Store
  Store
  Store
  Store
  Store
  Store

வழுக்கை தலை மாற பரிகாரம் !




குருஜிக்கு பணிவான வணக்கம். என் மகனுக்கு இருபது வயது முடிகிறது. ஆனால், அவனுக்கு இந்த வயதிலேயே தலையில் முடி கொட்டி வழுக்கை தலைபோல் மாறி வருகிறது. இதனால், அவன் மிகவும் கஷ்டப்படுகிறான். வெளியில் செல்வதற்கும், கல்லூரிக்கு சென்று படிப்பதற்கும், நண்பர்களோடு சகஜமாக உரையாடுவதற்கும் கூச்சப்படுகிறான். பெட்டி பாம்பு போல வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறான். அவனை பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. யார் என்ன வைத்தியம் சொன்னாலும், செய்து பார்க்கிறோம் ஒன்றும் பயனில்லை. ஜோதிட வழியில் இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? தயவு செய்து கூறுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
வளர்மதி,
மதுரை.



நியாயப்படி ஒரு மனிதன் மண்டைக்குள் இருக்க வேண்டியதை பற்றி நினைக்க வேண்டுமே தவிர, மண்டைக்கு வெளியே இருப்பதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், இந்த உலகம் ஒரு மனிதனை அகத்தை பார்த்து கணிப்பதை விட புறத்தை பார்த்து கணிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. தத்து பித்து என்று உளறிக் கொட்டினாலும் பார்ப்பதற்கு சற்று இலட்சணமாக இருந்தால், அவனையே சிறந்த மனிதன் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

வழுக்கை தலையுடையவர்களை உலகம் இரசிக்கவில்லை என்பதற்காக தலையை வெட்டிக்கொள்ளவா முடியும்? இருக்கும் குறையை மறந்து பலரிடம் இல்லாத திறமைகளை நாம் வளர்த்து கொள்வது தான் வாழும் கலை. இந்த கலையை கற்றுக் கொண்டால் யாருடைய கேலியும், கிண்டலும் நம்மை ஒன்றும் செய்யாது.

பொதுவாக மிதுன ராசியில் சூரியனும், புதனும் சேர்ந்திருந்தால் வழுக்கை தலை ஏற்படும் என்பது விதி. உங்கள் மகனுக்கும் அப்படி கிரகம் இருக்கிறது. இதில் கவலைப்படக்கூடியது என்னவென்றால் இத்தனை இளம் வயதில் வழுக்கை  வந்திருக்க வேண்டாம். அவன் கருவில் இருக்கும் போது நீங்கள் பயன்படுத்திய சில மருந்துகளின் வேகம் குழந்தைக்கு சில ஹார்மோன் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்க வேண்டுமென்று ஜாதகம் காட்டுகிறது. எனவே வழுக்கையை நிவர்த்தி செய்வது மிகவும் கடினம்.

இருந்தாலும், இறைவனது மனம் விரும்பினால் எந்த விதியும் நொடியில் மாறிவிடும். எனவே நீங்கள் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் நரசிம்மரை வணங்கி ஒருபொழுது மட்டுமே உண்டு விரதம் இருக்க சொல்லுங்கள். முடிந்தால் அருகில் உள்ள நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று, சனிக்கிழமை தோறும் வழிபடச்சொல்லுங்கள் ரோமக்கால்கள் வலுப்பெற்று இனி மேலும் வழுக்கை வளராமல் தடுக்கலாம்.





Contact Form

Name

Email *

Message *