைப் போல வந்து நின்றார். அவரை போ என்று நான் சொல்லவில்லை. வார்த்தைகளால் வசவும் பாடவில்லை அவரது தோற்றம் அவர் அனுபவத்தை எனக்கு காட்டியது.

இவர் கள்ளத்தனமாக காதலித்து கூட்டிப்போன அருமை காதலி மும்பையில் வேறொரு மராட்டிய இளைஞனோடு தொடர்பு வைத்துக் கொண்டு இவரை துரத்தி விட்டாளாம். காதல் மோகத்தால், உரிமை கேட்கப்போன இவரை ஆள்வைத்து கொலை செய்யவும் துணிந்து விட்டாளாம். தலை பிழைத்தது தம்பிரான் புண்ணியமென்று கையில் பத்து பைசா இல்லாமல் பல லாரிகளில் மாறி மாறி சவாரி செய்து ஊருக்கு வந்து சேர்ந்தாராம். இனி அப்படி செய்யமாட்டேன் என்று அவர் எந்த உறுதியும் தரவில்லை. ஆனாலும், அவர் அனுபவம் அவரை எல்லை தாண்ட விடாது என்று நான் நம்புகிறேன்.

நான்கு வருடமாக என் வாழ்க்கை கதவு அடைபட்டு கிடந்தது. சாதாரணமாக அது கிடக்கவில்லை. இனி யாருமே திறந்து பார்க்க முடியாத அளவிற்கு துருபிடித்து கிடந்தது. தொட்டால் உதிர்ந்து விடும் பழைய வீடு போலதான் அது இருந்தது. ஆனால், நீங்கள் எனக்கு கொடுத்த மந்திர தீட்சை பாசிபடர்ந்த குளத்தை சுத்தப்படுத்துவது போல, இருட்டான வீட்டிற்குள் விளக்கேற்றி வைப்பது போல, எனது வாழ்க்கையை மாறுதலடைய செய்துவிட்டது. மாயாஜாலத்தில் நடப்பது போல, என் வாழ்க்கை சித்திரத்தை ஒரே நொடியில் மாற்றிவிட்டது அமிர்ந்ததாரா மஹா மந்திர தீட்சை.

குருஜி நீங்கள் எனக்கு குரு மட்டுமல்ல. எனது குலதெய்வமும் ஆவீர்கள். ஒரு அபலை பெண்ணின் வாழ்க்கையை சீர்படுதியது மட்டுமல்ல. மூன்று குழந்தைகளுக்கு, தகப்பனையும் திருப்பிக் கொடுத்திருக்கிறீர்கள். யார் எப்படி நம்புகிறார்களோ அது எனக்கு முக்கியமில்லை. என் வாழ்க்கை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது உங்களாலும் நீங்கள் கொடுத்த மந்திர தீட்சையாலும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னைப் போல, எத்தனையோ பேர்கள் திக்கு தெரியாமல் தவித்து கொண்டிருக்கலாம். அவர்களும் தனது படகு கரை சேர துடுப்பு ஒன்று இருக்கிறது. அதை குருஜியிடம் பெறலாம் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இந்த கடிதத்தை எழுதுகிறேன். மீண்டும் மீண்டும் குருஜியின் பாதங்களை நமஸ்காரம் செய்கிறேன். பக்தியோடு துடிக்கிறேன்.

இப்படிக்கு,
சரோஜினி சங்கர்,
கோவை.கோதரி சரோஜனி சங்கர், பல நலம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். அவர்களது நல்வாழ்விற்காக, இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

Contact Form

Name

Email *

Message *