நான் இரண்டு வருடமாக வேலையில்லாமல் அவதிப்பட்டேன். குருஜியிடம், அமிர்ததாரா மந்திர தீட்சை பெற்றுக்கொண்ட இரண்டாவது மாதத்தில் நல்ல வேலை கிடைத்துள்ளது. குருஜி அவர்களுக்கு என் பணிவான நன்றி கலந்த வணக்கம்.
கணேசன்,
காரைக்கால்.
நான் வளைகுடா நாட்டில், வேலைக்காக வந்தேன். வந்த இடத்தில், சரியான வேலை இல்லாமல் அவதிப்பட்டேன். இந்த வேளையில், அமிர்த தாரா மந்திர தீட்சையை, தபால் வழியில் குருஜியிடம் பெற்றேன். இப்போது நல்ல வேலை எனக்கு அமைந்துள்ளது. குருஜி அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றி.
ராபர்ட்,
குவைத்.
நான் வேலை செய்துவரும் நிறுவனத்தில், தகுதி இருந்தும் பதவி உயர்வு எனக்கு தராமல், இழுத்தடித்தார்கள். குருஜியிடம், மந்திர தீட்சை பெற்ற, சில நாட்களிலேயே மேலதிகாரிகள், என் பதவி உயர்வுக்கு உத்திரவாதம் அளித்துள்ளார்கள். இறைவனுக்கும் குருஜிக்கும் நன்றிகள்.
இம்ரான்கான்,
பெங்களூர் .
எனது அதிகாரி ஒருவர் என் மீது தேவையில்லாமல் கோபம் கொண்டு, என் வேலைகள் பலவற்றிற்கு இடைஞ்சல் கொடுத்து வந்தார். அவரால் எனக்கு கிடைக்க வேண்டிய பல நன்மைகள் கிடைக்காமல் தள்ளிப்போனது. மந்திர தீட்சை இதற்காகவே பெற்றேன். இப்போது என் அதிகாரி பழைய கடுகடுப்பை மறந்து, கனிவோடு பேசுகிறார். அவரை மனம் மாற வைத்த குருஜிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.
ரமேஷ்,
சென்னை.
எனக்கு அலுவலகத்திலும், வீட்டிலும், பல பிரச்சனைகள் இருந்தன. இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, உடல் உபாதைகள் பல வந்துவிட்டன. குருஜியின் மந்திர தீட்சையை பற்றிய விபரம் அறிந்து தீட்சை பெற்றேன். என் மன அழுத்தம் இப்போது குறைந்திருக்கிறது. நிச்சயம் என் சிக்கல்கள் விலகும் என்ற நம்பிக்கையும் பிறந்திருக்கிறது.
நந்தினி,
கோவை.
என் பணியில் பதவி உயர்வு கிடைப்பதற்கு ஒரு பரிட்சை எழுத வேண்டும். பலமுறை நான் முயற்சித்தும் பரிட்சையில் தோற்றுவிட்டேன். காரணம், படித்தது எதுவும் உரிய நேரத்தில் நினைவுக்கு வருவதில்லை. சரியான படி படிக்கவும் முடிந்ததில்லை. குருஜியிடம் தீட்சை பெற்றபிறகு படிப்பும், நினைவாற்றலும் வளர்ந்திருக்கிறது. கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். குருஜியின் ஆசிர்வாதம் அதற்கு தேவை.
யாழினி,
திருச்சி.
என்னை அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அனைவருமே நாய் என்றுதான் மறைமுகமாக பேசுவார்கள். அந்தளவிற்கு எனக்கு கோபம் வரும். யாரை பார்த்தாலும் எரிச்சலும், படபடப்பும் வருவதனால் கோபத்தோடு திட்டிவிடுவேன். இதனால் எனக்கு எதிரிகள் பலர். இப்போது அதாவது மந்திர தீட்சைக்கு பிறகு, என் பணியில் கவனம் செலுத்த முடிகிறது. கோபமும் குறைந்திருக்கிறது. குருஜிக்கு நன்றி.
அபர்ணா,
திருவனந்தபுரம்.
குருஜியிடம் மந்திர தீட்சை எடுத்தவுடன், இதுவரை தள்ளி போய்க்கொண்டே இருந்த ஜப்பான் பயணம் இப்போது கைகூடி இருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில், ஐந்து வருடம் ஜப்பானில் வேலை செய்ய போகிறேன். என் வாழ்க்கையில் தீபம் ஏற்றி வைத்த குருஜி அவர்களின் பாதங்களுக்கு என் வணக்கங்கள்.
லஷ்மி,
நாகர்கோவில்.
அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை பெற்று அதனால் பலன் அடைந்த பலர் இதே போன்ற கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது ஊர் பெயரையும், தன் பெயரையும் சரிவர குறிப்பிடாததனால் அவர்கள் கடிதங்களை இங்கு பிரசுரிக்க இயலவில்லை. எனவே அமிர்த தாரா தீட்சையில் பயன் அடைந்தவர்கள் மற்றும் மந்திர தீட்சையின் மூலம் அனுபவங்களை பெற்றவர்கள் அனைவரும் தங்களை பற்றிய தெளிவான விபரத்தோடு கடிதங்களை அனுப்புமாறு வேண்டுகிறோம்.
+ comments + 3 comments
நமஸ்காரம் குருஜி,
என் பெயர் சவிதா. எனக்கு கல்யாணம் ஆனா வீட்டில் என் நாத்தனார் இருவர் ஊமை.என் கொழுந்தனார் குழந்தைகள் இருவரும் ஊமை.(15 வயது பெண் & 13 வயது ஆண் )என் வீட்டுக்காரர் ப்ரோஹிதர்.நாங்களும் எங்களால் ஆனா எல்லா பரிகாரமும் செய்கிறோம்.அந்த குழந்தைகள் பேச வேண்டும்.ஏற்கனவே தங்களிடம் போன் மூலம் எல்லாம் சொல்லி உள்ளேன்.தயவு செய்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று குருஜி சொல்ல வேண்டும். பாரத்வாஜ கோத்திரம்,அவர் பெயர் வீ.கிருஷ்ணமூர்த்தி, 18.04.1965 அனுஷ நக்ஷத்ரம்.குருஜி கடந்த 6 வருடங்களாக தங்களிடம் பேச வேண்டும் என்றும் தங்களிடம் எங்கள் குறைகள் அனைத்தையும் கூற வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் முடியவேயில்லை.குருஜி ஒரு பிராமணன் எப்படி வாழ வேண்டும் என்று இருக்கிறதோ , அப்படிதான் இருக்கிறோம்.குருஜி எங்களுக்கு உதவுங்கள் குருஜி.
நமஸ்காரம் குருஜி
கே.சவிதா

Ithuellaam unmayaa?