Store
  Store
  Store
  Store
  Store
  Store

சகஸ்ரநாமம் சொல்ல முடியாவிட்டால் ?




    ஸ்ரீ குருஜி அவர்களின் பாதங்களுக்கு, நமஸ்காரம். நான் தினசரி விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல பிரியப்படுகிறேன். ஆனால், என் வேலையின் காரணமாக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதற்கு ஏதாவது உபாயம் சொல்ல வேண்டுகிறேன்.


இப்படிக்கு,
லஷ்மி நரசிம்மன்,
ஜெர்மன்.




கவான் விஷ்ணு, கிருஷ்ண அவதாரத்தில் முழுமையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். எனவே முழுமுதற் கடவுளை மட்டுமே வணங்க வேண்டுமென்றால், ஸ்ரீ கிருஷ்ணனின் திவ்ய சொரூபத்தை வணங்கினாலே போதும். அதே போல, ஸ்ரீ ராம அவதாரத்தில், ஸ்ரீ ராமா என்ற இரண்டு எழுத்தில் பகவான் விஷ்ணு தன்னை முழுமையாக வெளிப்படுத்தி மந்திர சொரூபனாக நிற்கிறான்.

இதனால் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல முடியாவிட்டாலும், ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராம மனோரமே சகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே என்ற ராம மந்திரத்தை குறைந்த பட்சம் மூன்று முறையாவது சொன்னால் சகஸ்ரநாமம் முழுமைக்கும் சொன்னதாக அர்த்தமென்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

சாதாரண பக்தனை பாகவதனாக மாற்றி, பகவானின் பாதங்களில் சேர்ப்பது ஸ்ரீ மத்  பாகவதமாகும். பாகவதம் என்றால், இந்த இடத்தில் கிருஷ்ண சரித்திர புத்தகத்தை சொல்லவில்லை. பக்தி என்பதையும், பக்தியை இரட்டிப்பாக்கும் மற்ற காரணிகளுமே பாகவதம் குறிப்பிடுவதாக ஸ்ரீ வைஷ்ணவம் சொல்கிறது. எனவே ராம நாமமே சகஸ்ர நாம பலனை நல்ல பாகவதனுக்கு தரும்.




Contact Form

Name

Email *

Message *