( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வண்ணங்களால் எண்ணங்கள் மாறுமா?
குருஜி அவர்களுக்கு, வணக்கம். நான் இரண்டு வருடங்களுக்கு முன்னால், உங்களை நேரில் சந்தித்திருக்கிறேன். அப்போது நீலநிறத்து ஆடையை நான் அணிந்திருப்பதை பார்த்து இந்த நிறத்தில் ஆடை அணியாதே அது உனக்கு சரிவராது. மஞ்சள் அல்லது வெண்மையில் ஆடை அணி என்று சொன்னீர்கள். நான் அதை பின்பற்றி வருகிறேன். அதற்கு முன்பு எனக்கிருந்த மனோநிலையும் நீங்கள் கூறியதை கடைபிடித்த பிறகு இன்று இருக்கும் மனோநிலையும் பெரிய வித்தியாசமாக இருப்பதை உணருகிறேன். எனது கேள்வி என்னவென்றால், ஆடைகளின் நிறத்திற்கும், நமது மனோநிலைக்கும் சம்மந்தம் இருக்கிறதா? என்பது தான். தயவு செய்து என்னை தவறாக எடுத்து கொள்ளாமல் விளக்கம் தரும்படி வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
முகமது இம்தியாஸ்,
அமெரிக்கா.ரம்பகாலத்தில், நிறத்திற்கும் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கப் போகிறது என்று உங்களைப் போலவே நானும் நினைத்தேன். அப்போதெல்லாம் நான் படுக்கும் அறையில் மெல்லிய வெளிச்சம் தரும் மஞ்சள் நிற விளக்கு எரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அந்த விளக்கு பழுதடைந்து விட்டதனால், சிவப்பு வண்ண விளக்கை அவசரத்திற்கு பொருத்தினார்கள்.

நானும் அதை பெரியதாக எடுக்கவில்லை. ஆனால், சில நாட்களில் என் மனநிலையில் சிறிய மாற்றங்களை கவனித்தேன். தேவையற்ற எண்ணங்களும், குழப்பங்களும் அதிகரிப்பது போல இருந்தது. அது என் இயற்கை சுபாவத்திற்கு மாறானது என்பதனால், உடனடியாக என்னால் கவனிக்க முடிந்தது. ஒருவேளை இரவு விளக்கின் நிற மாறுபாட்டால், இப்படி இருக்குமோ? என்று யோசித்து பழையபடி மஞ்சள் விளக்கை பொருத்தும்படி சொன்னேன். சில நாட்களில் இயல்பு நிலை வந்துவிட்டது.

அன்று முதல் வண்ணத்திற்கும், எண்ணத்திற்கும் எதோ ஒரு தொடர்பு இருப்பதை உணர ஆரம்பித்தேன். சில ஓவியர்கள் வண்ணக்கலவையில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களோடு தொடர்பு ஏற்பட்ட பிறகு நிறத்திற்கு உள்ள சக்தியை புரிந்து கொண்டேன். அன்று முதல் ஆடைகளிலும் வீடுகளிலும் வண்ணங்களை தேர்ந்தெடுப்பதில் சற்று கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதன் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

உதாரணமாக பச்சை நிறம் பரவசத்தையும், சிவப்பு நிறம் காம எண்ணத்தையும், கருப்பு நிறம் மனச்சோர்வையும், வெள்ளைநிறம் தூய்மையையும், நீல நிறம் அமைதியையும், மஞ்சள் நிறம் சாத்வீக எண்ணங்களையும், ஆரஞ்சு நிறம் தைரியத்தையும், சாம்பல் நிறம் மனகலக்கத்தையும், காவி நிறம் வைராக்கியத்தையும் தருவதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன். அதன் அடிப்படையில் தான் உங்களை ஆடைகளின் வண்ணங்களை மாற்றச் சொல்லியிருப்பேன்.


Next Post Next Post Home
 
Back to Top