( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மனைவியின் நோய் தீர்க்கும் அம்மன் !ன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். எனக்கு திருமணம் முடிந்த நாள்முதலாக, என் மனைவியின் உடல்நிலை தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. திருமணத்திற்கு முன்பே என் மனைவிக்கு நோய்கள் எதுவும் இருந்ததா என்றால் நிச்சயம் இல்லை என்று என்னால் உறுதி கூறமுடியும். காரணம் நானும், அவளும் சுமார் எட்டு ஆண்டுகள் காதலித்த பிறகே திருமணம் செய்து கொண்டோம். அவள் உடல் நோயால் துன்பப்படுவது எனக்கு ஆறாத துயரமாக இருக்கிறது. அவள் நோயிலிருந்து முற்றிலும் விடுபட, ஏதாவது பரிகாரங்கள் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள். நான் என்றும் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டவனாக இருப்பேன்.

இப்படிக்கு,
ரவிகுமார்,
வந்தவாசி.
ரு மனிதனுடைய ஜாதகத்தில், களத்திரஸ்தானமான ஏழாவது வீட்டில் பாவகிரகங்கள் அமர்ந்திருந்தால், அவனுடைய மனைவி பூரண ஆரோக்கியம் உடையவளாக இருந்தால் கூட, நோய்வாய் படுவாள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதே போல, உயிராகிய ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாவது இடத்தில் சூரியனும், ராகுவும் கூட்டு சேர்ந்திருந்தால், மனைவி பிணி வசப்படுவாள்.

மேலும் சாதகனின் இரண்டாவது வீட்டை பாவகிரகங்கள் பார்த்தால் கூட, மனைவிக்கு ஆரோக்கிய தோஷம் ஏற்படும். இவைகள் பொதுவான விதிகள் என்றாலும், பல ஜாதகர்களுக்கு தட்டாமல், தவறாமல் இந்த பலன்கள் நடந்து வருவதை எனது அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

இப்படிப்பட்ட ஜாதகம் அமைந்துவிட்டது. எந்த பெண்ணை திருமணம் செய்தாலும் அவள் நோயாளியாகத்தான் மாறிவிடுவாள். எனவே திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம் என்று எத்தனை பெயரால் பிரம்மச்சாரியாக வாழ முடியும்? அப்படி வாழ வேண்டிய அவசியம் தான் என்ன? கிரகநிலை என்பது விதிக்கப்பட்ட விதி. அதாவது மழைக்காலத்தில் வருகின்ற மழை  போல அதை தவிர்க்க முடியாது. ஆனால் பரிகாரம் என்ற கூரைகளும், குடைகளும் இருக்கிறது எனவே கலங்கவேண்டிய அவசியம் இல்லை.

இந்த கேள்வியை கேட்ட நபரும் இதே போன்று ஜாதகம் அமைந்த மற்றவர்களும் மனைவியை அழைத்து கொண்டு கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை பகவதியம்மன் ஆலயத்திற்கு சென்று, அம்மனின் ஸ்தலவிருட்சத்திலிருந்து குங்கும பிரசாதம் பெற்று ஆலயத்திற்கு சென்ற நாள் முதல் ஒரு மண்டலகாலம் நெற்றியில் திலகமாக கணவன் - மனைவி அணிந்து வரவேண்டும். அந்த நேரத்தில் தாம்பத்திய உறவு இல்லாமல் தள்ளி இருந்து விரதம் அனுஷ்டிப்பது மிகவும் அவசியம். அப்படி செய்தால் அம்மையின் அருளால், நோய்கள் விலகி சுகம் ஏற்படும். குடும்பம் தழைத்தோங்கும்.


Next Post Next Post Home
 
Back to Top