Store
  Store
  Store
  Store
  Store
  Store

மாமனாருக்கு மருமகன் திதி செய்யலாமா...?ணக்கத்திற்குரிய குருஜி அவர்களுக்கு, நமஸ்காரம். நான் என் தகப்பனாருக்கு ஒரே பெண். வேறு குழந்தைகள் கிடையாது. என் தகப்பனாரின் சகோதரர்களுக்கும் ஆண் குழந்தை கிடையாது. இந்த நிலையில் என் தந்தையார் காலமானவுடன், அவருக்கான இறுதி காரியத்தை என் கணவர் செய்தார். வருடாந்திர கர்மாவையும் இவரே செய்து வருகிறார். இது சாஸ்திரப்படி குற்றமென்று சிலர் கூறுகிறார்கள். என் மகன் தான் தர்மகாரியம் செய்யவேண்டும் என்றும் சொல்கிறார்கள். அவனை அதில் ஈடுபடுத்துவதற்கு என் மனது ஒப்பவில்லை இருந்தாலும், மனது சங்கடமாக இருக்கிறது. எனவே குருஜி அவர்கள் இது சம்மந்தமான விளக்கத்தை தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
காவ்யா,
சென்னை.


னது பெண்ணை, ஒரு தக்க மணமகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு ஹிந்து சம்பிரதாயம் கன்னிகாதானம் என்று அழகான பெயரை பொருத்தமாக வைத்திருக்கிறது. கன்னிகாதானம் நடத்தப்படும் போது, அவைகளுக்கு ஏற்ற பல மந்திரங்கள் உண்டு. அவற்றில் மிக முக்கியமானது அபராத்ருகாம் ப்ராதாஸ்யாமி. ஸமே புத்ரோபவே திதி என்பது ஆகும். அதாவது எனக்கு ஆண்குழந்தை இல்லை. என் மகளுக்கு பிறக்கும் ஆண்குழந்தை எனக்கு என் சொந்த புத்திரன். சாஸ்திரப்படி செய்யவேண்டிய அனைத்து கிரிகைகளையும் செய்யவேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

அதாவது மகன் இல்லை என்றால், பெண் வழி பேரன் பாட்டனாரின் கர்மாக்களை செய்யவேண்டும் என்பதே சாஸ்திரத்தின் விதி ஆகும். இதை மாற்றுவதற்கு அதிகாரம் நமக்கு இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றால், என் மாமனாரும் நன்றாக இருக்கிறார். என் புருஷனும் ஷேமமாக இருக்கிறார். இந்த நிலையில் என் மகன் சின்ன குழந்தை முதல் முறையாக செய்யும் சடங்கு அபசடங்காக இருக்கிறதே! அதை பார்ப்பதற்கு எனக்கு பிடிக்கவில்லை என்பது தான் இந்த கேள்வியின் ஆழ்ந்த மனதின் வெளிப்பாடு.

நமக்கு பிடிக்கவில்லை, ஒத்துவரவில்லை. மனதிற்கு இசைந்தார் போல் இல்லை. நாம் நினைத்த நேரத்தில் செய்ய முடியாது என்பதற்காக தர்மசாஸ்திர விதிகளை மாற்றி அமைக்க நினைப்பது இயற்கையின் போக்கையே மாற்றுவதற்கு சமமாகும். எனவே சில நேரங்களில் நமது சொந்த அபிலாஷைகளை விட்டுவிட்டு, பொதுவான நோக்கத்தோடு இருப்பது நலம் என்று நினைக்கிறேன்.


Contact Form

Name

Email *

Message *