Store
  Store
  Store
  Store
  Store
  Store

பூச நட்சத்திரம் மாமனுக்கு ஆகாதா ?ன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். குழந்தை பூச நட்சத்திரத்தில் பிறந்தால், தாய்மாமனுக்கு ஆகாது என்று கூறுகிறார்களே அது உண்மைதானா? தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

இப்படிக்கு,
உஷா நந்தினி,
சேலம்.
பூச நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் அனைவருமே தாய்மாமனுக்கு பாதகம் செய்வார்கள் என்று கூற முடியாது. அந்த நட்சத்திரத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது பாதத்தில் குழந்தை பிறந்தால் தாய்வழி பாட்டிக்கு ஆயுள் குறைவு என்றும் அல்லது தாய்மாமனுக்கு உயிர் கண்டம் ஏற்படும் என்றும் சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஆனால் ஒவ்வொரு மனிதனின் ஆயுள்காலத்தை கணக்கிடுவதில் அவனவன் ஜாதகம் முக்கிய பங்காற்றும். அடுத்ததாக சொந்த குழந்தைகளின் ஜாதகத்தின் தன்மையும் பாதிக்குமே தவிர சகோதரியின் குழந்தையின் ஜாதகமெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துவதோ அல்லது நல்ல பலனை தருவதோ மிகவும் குறைவு என்று தெளிவாக சொல்லலாம்.

Contact Form

Name

Email *

Message *